உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணை12

தண்ணீர் திறந்து விடப்பட்டது (பே. வ.). 6. பாலம். அலை கடல்தலை அன்று அணை வேண்டிய (கம் பரா. 1, 1, 9). பொருப்பெடுத்து அணையாகச் சமுத்திரத்தினைக் குறுக்கு அடைத்து (திருப்பு. 65). சிந்து வாரம் அணைகட்டி மலையெடுத்தான் துவள வீழ்த்தி (திருமயிலைப்பிள். 3, 3).

...

அணைü பெ. புணர்ச்சி. விடயம் அணை (பிங்.

3052).

13

...

அணை பெ. இரட்டை (இரண்டு). ஒருதடி நிலமும் ஓரணை ஏரும் (நாஞ். மரு. மான். 1,24).

அணை 14 பெ. உதவி. அணை யின்றி உயர்ந்த வென்றி (கம்பரா. 6, 15, 159).

அணை15

பெ.

1. பஞ்சணை, மெத்தை. பயங்கெழு துணையணை (தொல். பொ. 144, 31 இளம்.). அணை மெல்லியல் யான் முயங்குங்காலே (குறுந். 70 UIT. பே.). 2. படுக்கை. விரிமென் கூந்தல் மெல்லணை வதிந்து (பதிற்றுப். 50, 19). தோள்வைத்து அணை மேற் கிடந்து (நாலடி. 394). பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும் (தேவா. 5, 68, 9). கறைப் பாம்பு அணைப் பள்ளியான் (திருவரங். கலம். 4, 3). மருவிரித்த தெய்வமலரணையை (மதுரைச். உலா 46). அரவணைதனில் அரவணைதனில் விழி வளர் வோன் (குசே.23). ஆயிரம் பணாமுடி அரவணை மீதே (நாஞ். மரு. மான். விநாயக. 16). 3. இருக்கை. தண்ணிதிப் பலகைச் சந்தனச் சார்வணை (பெருங். 2, 18, 41). GOT MIT HI அணையிருந்தான் கோ (பாரதவெண். அரியணை அனுமன் தாங்க (கம்பரா. 6,38,38). தாழ்ந்திட அமைத்த அணை (சிலையெழு. 36). ஆதிமடங்கல் அணை நான்கும் (ஆனந்த. வண்டு.17). 4. தலையணை. அணைமிசை அசைந்த அம்மென்சிறுபுறம் (பெருங்.1,56,136 உ.வே.சா. அடிக்குறிப்பு ). முருட்டு அணைப் பாயல் (ஞானா. 13,14).

156).

அணை18 இ. சொ.

உவம உருபு. கல்லணை மனத் தினையடைக் கைகேயி (கம்பரா. 4, 10,108).

அணைக்கட்டி 4. பெ. சேறு அடிக்கும்போது பெயரும் கட்டி. அணைக்கட்டியைத் தட்டிவிட்டால் வயல் சமமாக இருக்கும் (பே.வ.).

அணைக்கட்டிப்பேசு - தல் 5 வி. குற்றத்தை மறைத்துப் பேசுதல், தழுவிப்பேசுதல். நீ என்ன அவனுக்கு அணைக்கட்டிப் பேசுகிறாய் (தஞ். வ.).

அணைக்கட்டிப்போடு-தல் 6 வி. படைச்சாலில்பெயர்ந்த கட்டிகளை உடைத்து நிரவுதல். (பே.வ.)

17.

3

அணைப்பு*

அணைக்கட்டு பெ. 1. ஆற்றின் குறுக்கே தடுத்து அமைக்கும் நீர்த்தேக்கம். வைகை அணைக்கட்டில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது (செய்தி. வ.). 2. செய்கரை. (செ. ப. அக.)

அணைக்கல்

பெ.

அணையிலுள்ளகுத்துக்கல். (வரு

வாய்த்துறை. க. சொ.)

காவற்காரன்.

அணைக்காரன் பெ. அணைக்கட்டின்

(செ. ப. அக.)

அணைகட-த்தல் 11 வி. அன்பு கோபம் மகிழ்ச்சியில் எல்லை கடந்து பேசுதல்/செயற்படுதல். அணை கடந்த அன்பு/கோபம் (பே.வ.).

அணைகயிறு பெ. மாடு உதைக்காமல் இருப்பதற்குப் பால் கறப்பவர் அதன் பின்கால் இரண்டையும் கட்டும் பருமனான நூல் கயிறு. (நாட். வ.)

அணைகல் பெ. கத்தி அரிவாள் தீட்டும் கருவி. (நாட். வ.)

போன்றவற்றைத்

அணைகோலு-தல் 5 வி. நீர்ப்பெருக்கத்தைத் தடுக்க அடைப்புப் போடுதல். வெள்ளம் வருவதற்கு முன் னர் அணைகோலி வையார் (நன்னெறி 30).

அணைச்சேலை பெ. தூளிச்சேலை. (ரா. வட். அக.)

அணைசு பெ. 1. வங்கியத்தின் முகத்திலமைப்பது. வெண்கலத்தால் அணைசுபண்ணி இடமுகத்தை அடைத்து (சிலப். 3, 26 அடியார்க்.).

2. நாதசுர இசைக்கருவியின் அடிப்புறம் குழலில் ஓசையைப் பெருக்குவதற்காகச் செருகப்படும் வாய்விரிந்த உலோ கப்பகுதி. (தொ.வ.) 3. நாதசுரத்தில் சீவாளியைச் செருகுவதற்காக வெண்கலத்தால் செய்தமைக்கும் வளையம். (முன்.)

அணைசொல் பெ. துணைச்சொல். (வின்.)

அணைதறி பெ. யானை, குதிரை, மாடு முதலியவற் றைக் கட்டுங் கம்பம் அல்லது குறுந்தறி. (சங். அக.)

அணைப்பு1 பெ. 1. ஒருநாளில் இரண்டு ஏரைக்கொண்டு உழக்கூடிய நிலம். (செ.ப.அக.) 2. தடுப்பு. தண் ணீரை ஓர் அணைப்பு அணைத்து வயலில் விடு (தஞ். வ).

அணைப்பு' பெ. ஏமாற்றுகை. (வட்.வ.)