உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தாந்திரம்

அத்தாந்திரம் (அத்தாந்தரம்') பெ. கணக்கர். குமார சுவாமி முதலியாரும் அத்தாந்திரமுங் கடைக்கூட் டிகளும்... (தெ.இ.சு.23,22).

அத்தாப்பு பெ. கூரை. அங்கொன்றும் இங்கொன்று மாக அத்தாப்பு வேய்ந்தபடி வைத்த வைத்த வீடுகளாக இருந்தன (மலாய் வ).

அத்தாபத்தி பெ. நெருக்கடியான நிலை. (திருநெல்.

வ.)

அத்தாபம் பெ.

அத்தாபத்தி.

(செ.ப.அக. அனு.)

அத்தாய் பெ. அணியும் உடை. (செ. ப. அக.)

அத்தாயப்படு-தல் 6 வி. துன்பப்படுதல். அவன் மிக்க அத்தாயப்படுகிறான் (செ.ப. அக. அனு.).

அத்தாயம்' (அத்தாசம்j பெ. 1. பாழான இடம். அத்தாயக் காட்டுக்குள்ளே சாரைப்பாம்பு தொங் குது (விடுகதை. 75). 2. அந்தரம். அவனை அத் தாயமாய்த் தூக்கி எறிந்தான் (வட்.வ.).

அத்தாயம்' பெ. கடைசல் சக்கரத்தின் மிதிச் சட்டம்.

(கதிரை. அக.)

அத்தாயம்' பெ.

1.இளைப்பு. (செ. ப. அக.

2. துன்பம். (முன்.)

அத்தாரம் பெ. மரமஞ்சள். (சாம்ப. அக.)

அனு)

அத்தால் இ. சொ. அதனால். காண்குறும் தன்மை இந்தக் கண்ணினுக்கு இன்றாம் அத்தால் காண் குவர் அருத்தாபத்தியால் ஒளிர் கண்ணின் சக்தி (சிவப்பிர.விகா. 27). அத்தாலே அவரை அபேட் சிக்கிறது (பெரியதி. தனியன் 4 தமிழாக். ப. 9).

அத்தாவரி பெ. பெ. வெட்பாலரிசி. (சங். அக.)

அத்தாழம் பெ.

மாலைக்காலம். (சாம்ப. அக.)

அத்தாள் பெ. அம்மா. (ராட். அக.)

அத்தாளம் பெ. 1.இரவு உணவு. அத்தாளப் பட்டி னியும் அப்படியே (சரவண. (சரவண. பணவிடு./செ.ப.அக.). 2. இரவு உணவுக்கு மேல் உண்ணும் சிற்றுணவு (நொறுக்குத் தீனி). பயலுக்கு அத்தாளம் கேட்கிறது (ரா.

வட். அக.).

பெ. சொ . அ.1-12 அ

179

அத்தி3

அத்தாளி பெ. காட்டுப் பூவரசு. (செ.ப.அக. அனு.)

அத்தான்1 பெ. 1. அத்தை/மாமன் மகன். மாமனாம் அன்னத்தான் அத்தானே காப்பு (பத்ம. தென்றல். தூது காப்பு). அத்தான் உனக்குத்தானே (மலைய. ப.136). 2. மனைவியின் மூத்த அண்ணன். (நாட்.வ.) 3. அக்காள் கணவன். (நாட். வ.) 4. ஆசைக்குரிய வனைப் பெண் அழைக்கும் சொல். அத்தான் எனக்கு ஆசை கூட்டித் தயங்க வைத்தாய் (திருப்பு. 11). 5. கணவன். (பே.வ.)

அத்தான் 2 பெ. முடக்கொற்றான் கொடி. (சங். அக.)

அத்தான்மதனி (அத்தான்மதினி) பெ. அத்தைமகன் மனைவி. (அந். வ.)

அத்தான்மதினி (அத்தான்மதனி) பெ. அத்தை மகன் மனைவி. (அந்.வ.)

அத்தானம்1 பெ. கோபுரவாயில். (ராட். அக.)

அத்தானம்' பெ. பாழிடம்.

அத்தானக் காட்டிலே

பாட்டி குணுக்குப் போட்டு ஆடுகிறாள் (விடு)

கதை. 78).

அத்தானம்3 பெ. மிகுந்த ஆழம். (கதிரை. அக.)

அத்தி 1 பெ. ஒரு மரவகை. அத்திப்பழமும் அறைக் கீரை நல்வித்தும் (திருமந். 160). பூக்கும் இருப்பை மலர் பொன் அத்தி என் று (ஆனந்த. வண்டு. 19). அத்தி மரப்பூப்போலே (மலைய. ப. 236). அத்திக் காய் தன்னை அருந்தினால் புண்ணும் போம்

(பதார்த்த.700).

அத்தி'

...

பெ. 1. யானை. அத்தியின் உரிவை போர்த்தார் (தேவா. 4, 25,5). அத்திக்கு அருளிய அரசே போற்றி (திருவாச. 4,163). அத்திமுதல் எறும்பு ஈறான உயிர் (பட்டினத்தார். பொது. அன்னை 18). முத்தி அளித்தானும் அத்திவிளித்தானும் (திரு வரங். கலம். 16). 2. முருகக்கடவுளின் தேவியாகிய தெய்வயானை. முத்தைத்தரு பத்தித் திருநகை அத் திக்கு இறை (திருப்பு.1187)

அத்தி3 பெ. ஓர் ஆடுகள மகன், ஆட்டனத்தி. புனல் நயந்து ஆடும் அத்தி யணிநயந்து காவிரி கொண்டு ஒளித்தாங்கு மன்னோ (அகநா. 376, 10-11).