உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைப்புத்தூரம்

அணைப்புத்தூரம் பெ. ஓர் உழவுச்சால் தூரம். (செ. ப. அக.)

அணைபோடு-தல் 6 வி. 1. நிலத்திற்கு நீர்பாயப்பாசன வாய்க்காலில் அணை கட்டுதல். வாய்க்காலில் அணை போட்டு வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சினான் (56. a.). 2. முட்டுக்கட்டையாய் இருத்தல். நான் ஊருக்குப்போக அணைபோடுகிறான் (முன்.).

அணைமரம் பெ. கன்று இழந்த பசுவைக் கறப்பதற்கு அணைக்குங் கணைமரம். (வட். வ,)

அணையமறி பெ. பிள்ளை பிறந்தவுடன் நஞ்சுக்கொடி விழாமை. (சாம்ப. அக.)

அணையமாறி பெ. நஞ்சுக்கொடி. (முன்.)

அணையல் பெ. உவமை. (உரி. நி, 8,13)

அணையாடை பெ.

1.குழந்தை

துணிப்படுக்கை. அணையாடை

படுக்க விரிக்கும்

மண்பட உந்தி

யுதைந்து கவிழ்ந்து (பட்டினத்தார். அருட்பு. உடற்கூற்று. 13-14). 2. பிறந்த குழந்தைக்குத் தொப்புளில் கட் டும் சீலை. (வட்.வ.)

அணையார் பெ. பகைவர். அணையார்தம் படைக் கடலின் (பாரதம். 8, 2, 260).

அணையுறுமூக்கு பெ. 1.

பேய்க்கொள்ளு.

(சாம்ப.

அக.) 2. காட்டுக்கொள்ளு. (முன்.)

அணைவு பெ. 1. (வந்தணையும் இடம்) வாழ்வு. எங்கள் அணைவினைக் கொடுக்கும் ஆருர் அப் பனே (தேவா. 7,8,6). 2. தழுவுகை. அணைவு தந்தாளுதற்கே (குணங்குடி.பாடற். 124).

திருபப் அணோக்கம்1 பெ. மேல்நோக்கம். (சங். அக.)

அணோக்கம்' பெ. மரப்பொது. (வின்.)

அத்தக்குத்தி பெ. நாள்தோறும் செய்யும் கூலி வேலை. (தஞ்.வ.)

அத்தக்கூலி பெ. வேலைக்குத் தினம் பெறும் சம் பளம், நாட்கூலி, அவன் செய்வதோ அத்தக்கூலி வேலை (முன்.).

அத்தக்கூழ் பெ. மாவைப் புளிக்க வைக்காமல் காய்ச் சிய (நாளும் குடிக்கும்) கேழ்வரகுக் கூழ். (ரா.

வட். அக.)

174

அத்தகோரம்

அத்தக்கொத்து பெ. பெ. அன்றாடக் கூலியான தானியம்.

((LOGIT.)

அத்தக1 வி. அ. அத்தன்மையதாக. தத்தந் தானத்து அத்தக நிறீஇ (பெருங்.2,6,150). சித்திரப் பாவை யின் அத்தக அடங்கி (நன். பாயி. 40).

2

அத்தக வி. அ. அழகு பொருந்த. அத்தக அரிவை யர் அளத்தல் காண்மின் (பரிபா. 12, 44).

அத்தகடகம் பெ. வீரர் அணியும் தோள்வளை. அத்த கடகம் சூடகம் தோள்வளை (அரிச். பு. 1, 118).

அத்தகண்டம் பெ. அத்தகண்டாதனம். அத்தகண் டம் சங்காரம் (தத்து. பிர. 125).

அத்தகண்டாதனம் பெ. ஒரு காலை மேல் நீட்டி அவ் வாறு நீட்டிய காலை ஒரு கையைக் கொண்டு கட்டி மற்றைக் கையை நிலத்தில் ஊன்றியும் மற்றொரு காலை நிலத்தில் நீட்டியும் இருக்கும் ஆசனவகை. (தத்து. பிர. 125 உரை)

அத்தகம்1 பெ. கணக்கன்,

அத்தகம் கூட்டமிடும்

அங்கணத்தில் (நெல்விடு. 318).

அத்தகம் 2 பெ. ஆமணக்கு. (வைத். விரி. அக. ப. 15 )

அத்தகம் 3 பெ. கருஞ்சீரகம். (பச்சிலை. அக.)

அத்தகாகிதம் பெ. அதிவிடையம் என்னும் மருந்துச் செடி. (மரஇன. தொ.)

அத்தகாண்டகம் பெ. ஆமணக்கு. (சாம்ப. அக.)

அத்தகானி பெ. பொருள் இழப்பு. (செ. ப. அக. அனு.)

அத்தகிதம் பெ. சிவப்பு மூக்கறைச் மூக்கறைச் சாரணைக்கீரை. (சாம்ப. அக.)

கதி

அத்தகிரி பெ. சூரியன் மறையும் மேற்கு மலை. ரும் அத்த கிரியை அடைதலாலே (சீவக. 1733 நச்.). உயர்ந்த அத்தகிரியிடத்தே தனது சிவந்த கதிர் களைச் 19,32 சுருக்கி (சிலப்.19, 32 அடியார்க்.) உதய கிரி அத்தகிரி இமயகிரி (குலோத். பிள். 52).

அத்தகுத்தம் பெ. நாள்தோறும் செய்யும் கூலி வேலை.

(ரா. வட். அக.)

அத்தகோரம் பெ. நெல்லி. (பச்சிலை. அக.)