உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவங்கலக்கம்

அரவங்கலக்கம் பெ. சாகும் காலத்து உண்டாகும் சுறு சுறுப்பு. (வட். வ.)

அரவஞ்செய் 1-தல் 1வி. மனத்தைக் கலக்குதல். கண் ணும் புருவமும் அரவஞ்செய்ய (சீவக. 2806).

அரவஞ்செய்'-தல் 1 வி. 1. பேசுதல். அரவம் செய்யா மல் அவளுடன் சேர (திருமந். 1528). 2. சத்தமிடு தல். குழந்தை தூங்கும்போது அரவஞ்செய்யாதே

(வட். வ ).

அரவடி-த்தல் 11 வி. இரண்டாம் உழவு செய்தல். (இலங். வ.)

அரவணிந்தோன் பெ. (பாம்பு அணிந்த) சிவபெரு மான். (சூடா.நி. 1, 6)

அரவணை-த்தல்

436)

11 வி. 1.தழுவுதல். (ஏகாம். உலா 2. ஆதரித்தல். துன்பம் வரும்போது ஒரு வர் மற்றொருவரை அரவணைத்துச் செல்வது நம் கடமை என்றார் மேலாளர் (பே.வ.).

அரவணை 2 பெ.

1.(திருமாலின்) பாம்புப்படுக்கை. ஆடக மாடத்து அரவணைக் கிடந்தோன் (சிலப். 30, 51). அரவணைப் பயில் மால் (தேவா. 5,65, 9). அரவணைமேல் கண்டு தொழுதேன் (இயற். முதல் திருவந்.16). எந்தை அரவணைத் துயிலுமா கண்டு (தொண்டரடி. திருமாலை 19). அரவணைத் துயிலும் ஆதி (கலிங். 186). பையரவணைமிசைத் துயில்வோன் (குசே. 57).

அரவணைச்செல்வன் பெ. (பாம்பாகிய பள்ளியில் துயிலமர்ந்த) திருமால். அரவணைச்செல்வன் வாழும் அந்தமிழ் நிலத்தின் எல்லை (சீகாளத்திப்பு. நக்கீரச்.81).

அரவணைப்பள்ளியான்

பெ. (பாம்புப் படுக்கை யுடைய) திருமால். அரவணைப்பள்ளியான் அடை தல் காண்டலும் (செ. பாகவத. 10, 1, 72).

அரவணைப்பு பெ. ஆதரவு. ஐயன் புரியும் அர வணைப்பும் (பணவிடு. 27). பாட்டி அரவணைப்பில் பையன் நன்கு வளர்கிறான் (பே.வ.).

அரவணையான் பெ. (பாம்பில் பள்ளிகொண்ட) திருமால். அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் (இயற். இரண்டாம்திருவந். 12). அரவணை

3

36

அரவம்1

யான் சிந்தித்து அரற்றும் அடி (தேவா. 6, 6, 1). அரவணையாய் ஆயர் ஏறே (பெரியாழ்.தி.2,2,1). அரவணையான் தான் உரைத்தது (பாரதவெண். 382). அமலன் அரவணையான் (அழ. கிள். தூது 169-170).

.

அரவதண்டம் பெ. இயம தண்டனை. அரவதண்டத்தி லுய்யலுமாமே (பெரியாழ். தி. 4, 5, 3).

அரவப்பகை பெ.

(பாம்பின் பகையாகிய) கருடன். அரவப்பகை ஊர்தி அவனுடைய... குடை (பெரியாழ்.

தி. 3,5,11).

அரவப்பாயலாளர் பெ.

(பாம்பைப்

பாயலாகக்

கொண்ட) திருமால். அரவப்பாயலாளர் - திருமால் (தமிழ்விடு. 93 உ. வே. சா. அடிக்குறிப்பு).

அரவப்புயங்கன் பெ.

(பாம்பணிந்த

தோள்களை

யுடைய) சிவபெருமான். ஆடும் அரவப்புயங்கன் (காரை. பதி. 1,8).

அரவப்பேரணையான் பெ. ( பாம்பைப் பெரியபடுக்கை யாகக் கொண்ட) திருமால். அரவப்பேரணை யான் பாகன் பெருங்காழிச் சட்டையான் (திருக் காளத். உலா 91).

அரவபூடணன்

பெ. (பாம்பை அணியாகக் கொண்ட) சிவபெருமான். அரவபூடணனார் அன்பர் (திருவெண்.

4. 4, 22).

முதல்

அரவம்' (அர',அரவு" அரா, அராவு)பெ. 1. பாம்பு. உரி களை அரவம் (புறநா. 260,20). உருமும் சூரும் இரைதேர் அரவமும் (குறிஞ்சிப். 255). அருமணி ஐந்தலை ஆடரவம் வானத்து உரும் ஏற்றை அஞ்சி ஒளிக்கும் (முத்தொள். 6). அரவம் அறாக்களம் (ஆசாரக். 98). ஊரும் வரி அரவம் (இயற். திருவந். 38).பூணற் பொறிகொள் அரவம் புன்சடை (தேவா. 1,23,3). கைமேல் இட்டு நின்று ஆடும் அரவம்பாடி (திருவாச. 9, 19). எலி எலாம் இப்படை அரவம்யான் (கம்பரா. 2, 12, 10). சீறாடரவம் முடித்த சடை...செழுஞ்சுடரே (கருவைப்பதிற். அந். 2), 2. இராகு கேதுக்கள். வாள் அரவம் ஒருநாள் கவ்வும் ...மதி அவன் (கம்பரா. 5, 4, 56). வரி பெண் (விதான.பஞ்சாங். 17). 3. (மேருவை வில்லாக்கி வாசுகி என்னும் பாம்பை நாண் ஆக்கியதால்) வில்லின் நாண். அரவம் நூபுரமும் ... சிலை நாணு மாகும் (பொதி.நி. 2,98). 4. ஆயிலியம். அரவம் ஆயிலியமும் ஆகும் (முன்.).

...

அரவம்

...