உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளி - தல்

அளி 1 -தல் 4 வி. 1. முற்றும் கனிதல். ஆசினி மென் பழம் அளிந்து (கலித். 41, 12). அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே (திருவாச. 37, 4). வம்பு அளிந்த கனியே (கருவூர். திருவிசை. 5, 3). தீம்பலா மேம் பழுத்து அளிந்தன சுளையும் (சூளா.49). 2. முதிர்தல். இவள் மனத்தின் முன்பு அளிந்த காதலும் (கருவூர். திருவிசை. 5, 3). 3. (நீர்க்கசிவு வெளிப்பட) நைதல், அழுகுதல். அளி புண்ணகத் துப் புறந்தோல் மூடி (திருவாச. 25,5). பழம் அளிந்து போயிற்று (பே.வ.). 4.குழைதல். சோறு அளிந்து போயிற்று (முன்.). 5. பரிவு கொள்ளு தல், கனிவோடிருத்தல். மந்தி அளிந்த கடுவ னையே நோக்கி (இயற். மூன்றாம் திருவந். 58).

அளி -தல் 4 வி. கலத்தல். தெளிந்த சிந்தையரும் சிறியார்களோடு அளிந்தபோது அறிதற்கு எளிது ஆவரோ (கம்பரா. 5, 2, 154).

3.

அளி 3 - த்தல் 11 வி. 1. கொடுத்தல்.

800

...

உலா

11 வி. 1.கொடுத்தல். சால்பின் அளித் தல் அறியாது (நற். 176, 3). உவந்து நீ அளித்த அண்ணல் யானை எண்ணின் (புறநா. 130, 4-5). நரந்த நறுமலர் நன்கு அளிக்கும் (பரிபா. 16,15). அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் (சிலப். 16, 71) திருமாலுக்கு ஆழி அளித்தாய் (தேவா. 6,32,9). மாப்பிடி வாயிடை கைம் மலை... நீரளிப்பது நோக்கினன் (கம்பரா. 4,1,33). பொதிசோறு அளித்தலுமே வாங்கி இனிதா அமுது செய்து (பெரியபு. 21, 307). என்னுயிரை மீள எனக்கு அளித்தாய் (நளவெ. 1, 49). தானை ஐவர் கொடிக்கு அளித்தவர் (திருவரங். கலம். 27). முத்தம் அளித்தருளே (மீனா. பிள். 52). காக்கும் அதிகாரம் மாலுக்கு அளித்தோன் (மதுரைச். 15). விநாயகற்கு அளித்தனன் விஞ்சைகள் அனைத் தும் (சானந்த. பு. உற்பத்தி.20). பொன்னை அளித் தும் என்று அறைந்தேம் (குமணசரித். 200). 2. உதவு தல். மாரி வந்து அளிக்க (கம்பரா. 5, 2,52).3. (புகழச்சி, முகமன்) கூறுதல். முகமன் அளித்தும் (கல்லாடம் 13, 17). 4. (அருளுடன்) காப்பாற்றுதல். அளிக்கு என இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன் (பதிற்றுப். 61, 10 அளிக்கு நீ எம்மை அளிப்பாயாக -ப. உரை). இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்கு (குறள். 387). வந்தணைந்து காத்து அளிக்கும் வல்லாளன் (காரை. இரட்டைமணி. 4). மீனாய் உயிர் அளிக்கும் (இயற். நான்காம்திருவர். 22). உலகு அளிப்பன் இத் திறன் உரைத்திடே (நந்திக்கலம். 22). தமிழ் அளிக் கும் தண்பாண்டி நாட்டான் (திருவாச. 8,10). அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன்

.

600

4

77

அளி 8-த்தல்

(கம்பரா. 2,9,11). என்னுடைய ஆவி உவந்தளித் தாய் (நளவெ. 138). ஆழியால் உலகு அளிக்கும் (ஏரெழு. 4). நெடுஞ்சுனை புதையப் புகுந்து எடுத்து அளித்தும் (கல்லாடம் 13, 14). தானே படைத்து உலகைத் தானே அளித்து (நூற்று, அந். 14). புறவ நன் மடந்தை ... மகப் பயந்து அளிக்கும் (சிவ ஞா.காஞ்சி. நாட்டுப். 56), 5. அரசு புரிதல். அளி உனக்குரிய நாடு (கம்பரா. 2, 13, 124). சதகோடி கற்பம் அளிக்கும் பெருமானை (குலோத். உலா 247). 6. அருள்செய்தல், அன்பு செய்தல். பண்டினும் நனி பல அளிப்ப (நற். 177, 7). பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி (பதிற்றுப். 79, 3). அஞ்சி னர்க்கு அளித்தலும் வெஞ்சின மின்மையும் (சிறு பாண். 210). அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூட் சேஎய் (முருகு. 271). அளித்து அஞ்சல் என்ற வர் நீப்பின் (குறள். 1154). எனக்கு என்றும் அளிக் கும் மணிமிடற்றன் (தேவா. 7,4,10). சாதல் தீர்த்து அளித்த வீர (கம்பரா. 5, 14, 12). 7. இரங் குதல். இரா அளித்தாயிருந்தது (குறள்.

பரிமே.).

அளி - த்தல் 11வி. 1. 4

விருப்பம்

1168

உண்டாக்குதல்.

அளித்து அயில்கின்ற வேந்தன் அஞ்சிறைப்பறவை ஒத்தான் (சீவக. 192). 2. இன்பம் உண்டாகுதல். காமங் கொடிவிட அளிப்ப துனிப்ப (பரிபா. 6, இன்பமுண்டாகப் புலப்பார்கள்- பரிமே.). மணந்து கொள்ளுதல். உரவுநீர்ச்சேர்ப்ப ளினை அளியே (கலித். 127, 22).

103-104

840

3.

அரு

அளித்தாயும்

அளி - த்தல் 11வி. 1. படைத்தல். காத்தாயும் நீயே (சூளா. 539). யாவையும் அயன்கணின்று அளிப்பான் (கந்தபு. 6,13,9). அனைத்துலகும்... அமைத்து அளித்துத் துடைப்பது நீ (திருவரங். கலம். 1). 2. அமைத்தல். கரை அளித் தற்கு அரிய படைக்கடல் (கம்பரா. 3, 5, 136).

அளி-த்தல் 11 வி. பெறுதல். துகள் இலாத துரு வன் அளித்திடும் மகவு (செ. பாகவத. 4, 4, 2). காந்தார பதி அளித்த மெய்க் கன்னி (பாரதம். 1,

2, 23).

அளி 7 - த்தல் 11 வி. செறித்தல். கொடுத்தலும் காத் தலும் செறித்தலும் அளித்தல் (பிங்.3107)

அளி - த்தல் 11வி. பரப்புதல், வீசுதல். விரை அளித்த கான் புகுந்தேம் (கம்பரா. 3,5,136).