உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

63


அர்த்தமிருக்கும் என எண்ணிக்கொண்ட இருங்கோவேள் தடை சொல்லாமல் இருந்துவிட்டான். செழியன் இழுத்துச் செல்லப்பட்டான். விடியற்காலையிலேயே வில்லவனை அடக்கம் செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

"சாவூருக்குப் போகும் வழி!" என்று முகப்பில் எழுதப்பட்டுள்ள வீட்டின் கதவு திறக்கப்பட்டது. செழியன் அதன் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டான். ஆட்கள் நுழைந்ததும் அங்கு அடைந்துக் கிடந்த வௌவால்கள் அங்குமிங்கும் அலைமோதிப் பறந்தன. ஒரு பெரிய தூணில் செழியனின் கை கால்களில் சங்கிலிகளைப் பிணைத்து அவன் நகர முடியாதபடி கட்டிப்போட்டனர். பிறகு அந்த பயங்கர வீட்டின் கதவு மூடப்பட்டது. வீட்டைச் சுற்றிக் காவலுக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டனர்.