உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கிசம்"

அங்கிசம்' பெ. 1. தோள்.(சங். அக.) 2. தோள்பட்டை (முன்.)

அங்கிசம்' (அங்கிசகம்) பெ. அம்சம் என்னும் சன்னி யாசப் பிரிவு. (சி.சி.8,11).

அங்கிசம்' பெ. அன்னப்பறவை. பிரம்மாவினுடைய இராச அங்கிசமும் (தக்க. 151 ப. உரை).

அங்கிசம்" பெ. வாழை. (வைத். விரி. அக. ப. 5)

அங்கிசமாலி (அங்கிசுமாலி) பெ. பன்னிரு சூரிய ருள் ஒருவன், அஞ்சுமாலி. ஆதித்தன் ...அங்கிசமாலி ...சூரியர் பன்னிரண்டென்ப (பிங்.179).

அங்கிசயன் பெ. பதினெண் யாகங்களுள் ஒன்று. அங்கி சயனே...பதினெண் யாக மென்ப. (பிங். 443).

அங்கிசிவயோகம் பெ. இயமம் முதலான எட்டு அங்கங் களையுடைய சிவயோகம்.

(சி.சி.8,21 ஞானா.)

அங்கிசு1 பெ. அணு. (சங். அக.)

அங்கிசு' பெ. ஒப்பனை. (முன்)

அங்கிசு' பெ. 1. கதிரவன். (முன்.) 2. கதிர். (முன்.).

அங்கிசு + பெ. தும்பு. (முன்.)

அங்கிசு பெ. வேகம். (முன்.)

அங்கிசுமாலி (அங்கிசமாலி)

பெ.

ஒருவன், அம்சுமாலி, (செ. ப. அக.)

பன்னிரு சூரியருள்

அங்கிட்டிங்கிட்டு வி.அ. அந்தப்பக்கம் இந்தப் பக்கம். அம்மாவை அங்கிட்டு இங்கிட்டுப் போகவிடாமல் குழந்தை அழுகிறது (பே.வ.).

அங்கிட்டு வி. அ. 1.அவ்விடத்தில்.

ஆழ்வாருடைய

வாக்கிலே புக்கு அங்கிட்டுப் பிறந்து நாம் சுத் தராய் அடிமை செய்யவேணும் (திருவாய். 6, 8, 11 ஈடு). 2. அந்தப் பக்கம், அப்பால். குளத்துக்கு அங் கிட்டு (மலைய. ப. 26).

அங்கிட்டோமம் பெ. சோம யாகவகை. சோதிட்டோ மம் அங்கிட்டோமம் (பிங். 443). அங்கிட்டோ

மம் கோமேதம் இராசசூயம் (உத்தர. திக்கு. 117).

அங்கிடம்1 பெ. பரம்பரை. (யாழ். அக.)

அங்கிடம்' பெ. வாழை. (முன்.)

6

1

அங்கிநாள் 2

அங்கிடுதத்தி பெ. நிலைகெட்டவன், அடிக்கடி நிலை பெயரும் நாடோடி. (முன்.)

அங்கிடுதிருப்பி பெ. பிறரைக் குறை கூறுவோள். அங் கிடுதிருப்பி எங்கடி போனாய், சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன் (பழமொழி).

அங்கிடுதுடுப்பன் பெ. 1.பிறரைக் குறை கூறுவோன். 2.அடிக்கடி நிலை பெயர்வோன்,

(ராட். அக.)

நாடோடி. (வின்.)

அங்கிடுதொடுப்பி பெ. பிறரைக் குறை

கூறுவோன்.

அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு இங்கி ரண்டு சொட்டு (பழ. அக. 70).

அங்கிடை வி. அ. அவ்விடம். அங்கிடை உற்ற குற் றம் யாவது (கம்பரா. 1, 17, 10).

அங்கித்தம்பனை பெ. (அறுபத்து நான்கு கலையுள்) நெருப்பு சுடாமலிருக்கச் செய்யும் கலை. அங்கித்தம் பனை வல்லார்க்கு அனல் சுடாதாகும் (சி. சி. சுப. 309). அங்கித்தம்பனை கொண்டு வென்றாய்

(திருவால.பு 38,23).

அங்கித்திசை பெ. (அக்கினி தேவனுக்குரிய) தென் கிழக்கு. (திவா.2659-2660)

அங்கித்தேவன் பெ. நெருப்புக் கடவுள். அங்கித் தேவன் அருள் என ... பொய்கை புக்கனர் (பெருங். 1, 43, 151). சுடர் அங்கித்தேவனை ஓர்கைக் கொண்டானை (தேவா. 6, 26,1).

அங்கிதம் பெ. 1. தழும்பு. அங்கிதம்... தழும்பெனச் சொல்லுப (பிங். 1081). இவன் செருவிற்கொண்ட அங்கிதத்து அழகு (இரகு. யாகப். 103). 2. அடை யாளம். அங்கிதம் பிறவுமேல் அறைய நின்றவே (கந்தபு. 5,5,37). 3. யானைத்தாள். (ஆசி.நி. 98). 4. பாடலில் ஒருவனைக் குறிப்பாகக் கூறும் பெயர். ஒரு அங்கிதம் வைத்துப் பாடுகிறது (ராட். அக.).

.

அங்கிதன் பெ. வசைப்பாட்டுப் பாடப்பெறும் தலைவன்.

(சங். அக.)

அங்கிநாள்!

நாளே

...

பெ.

கார்த்திகை நட்சத்திரம். அங்கி கார்த்திகை தன்பெயர் (பிங். 241).

அங்கிநாள் 2 பெ. அத்தம் என்னும் நட்சத்திரம். காம ரமே அங்கி சார்ந்த நாள்...அத்தம் (சூடா. நி. 1,72).