உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசர்க்குறுதிச்சுற்றம்

அரசர்க்குறுதிச்சுற்றம் பெ. அரசனுக்கு உற்ற துணை யாக இருக்கவேண்டிய நட்பாளர், அந்தணாளர் மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர். (பிங்.

771)

அரசர்குலம் பெ. இட்சுவாகு குலம், அரிகுலம், குரு குலம், நாத குலம், உக்கிகுலம் என்ற ஐந்து சிறப் பான அரசர் குலங்கள். (சூளா. 535 உரை)

அரசர்குழு பெ. அரசனுக்கு ஆலோசனை கூறும் தகுதி பெற்ற குழுவினரான அமைச்சர், புரோகிதர், சேனா பதியர், தூதுவர், ஒற்றர் ஆகியோர். (திவா. 2707)

அரசர்கோ (அரசர்கோமான், அரசர்கோன்) பெ. அரசர்க்கரசன். மந்திரத் தரசர்கோவே மற்றவன் வையங்காக்கும் (சூளா. 354).

அரசர்கோமான் (அரசர்கோ, அரசர்கோன்) பெ. அரசர்க்கரசன். அரசர் கோமான் குறிப்பறிந்து அருளப்பட்டீர் (முன். 104).

பெ.

அரசர்கோன் (அரசர்கோ, அரசர் கோமான்) அரசர்க்கரசன். காதுவேலரசர்கோன் களிப்புற்றான் (முன். 404).

அரசர்சின்னம் பெ. முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், ஆசனம், இடபம் என் னும் அரச அடையாளங்கள். (சூடா.நி.12,121)

அரசர்பக்கம்

பெ. ஓதல், வேட்டல், ஈதல்,காத்தல், தண்டம் செய்தல் என்னும் ஐவகை அரசர் தொழில். ஐவகை மரபின் அரசர் பக்கமும் (தொல். பொ. 75 நச்).

அரசர்பரி பெ. அரசரின் குதிரை. (பிங். 1493)

அரசர்பா பெ. ஆசிரியப்பா. (இலக். வி. 873)

அரசர்பின்னோர் பெ. (அரசருக்கு அடுத்த தகுதி யில் கூறப்படும்) வணிகர். அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின் (சிலப். 16, 44).

அரசர் மன்னன் பெ. (காப்.) துரியோதனன். அர சர் மன்னன் சீர்த்துரியோதனன் பேர் (சூடா. நி.2,15).

...

3

22

அரசவிலைமுருகு

அரசரறுகுணம் பெ. (அரசருக்கு வேண்டிய ஆறு குணம்) நாடிய நட்புப்பகை செலவு நல்லிருக்கை கூடினாரைப் பிரித்தல் கூட்டலாறு.(புற. வெண். 225

உரை)

அரசரறுதொழில் பெ. ஓதல், வேட்டல், ஈதல், படைக் கலம்பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறம் தெறு தல் என்னும் அரசருக்குரிய ஆறு தொழில். அரசர். அறுதொழில் ஓதல், வேட்டல், புரை தீரப்பெரும் பார் புரத்தல், ஈதல், கரையறுபடைக்கலம் கற் றல், விசயம் (திவா. 2623).

அரசரில்லம் பெ. கோயில், பவனம் கோயில் அரசர் இற்பேர் (சூடா. நி. 5, 50).

.

...

அரசரேறு பெ. அரசருள் சிங்கம் போன்று வலிமை மிக்க அரசன். அறைகழ லரவத்தானை அணிமுடி அரசர் ஏறே (சூளா. 256).

அரசரொளி பெ.கொடை, தலையளி, செங்கோல், குடி யோம்பல் என்று நான்கு வகைப்பட்ட அரசருடைய பெருமை. (குறள்.390)

அரசல்புரசல் பெ. தெரிந்தும் தெரியாத நிலை. அரசல் புரசலாகக் காதில் விழுந்தது (பே.வ.)

அரசலுவலர் பெ. அரசுப்பணியாளர். அரசலுவலர்களுக் குப் பணிப் பாதுகாப்பு ஆலோசனை மையம்

(அலுவலக வ.).

அரசவன்னம் பெ. (அன்னப்பறவையுள்) சிறந்த அன்னம். அரசவன்னம் ஆங்கினி திருப்ப (மணிமே. 4,10). ஆலுநீர் அன்னமோடு அரசவன்னமே (சூளா. 57).

அரசவாகை பெ. வேந்தனியல்பு (வெற்றி) கூறும் புறத்துறை. (புற. வெண். 157 தலைப்பு)

அரசவாரியன் பெ. குதிரை நடத்துவோரில் சிறந்தவன், வாதுவன். பரத்தை குதிரையாக நீ அரசவாரிய னாய் திரி (கலித். 96,38 நச்.).

...

அரசவாழ்க்கை பெ. (அரச வாழ்க்கையாகிய) பெரு மித வாழ்வு. பெரிது நம் அரசவாழக்கையே (சூளா.

684).

அரசவிலைமுருகு பெ. காதணிவகை. (சரவண. பணவீடு.

121)