உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தங்கார்

அத்தங்கார் பெ. அத்தை மகள். (அந்.வ.)

அத்தங்கி பெ. முழங்கால். (சாம்ப. அக.)

அத்தச்சிலேடை பெ. பொருட் சிலேடை. பொருவரு நன் பரிமளங்கூர் வனமாலை வனமாலை பொருந்தி- இதனுள் வனமாலை வனமாலை என்பது அத்தச் சிலேடை (மாறனலங். 261).

அத்தசாமம் (அர்த்தசாமம், அர்த்தயாமம்) பெ. நடு இரவு. பூப்பறித்துத் தொடுத்து நமக்கு அத்தசாமம் சாசுவதியாக இருந்து (தெ.இ.க. 5,435).

அத்தஞ்சடம் பெ. இயற்கைப் (பிறவிப்) பாடாணங் களுள் ஒன்றான கௌரிபாடாணம். (சாம்ப. அக.)

அத்தத்தா பெ. குழந்தை தந்தையைக் கூப்பிடுகை. ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா வென்பான் (கலித்.

81, 19).

அத்ததாளி பெ. ( அத்தம் + தாளி) காட்டுப் பூவரசு. (மரஇன.தொ.)

அத்தநாசம் பெ. பொருள் இழப்பு. (வின்.)

அத்தநாரீசுரன் (அர்த்தநாரீசன், அர்த்தநாரீசுரன், அர்த்தநாரீசுவரன்) பெ. உமையை இடப்பாகத்தில் உடைய சிவபெருமான். அத்தநாரீசுரப் பொற் பதுமை (மச்சபு. பூருவ. 54,22).

அத்தநாள் பெ. பதின்மூன்றாவது நட்சத்திரம். (செ.

ப. அக.)

அத்தநியாசம் பெ. கரநியாசம், விரல்களால் கைகளைத் தொடுதல். அத்தநியாசம் இதுவாம் (நித். கன். 260).

அத்தப்பட்டினி பெ. நாள்தோறும் உணவு கிடைக்கா திருக்கை. அத்தப்பட்டினிக்காரன் ஒத்திக்கு நிலம் கேட்டானாம் (பழமொழி).

அத்தப்பிரகரம் பெ. ஒருநாளில் பதினாறில் ஒரு பங்கு கொண்ட நேரம். (சங். அக.)

அத்தப்பிரகரன் பெ. புதன் என்னும் கோளின் உபக் கிரகம். (சங். அக.)

அத்தப்பிரபஞ்சம் (அர்த்தப் பிரபஞ்சம்) பெ. பொருள் உலகு. சத்தப்பிரபஞ்சம் அத்தப்பிரபஞ்சத்தைப் பற்றியன்றி நில்லாமையாலும் (சி. போ. பா. 2, 2).

I

75

அத்தம்'

அத்தப்புழுங்கல் பெ. ஒரே நாளில் அவித்துக் காய வைத்த நெல்லிலிருந்து பெற்ற அரிசி. (தஞ்.வ.)

அத்தம்1 பெ. 1. அருஞ்சுரம், காடு. ஆளில் அத்த மாகிய காடே (புறநா. 23, 22).மழைபெயல் மாறிய கழை திரங்கு அத்தம் (பதிற்றுப். 41, 14). கல்லதர் அத்தம் உண்டே (சீவக. 1185). 2. வழி. கல் பிறங்கு அத்தம் சென்றோர் (குறுந். 66). கல்லதர் அத்தம் கடக்க (சிலப். 16, 57). அத்தம் நெடிய அழற்கதிரோன் (திணைமாலை. 69). கலையொடு மானிரங்கு கல்லதர் அத்தம் (திணைமொழி. அழல்நிலை அத்தத்து அசைந்து உயிர் (பெருங்.2, 9, 129). மொய்கடுங் கனல் வெம்பரல் புகைமூளும் அத்தம் முயங்கியே (பெரியபு. 21,368).

19).

வைப்ப

அத்தம்' பெ. அதிவிடையம் என்னும் மருந்துச் செடி. (வைத். விரி. அக, ப. 15)

அத்தம்' பெ. ஒரு மரம். (வைத். விரி. அக.ப.15)

அத்தம் பெ. கரிசலாங்கண்ணி. (இராசவைத்./ செ.

அக.)

ப.

அத்தம்' பெ. நாய்வேளை என்னும் பூண்டு. (வைத். விரி. அக. ப. 24)

அத்தம் 6

பெ.கண்ணாடி.

...

அத்தம் கண்ணாடி

(பிங். 1253). அத்தமதில் முன்பின்போல் (வேதா.

சூ.108).

சகாத்தம்

அத்தம்' பெ. எண்ணிய 1.ஆண்டு. எண்ணூற்று ஏழின்மேல் (கம்பரா. பாயி. மிகை. 9). 2. தொடர்ந்து வரும் ஆண்டு முறையைக் குறிக்கப் பெயரின் பின் சேர்க்கப் பெறுவது, அப்தம். கிறித்தவ அத்தம் (நாட்.வ).

அத்தம் 8

(அர்த்தம், 1

1

பெ.

அருத்தம் , அருத்து') 1. பொருள். அத்தமும் ஆவியும் (திருமந். 532). அத் தமும் வாழ்வும் அகத்து மட்டே (பட்டினத்தார். பொது 13).உண்டான அத்தமும் (அறப்பளி. சத. 39). அத்தம் யாவும் நீயென்றே மிக ஆசை பூணேனோ 10, கீர்த். 2). 2. பொன், அத்தம் பொன்னே (பிங். 1232). வெறுக்கை - அத்தம் (சிலப். 5, 20 அரும்பத.). அத்தவேட்கை (திருப்பு.31).

(சர்வ.

...

அத்தம்' (அர்த்தம்) பெ. சொற்பொருள். அத்தத் தில் உத்தரம் கேட்ட அருந்தவர் (திருமந். 2424). வேதத்து அத்தம் அறியார் (சிவதரு. 10, 110).