உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியீடு

அடியீடு பெ. 1. அடிவைத்து மெல்ல நடக்கை. அருந் திறன் மாக்கள் அடியீடு ஏத்த (சிலப். 26,90). மாமணி அம் கழல் ஏந்தி அடியீடு ஏத்த (சீவக. 2369). அணங்கனையார் அடியீடேத்த (சூளா. 1801). 2. தொடக்கம். (பே.வ.)

அடியீரல் பெ. மண்ணீரல். (சாம்ப. அக.)

அடியுடுப்புமுண்டு பெ. இடுப்பு வேட்டி. (நாஞ்.வ.)

அடியுண்(ணு)-தல் 7 வி.

அடிவாங்குதல். அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (பெரியாழ். தி. 2, 10, 5), அடியுண்டார்களும் (கம்பரா. 5, 11, 57). நெய்திருடி உரலிற் கட்டுண்டு அடியுண்டநிந்தை (திருமயிலைப் பிள். 8,4).

அடியுணி பெ. அடிபட்டவன். (செ. ப. அக.) அடியுப்பு பெ. கல்லுப்பு. (சித். பரி. அக. ப. 155)

அடியுரம்1 பெ. 1. பயிர் செய்யுமுன் நிலத்தில் இடுகின்ற அடிப்படையான எரு. (பே. வ.) 2. மரத்தைச்சுற்றியிடும் எரு. (இலங். வ.)

அடியுரம்' பெ. 1. அடுத்த ஆண்டிற்காகச் சேமித்து வைக்கப்படும் தானியம். (LAGIT.) 2. முன்னோர் சொத்து. (முன்.) 3. செல்வ ஆற்றல், வலிமை. (முன்.) அடியுரம்3 பெ. அடிப்படை. (யாழ். அக.)

அடியுறை பெ. 1. பாதத்தில் வாழ்வேன் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. நின்னடிநிழற் பழகிய அடியுறை (புறநா. 198, 26). நயத்தலின் சிறந்த எம் அடியுறை (பரிபா. 9, 84). 2. வழி பட்டுறைகை. அடியுறை காட்டிய செல்வேன் (கலித்.

140,11). குடியும் குழுவும் அடியுறை செய்ய

(பெருங்.4,1,42). 3. பாத காணிக்கை. ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று. (பெரியாழ். தி. 4, 3,9). 4. அடிமை,. தொண்டு. ஆணையாசாற்கு அடியுறைசெய்யும் மாணி (பெருங். 2,9,58 அடியுறை-தொண்டு. உ. வே.சா. அடிக்குறிப்பு).

அடியுறை - தல் 4 வி. அடிவாரத்தில் தங்குதல். குன்றத்து அடியுறை இயைக (பரிபா. 15,65),

அடியெடு-த்தல் 11 வி. 1. அப்பால் போதல். வல்வினை யார்...அடியெடுப்பது அன்றோ அழகு (இயற். பெரியதிருவந்.30). 2. அடிவைத்தல். அடியெடுத்துக் கொண்டென்பால் வரலாகுங்கொல் (சடகோபரந்.

28).

1

39

அடியொட்டி 1

அடியெடுத்துக்கொடு-த்தல் 11 வி. 1. இறைவன் புல வர்க்குப் பாடலியற்ற முதலடியை உரைத்தருளுதல். சேக்கிழாருக்கு உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக் கொடுத்தான் (சமய வ.). 2. நாடக மேடையில் நடிப்பவர்க்குப் பின்னணியில் இருப்பவர் அவ்வப்போது சொல்லை எடுத்துக் கூறுதல். நாடக மேடையில் மறைவாக அடியெடுத்துக் கொடுக்கும் ஒருவா இருப்பார் (தொ.வ.).

அடியெதுகைத்தொடை பெ. (யாப்.) அடிதோறும் முதற்சீரில் இரண்டாமெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது. அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையால் அடியெதுகைத்தொடை என்ற வாறு (யாப். காரிகை 18 உரை).

அடியெழுத்து பெ. (இலக்.) பன்னீருயிரும் பதினெட்டு மெய்யுமாகிய முப்பது முதலெழுத்து. அடியெழுத்து என்பதும், தலையெழுத்து

என்பதும்...முதலெழுத்

தின் பெயர்களாம் (பேரகத். 8 உரை).

அடியேந்திரம் (அடியந்திரம்) பெ. 1. திருமணம் விருந்து போன்ற சிறப்பு. (செ. ப. அக.) 2. இழவுச் சடங்கின் இறுதி நாள். (நாஞ். வ.)

அடியேபிடித்து வி. அ. தொடக்கத்திலிருந்து. அடியே பிடித்துச் சொல்லியும் கேட்கவில்லை (பே. வ.)

அடியேம்

பெ.

யாம் உம் அடியாராகிய என்னும் பொருளில் வரும் வணக்கச் சொல். தொழும் அடி யேம் வல்வினையின் வேர் தடிந்தாய் (கந்தபு. 4, 14, 3). புன்கண் அடியேம் பொறேம் (குலோத். உலா

256).

அடியேன் பெ. 1. தொண்டன், பக்தன். அடியேனுக்கு இன்பாவாய் (இயற். நான்முகன்திருவந். 59). நானும் உனக்குப் பழஅடியேன் (பெரியாழ். தி. 1, 1, 11). இயற்பகைக்கும் அடியேன் (தேவா. 7,39, 1). தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி (திருவாச. 4, 170). யாண்டோ அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது (கம்பரா. 2, 4 126). அடியேனை ஆள... படிமீது வந்த பரனே (தத்துவ. அடங்கல். ஞானவினோ. கடவுள்). 2. உன் அடியானாகிய நான். புகழ் அடி யேன் பணித்து அடங்கற்பாலதோ (திருவரங். கலம்.

7, 22).

அடியொட்டி1 பெ. தப்பியோடுபவர்கள் காலில் தைக்கும் படி நிலத்தில் நட்டுவைக்கும் இருப்பூசி. ஓடுகின்ற