உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயலை

தான்

...

அயிரை மீனு ஆயிரமாம் (மலைய.ப.

221).

அயலை பெ. மீன் வகை. (செ ப. அக. அனு.)

அயலோர் பெ. பிறர். அறிவிலன் வேலன் என்று அயலோர்க்குரைத்தல் (இறை. அக. 14 உரை).

அயவசியம் பெ. சிற்றரத்தை. (வாகட அக.)

அயவணம் பெ. ஒட்டகம். கனகதம் அயவணம் இர வணம் ஒட்டகமாகும் (பிங். 2491).

600

அயவந்தி பெ. சோழநாட்டில் திருச்சாத்தமங்கைத் திருக்கோயில், சாத்தமங்கை அயவந்தி அமர்ந் தவனே (தேவா. 3,58,1). தொல்லை நீடு அயவந்தி யும் (பெரியபு.26, 7).

தூய தொண்டனார் அமர்ந்த நாயனாரை

அயவல்லி பெ. கோவைக்கொடி. (மரஇன. தொ.)

...

அயவாகனன் பெ. அக்கினிதேவன். அரிவசு அனல் அயவாகனன் (சூடா. நி. 1, 49).

அயவாசி (அயவாரி) பெ. வசம்பு.

அயவாரி (அயவாசி) பெ. வசம்பு.

(பச்சிலை. அக.)

(மலை அக.)

அயவி (அயவிகம்) பெ. சிற்றரத்தை. (மூலி. அக.)

அயவிகம் (அயவி) பெ. சிற்றரத்தை. (சித். அக /செ. ப. அக. அனு.)

அயவீரச்செந்தூரம்

பெ. அயப்பொடியுடன் வீரம் சேர்த்துச் செய்யப்படும் மருந்துப்பொடி. (குண. 2 ப.58)

அயவு பெ. அகலம். (யாழ். அக. அனு.)

அயவெள்ளை பெ. ஓர் இரும்புச் சத்து மருந்து. (சங்.

அக.)

அயற்சி பெ. தளர்ச்சி. காட்டும் அயற்சிக்குள் இக் குங்குமக் கொங்கையை (சங்கர. கோவை 213).

அயற்படு-தல் 6 வி. நீங்கிப்போதல், வேறிடத்துப்படுதல். இயற்படுமானமும் இகலும் நாணமும் அயற்பட (கந்தபு. 3,9,5).

அயற்புரவலர் பெ.

பிறநாட்டரசர். இரவலர் இரு நெதி கவர்க ஈண்டயற்புரவலர் வருகென (சூளா.903).

அயறு பெ. புண்வழலை. அயறு சோருமிருஞ் சென் னிய (புறநா.22,7). அயறு அசும்பிருந்த அந்தண் நாற்றத்து (பெருங்.1,58,12).

302

அயன்நன்செய்

அயன் 1 (அசன்) பெ. 1. பிறப்பில்லாதவன். (சங். அக.) 2. பிரமன். அரி அயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரரெல்லாம் (தேவா. 4, 99, 7). கொள் ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு (திருவாச. 5, 2). அரி அயன் முதலினர் நண்போடும்பாட (திரு மலைமுரு.பிள்.16). ஆனாரிலையே அயனும் திரு மாலும் (தனிச். சிந். காளமேகம் 146). 3. சிவன். சாதலும் பிறப்பும் தோயாத்தன்மையால் அயன் (கூர்மபு. பூருவ.4,23). 4. அருகன். (யாழ். அக.)

அயன்' பெ. இரகுவின் மகன், தசரதன் தந்தை. அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை (கம்பரா. 1,11,13). பேதமில்லதோர் பிரம மூர்த் தமே யாதலாற் பெயர் அயன் என்றோதினார் (இரகு. அயனு.52).

அயன்' பெ.

ஐயன். ஆரூர்க்கோன்

நெஞ்சே அயன் (கபிலதேவ. அந். 20).

அல்லனோ

அயன் பெ. 1. அரசு நிலம். (சங். அக.) 2.இன்றி யமையாமை, முக்கியம். அயனான இடத்தில் நிலம் இருக்கிறது (நட்.வ.).

அயன் பெ. அசல். (ரா. வட். அக.)

அயன் பெ. அருகு. உமைச்சால நாள் அயன் சார் வதினால் (சேதி. திருவிசை. கோயில். 1).

அயன்கணக்கு பெ. பிரமன் விதித்த விதி. அயன் கணக்கு ஆருக்குந் தப்பாது (பழ. அக. 421).

அயன்சமா பெ. 1. அரசு வசூலிக்கத் தீர்மானித்துள்ள மொத்த வரி. (செ.ப.அக.) 2. பிறவரிகள் நீங்கிய தனி நிலவரி. (செ. ப. அக. அனு.)

அயன்சமாபந்தி பெ. ஆண்டிறுதி நிலவரித் தீர்மானம்.

(செ.ப. அக.)

அயன்தந்தை பெ. திருமால். அயன் தந்தை குறள் வடிவன் திருமாலுக்கு இயன்ற தொல்பெயர் (ஆசி.நி. 4).

...

அயன்தரம் பெ. நிலத்தின் முதன் மதிப்பு. (செ.ப. அக.)

அயன்தீர்வை பெ. (முதலில் தீர்மானிக்கப்பட்ட) நில வரி. (ஆட்சி. அக.)

அயன்நன்செய் பெ. நன்செய் நிலமாகவே தீர்வை செசலுத்தப் பெறும் நிலம். (நாட்.வ.)