உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்றநோய்

அற்றநோய் பெ. தீர்ந்த நோய். (சாம்ப. அக.)

அற்றப்படு-தல் 6 61. குற்றப்படுதல். அற்றப்பட ஆரூரதென்று அகன்றாயோ (தேவா. 7, 32,8).

அற்றப்படு-தல் 6 al. 1.இல்லாமையாதல். ஆள் அற்றப்பட்டிரந்தாள் (நம். திருவிருத்.29).2. இடை யறவுபடுதல், மறந்துபோதல். பொச்சாப்பென் பது அற்றப்படுதல்; அஃதாவது, பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் யாதானும் ஓரிகழ்ச்சி யான் இடையறவுபடுதல் (தொல். பொ. 260 பேரா.).

அற்றபேச்சு பெ. ஓர் ஒப்பந்தத்தில் அல்லது பேரத்தில் முடிவு செய்துகொண்ட பேச்சு. (நாட்.வ.)

அற்றம்1 பெ. 1. வருத்தம், துன்பம். அற்றம் அழிவு உரைப்பினும் (தொல். பொ. 148, 3 இளம்.). இரந் தோர் அற்றம் தீர்க்கு என (புறநா. 158,19). அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் (கம்பரா. 4, 7, 176). அற்றம் முன்காக்கும் அஞ்செழுத்தை அன்பொடு (பெரியபு. 21, 126). 2. சோர்வு, தளர்வு, மெலிவு. கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (குறள்.1186). அற்றமின்றி நின்ற சீரழற் பெயர்ப்புணர்ச்சியான் (சூளா.137). வருந்தலை அற்றம் பார்த்து (கம்பரா. 6, 26, 5). ஒரு காசு அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரு (பெரியபு. 56,5).நிருபனும் அற்றமோடு இரு குண்டலச் செவி அங்கையால் புதைத்தான் (ஞான. உபதேசகா. சாரன் அற்றம் நோக்கித் திருடினான் (திருச்சுழியற்பு. பாண்டியன். 11). 3. வறுமை. பண் பிலார்க்கு அற்றம் அறிய உரையற்க (நாலடி. 78).

1347).

அற்றம்' பெ. 1. குற்றம், தீமை. அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினும் (தொல். பொ. 148, 3-4 இளம்.). அற்ற முறையான் (திருமந். 259). அற்றம் தீர்க்கும் அறிவிலளாகிலும் (தேவா. 5,18, 1).ஆள் அற்றமின்றி (சீவக. 455). 2. அவ மானம். அற்ற மறைக்கும் பெருமை (குறள். 980). பாஞ்சாலன் கோமகளை அற்றம் மறைத்தவன் (பாரதவெண். 155), 3. பாவம். அற்றம் நீங்கவே அருச்சனை புரிந்தனன் (திருவிரிஞ். பு. கரபுரி. 7). 4. பொய். அற்றம் அன்மையின் அவல நீங்கினார் (சீவக. 1764). அற்றம் நீத்த மனத்தினன் (கம்பரா.

2, 7, 10).

அற்றம்3 பெ. அழிவு. அறிவற்றங்காக்குங் கருவி (குறள். 421). சராசரத்து அற்றமும் நல்கி (திருமந்.

85

அற்றம் 12

(தேவா.

89). அற்றமில் புகழாள் உமைநங்கை 7,61, 2). அற்றமில் அலங்கல் வேலோய் அஞ்சினை போறியென்றான் (சூளா. 1435).

அற்றம் + பெ. 1. மறைக்கத்தக்கது. அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் (மணிமே. 3,139). 2. உட் பொருள், இரகசியம். அற்றம்மேல் ஒன்று அறியீர் (தொண்டரடி. திருமாலை 9). அற்றந்தான் மனங்கள் போல முகமும் மறைக்குமே (கம்பரா. 1, 20, 29). அற்றம் எனக்கு அருள் புரிந்த

(பெரியபு. 29,252).

அற்றம் 5 பெ. 1. வாய்ப்பான பொழுது. அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் (கலித்.4, 3). அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாளெயிற்று அரக் கர் (கம்பரா. 5, 11, 85). கட்டத்து அற்றத்து அருள் வேலா (திருப்பு. 1175). அற்றம் நோக்காது செல்லின் (குசே. 285). 2. இல்லாத நேரம். அருந்த வன் தந்தையை அற்றம் நோக்கியே (கம்பரா. 1,5, 40). அசும்பு பொலன் கச்சின் அற்றத்தே (குலோத்.

உலா 322).

அற்றம்' பெ. 1. இடையீடு. அற்றமில் பெரும்படை (சீவக. 565). அற்றமின்றி யுறந்த சூழல் உரைப்ப (கச்சி. காஞ்சி. நகரே. 6). 2. விலகுகை. விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் (குறள் 1186). அற்றம் இல்பதகனாம் இவன் தன்னை (திருக்காளத். பு.

29, 26)

அற்றம் பெ. உண்மை.

(கயா.நி.436)

அற்றம் 8 பெ. அச்சம். (உரி. நி.11,32)

அற்றம்' பெ. முடிவு, வரம்பு. குற்றமே அற்றம் தரூஉம் பகை (குறள்.434). ஆசை நோய்க்கும் ஓரற்றம் உண்டாகுமோ (செ. பாகவத. 8, 7, 44). அற்றமில் அடர்வேல் தானை (பாண்டி. செப். 1, 47). அற்றம் அறியாத ஆவணமும் (திருவனந்தை விலா.189) தெரு அற்றத்தில் கோயில் இருக்கிறது (நாஞ்.வ.).

...

அற்றம்10 பெ. சற்று, கொஞ்சம். அற்றம் சற்றும் ஓதலாகும் (பொதி.நி.2,161).

...

அற்றம் 11

லாகும் (முன்.).

பெ. துடி.

அற்றம் ... துடியும் .

...

ஓத

...

நாயும்

ஓதலாகும்

அற்றம் 12 பெ. நாய். அற்றம்

(முன்.).