உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயன்பதஞ்சேர்ந்தோர்

அயன்பதஞ்சேர்ந்தோர் பெ. சூத்திரர். அயன்பதம் சேர்ந்தோர் துங்க வீதியும் (கந்தபு. நகர. 40).

அயன்பொறி பெ. பிரமன் எழுத்து. அடியார் சிரத் தின் அயன் பொறியை (திருமலைமுரு. பிள். 71).

அயன்மணம் பெ. மணமகனிடமிருந்து பொருள் பெறாது மகளைக் கொடுக்கும் மணவகை. அயன் மணமொழி (சிலப். 24, 16 அயன்மணம் - பிராசாபத்தியம்

அரும்.).

அயன்மணமுரைத்தல் பெ. தலைவனுக்குத் தோழி படைத்து மொழிந்து பிறரும் மணம் வேண்டிக் காப் பணியக் கருதுவரென்று கூறும் அகத்துறை. (களவி. காரிகை உடன். 77).

அயன்மனை பெ. வல்லாரைக்கீரை. அயன்மனை யால் காய சித்தியாம் (தேரை. வெண். 374).

அயன்மனைவி பெ. கலைமகள். மலரயன் மனைவி வாக்காள் (சூடா. நி. 1,35).

அயன்மை பெ. அன்னியம். எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம் (தொல். பொ. 147 நச்,).

அயன்மையா - தல் 5 வி. அன்னியமாதல், முன் அறிந்த மக்களிடமிருந்து உறவுமுறிதல். (இக்.வ.)

அயனசலனம் பெ. மேட ஆரம்பத்தானம் இடம் பெயர்ந்து செல்லல். (செ. ப. அக.)

அயனப்பிறப்பு பெ. உத்தராயண தக்கிணாயனங்களின் தொடக்கம். (முன்.)

அயனம்1 (அயணம்) பெ. 1. சூரியன் சமரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது செல்லும் காலம். (நாநார்த்த.587). 2. ஆண்டு. ஆயனம் சமை அயனம் ஆண்டின் பெயரே (பிங். 305). 3. ஆண்டிற் பாதி. அயனமே ஆண்டினிற் பாதிக்கும் பேர் (சூடா.நி.11 யகர.3), 4. உத்தராயண தக்கிணாயனப் பிரவேச காலம். (அகோர. வேதார. பு. தோற்றச். 82)

...

...

...

அயனம்' பெ. வழி. அயனம் என்னாது அயனம் எனப் பாகதத்தால் கூறினார் செய்யுட் சொல் லென்று (சீவக. 851 நச்.) அதரும் அயனமும்

ஆறும் அடைவும் (பிங். 479).

அயனம்' பெ. பிறப்பு. அயனமே வழியும் பிறப்பும் ஊணும் (பொதி.நி.2,89).

3

03

அயந்திரமாகம்

அயனம் + பெ. 1.வீடு. (நாநார்த்த. 587) 2. புகல். (சம். அக.செ.ப.அக. அனு.) 3. 3. தங்குகை. நரருடைய நாரமதனில் அயனமுற்ற என்னை (திருக்காளத். பு.

15, 6).

...

அயனம்5 பெ. உணவு. அயனமே ஊணும் (பொதி. நி.2,89).

அயனம்' பெ. வேதம். (யாழ். அக. அனு.)

அயனமண்டலம் பெ. சமரேகைக்கு வடக்கும் தெற்கு முள்ள சூரியன் செல்லும் வீதியளவாகிய பூமண்டலம். (செ. ப. அக.)

அயனமாதம் பெ. அயனமாறுபாட்டிலிருந்து கணக்கிடும் மாதம். (செ. ப அக. அனு.)

அயனாதி பெ. நிரந்தர நிலவரி. (முன்.)

அயனாள் பெ. 1. உரோகிணி. அயனாள் வையம் உரோ கிணி ஆகும் (பிங். 242). 2. பிரமன்தினம். (செ.ப. அக.) 3. பிரமன் வாழ்நாள். (முன்.)

அயனிநிலம் பெ. அரசுக்கு நேரடியாக வரி செலுத்துதற் குரிய நிலம். (கதிரை. அக.)

அயனிவாசம் பெ. பிரமலோகம்.

வாசம் ஏழ்தீவு (தக்க. 104).

பாதாளம் அயனி

அயனீச்சுரம் பெ. பாண்டி நாட்டுச்சைவத்திருத்தலம். ஆடரீகச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச் சுரம் பலவுமியம்புவோமே

...

(தேவா. 6, 71, 8).

9

அயா பெ. 1. மனத் தளர்ச்சி. அன்பின் நெஞ்சத்து அயாஅப் பொறை மெலிந்த (அகநா. 107, 2). 2.

நலிவு, வருத்தம்

அயாக் கொள்ளும்

செங்கயிற்று ஒழுகைப் பகடு (முன். 329,7). பந்து எறிந்த அயாவிட (கலித். 40, 22). அயாவுறும் மடந்தை அருந்துயர் தீர்த்து (சிலப். 11, 202).

அயாகம் (அயிகம்1) பெ. ஊமத்தை. (பச்சிலை. அக.) அயாசகம் பெ. (அ+யாசகம்) கேளாது கிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க்கு அயாசகமும் ஆம் (சைவ. நெறி பொது 257).

அயாசிதபிச்சை பெ. (துறவிகள் இருந்த இடத்திற்கு) கேட்காமல் வரும் உணவுப் பிச்சை. (சைவ. நெறி

பொது 405)

அயாந்திரமாகம் பெ. கருங்காணம், காட்டுக்கொள்ளு. (பச்சிலை. அக.)