உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பிலாலந்துறை

அன்பிலாலந்துறை பெ. காவிரிக்கு வடபாலுள்ள பாடல்

பெற்ற சைவத்திருத்தலம்.

www

அன்பிலாலந்துறை

பத

யின் முன்னவனைத் தொழுது போற்றிப் நிறை செந்தமிழ் பாடி (பெரியபு.28,308).

...

அன்பிலி பெ. அன்பில்லாதவள்.

அறனில்லா அன்

பிலி பெற்ற மகன் (கலித். 86, 33-34).

...

அன்பு (அற்பு) பெ. 1. தொடர்புடையார் மீது உண்டாகும் (காமச்சார்பிலாத) பற்று. அன்பிலை கொடியை என்றலும் உரியள் என்றலும் உரியள் (தொல். பொ. 156 இளம்.). அருளும் அன்பும் நீக்கி பிரிவோர் (குறுந். 20). அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (குறள். 71). புதல்வன்மேல் ஒரு காலைக்கு ஒருகால் பெருகும் அன்பு (தொல். சொல். 55 சேனா.). அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன் (கம்பரா. 6,4,20). 2. நட்பு, விருப்பு. அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி (தொல். பொ. 159 இளம்.). அறநெறிபிழையா அன்புடை நெஞ்சில் (மதுரைக். 472). அருளும் அன்பும் (மணிமே. 3, 59). என் 3,59). உளமே புகுந்த அதனால் அன்பொடு நல்லநல்ல ... அடியாரவர்க்கு மிகவே (தேவா. 2,85,2). உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் (பெரியபு. தடுத்தாட். 177). அருமறை நான்கும் அன்புடன் ஏத்த (குசே. சிறப்புப்.23). 3. (ஆண் பெண் கொள்ளும் அன்பு) காதல். செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (குறுந். 40). குழல் மங்கையொடு அன்பாய்க் களியார் (தேவா. 1, 34, 4). பாவை தன்னொடும் ஈண்டிய அன்பி னோடு ஏகுவான் (கம்பரா. 1, 13, 25). இளங் குறத்தி மிகுமாலொடு அன்பு வைத்த பெருமாளே (திருப்பு. 19). 4. (காதலால் உண்டாகும்) உள நெகிழ்ச்சி. முயங்கி மயங்கி இவ்வாறு படு மெழுகில் உருகிய அன்பை என்னே ... உரை செய்வதே (அம்பி. கோ, (அம்பி.கோ, 6). 5. 5. காமம். அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றலாம் மருந்தும் உண்டோ (கம்பரா. 3, 7, 100). 6.(பொருள் மேல் கொள்ளும்) ஆசை. அச்சம் பொய்ச்சொல் அன்பு மிக உடைமை (பதிற்றுப். 22, 2). 7. (தொடர்பிலார் மீதும் உண்டாகும்) கருணை, பரிவு. அன்பது மேஎய் இருங் குன்றத்தான் (பரிபா. 15,53). அறத்தினால் அன்றியே அன்பு ஒருபால் ஓடி மறத்தினால் கட்டுரைத்த (பாரதவெண். 34). ஐம்படையாய் அன்புடையாய் (நூற்று.அந்.25). தேண்டுறும் அன்பே ஈண்டுருவாயினை (கலை மகள் பிள். 29). 8. பத்தி. ஏழுலகும் ஆளி திரு வரைமேல் அன்பு அளிதோ (பரிபா. 8,64). அம்

516

அன்மை

மானுக்கு ஆட்பட்ட அன்பு (காரை. இரட்டை மணி. 16). ஆதரித்து முன் அன்புசெய்து அடி பரவுமாறு (தேவா. 2,52,3). உலப்பிலா அன்பு அருளி (திருவாச. 31,9). புயல் நிகர் கண்டனுக்கு அன்பு பூண்டிடும் (சானந்த. பு. புராண. 3). 9. மென்மை. கல்லினுள் மணி யும் நீ... அறத்தினுள் அன்பு நீ (பரிபா. 3, 64-65).

அன்புகூர்-தல் 4 வி. 4 வி. 1. அன்புமிகக் கொள்ளுதல். கூர் எழுத்தாணி தன் கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாமரோ (பாரதம். காப்பு 1), 2. பெரும்பான்மையும் கடிதம் முதலியவற்றில் வேண்டிக் கொள்ளும் முறையில் எழுதும் தொடர். அன்புகூர்ந்து அனுப்பிவைக்க வேண்டும் (இக். வ.).

அன்புடைக்காமம் பெ. (அன்பின் ஐந்திணையின் பொருளான) தலைவன் தலைவிக்கு உண்டாகும் காதல். ஐந்திணை யுடையது அன்புடைக் காமம் (நம்பியகப். 4).

அன்புநெறி பெ. பக்தி மார்க்கம். புலமைநெறி அன்பு நெறி பொருந்து கம்பன் (கம்பன் பிள். பாயி.5).

அன்புமாட்டு-தல் 5 வி. அன்பை நிலைநிறுத்திக்காட்டு தல். எம்பி மேல் அன்புமாட்ட (கம்பரா. 6,23,112).

அன்புவிசம் பெ. விடாயுப்பு. (சாம்ப. அக.)

அன்புவேணிகை பெ. செம்பாவட்டை. (முன்.)

அன்புவை -த்தல் 11 வி. அன்பு கொள்ளுதல்.(நாட்.

வ.)

அன்புறு -தல் 6 வி. அன்பு கூர்தல். அன்புறமர்ந்த வழக்கென்ப (குறள். 75).

அன்மதம் பெ. கன்மதம்

என்னும் ஒரு

மருந்துச்

சரக்கு. (செ. ப. அக. அனு.)

அன்மயம்1 பெ. மாறு, எதிர். உரைத்த நல்லுரைக்கு அன்மயம் இல்லை (கம்பரா.6,23, 92 பா.பே.).

அன்மயம்' பெ. சந்தேகம். (யாழ். அக. அனு.)

அன்மை பெ.

1. (கூறப்பட்டதினும் வேறு என உணர்த்தும் எதிர்மறைச்சொல்) அல்லாமை.