உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துறையம்பி

எதிர்ந்த அறத்துறை (புறநா. 175, 10). அறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி (சிலப். 14, 28). அறத் துறை கேட்டலும் ... பகுவாய் ... உரப்பின (கம்பரா. 5, 3, 137). அறத்துறை அறிந்த நீ (செ. பாகவத. 1, 8, 40). அறத்துறைதனை ஓர் அணுத்துணையும் எண்ணிலான் (கருவைப்பு. 28, 2). 2. நல்வினை, புண்ணியம். நினைவருந் திறத்த புரத்தல் அறத் துறை (ஞானா. 24, 46).

அறத்துறையம்பி பெ. வெள்ளக்காலத்தில் ஏழைகளை ஏற்றிச் செல்லும் படகு. உறுவருஞ் சிறுவரும் ஊழ் மாறுய்க்கும் அறத்துறையம்பி (புறநா.381,23-24).

அறத்தைக்காப்போன் பெ. ஐயனார். அறத்தைக்காப் போன் ஐயன் பெயரே (பிங். 117).

...

அறத்தொடுநிலை பெ. (இலக்.) களவைவெளிப்படுத்த லாகிய அறத்தொடு நிற்கை என்னும் அகத்துறை. ஆற்றுறத்தோன்றும் அறத்தொடு நிலையே (நம்பி

யகப். 47).

அறத்தொடுநிற்றல் பெ. (இலக்.) தலைவன் தலைவி யிடையே வளர்ந்து கொண்டுள்ள உறவை உறவி னருக்கு முறையே அறிவுறுத்துகை. தோழி அறத் தொடு நிற்றல் (தொல். பொ. 203 இளம்.). செவிலி அறத்தொடு நிற்றலின் (நம்பியகப்.185).

அறதனம் பெ. மிருதபாடாணம்.(சங். அக.)

அறதேயன் பெ. தருமங்களை நடத்துவோன். அறதேயன் ஒருவனுக்குப் புடவை முதலுக்கு நெல்லுப்பதின் கலமும் (தெ.இ.க. 4,223).

அறந்தெரிதிகிரி பெ. ஆணைச் சக்கரம். அறந்தெரி திகிரிக்கு வழி அடையாகும் (பதிற்றுப். 22, 4).

அறநிலை 1 பெ. வடமொழிநூல் கூறும் பிரமம் என் னும் மணவகை. பிரமம் என்பது நாற்பத்தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தாற்குப் பன்னீராட் டைப் பிராயத்தாளை அணிகலன் அணிந்து கொடுப்பது ... இதனை அறநிலை என்று உணர்

வது (இறை.அக. 1 உரை).

அறநிலை ' பெ. 1. தருமம் கோயில் முதலியவற்றைப் பாதுகாப்பதற்குரிய நிலையம். (கோயில் வ.) 2. கோவில். அறநிலை பலவும் வணங்கிய பின்னர் (சான்றாண்

GOLD 653).

அறநிலைப் பொருள் பெ. நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள். (செ. சொ. பேரக.)

49

0

அறப்பரிகாரம்

அறநிலையத்துறை பெ. (இக்.) கோயில் போன்ற சமய அறநிலையங்களைப் பேணும் அரசுத்துறை. இன்று கோயிலுக்கு அறநிலையத்துறை ஆணையாளர் வந்தார் (செய்தி.வ.)

அறநிலையறம் பெ. நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாவாறு அரசன் பாதுகாக்கை. வருணக் காப்பிற் பிறழா நெறிநிலை பெறுதற்குரித்தாய்ப் பேணும் பெற்றி அறநிலையறம் என்றறைந்தனர் புலவர் (பிங்.761).

அறநிலையின்பம் பெ. ஒத்த கன்னியை மணந்து இல் லறத்தினின்று நுகரும் இன்பம். ஒத்தகுலமும் ஒத்த ஒழுக்கமும் ஒத்த குணமும் ஒத்தஆயுளும் அத்தக வுடையது அறநிலையின்பம் (முன். 765).

அறநீர் பெ. நீர்த் தேக்கத்தின் அளவைப்பொறுத்து விடப்படும் நீர். (செ. ப. அக. அனு.)

அறநூல் பெ. 1. தருமசாத்திரம். முறை அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி (குறள்.388 பரிமே.) பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர் (பெருந். 180). 2. ஒழுக்கவியல். (மானிடவியல் க. அக. ப. 93)

அறநெறி பெ. தருமமார்க்கம். அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (புறநா. 55,10). அறநெறி நிறீஇ உலகாண்ட அரசன் (கலித். 129, 4). அரசியல் பிழையாது அறநெறி காட்டி (மதுரைக். 191). அறிமின் அறநெறி (நாலடி. 172). அறநெறியை உரைத்தான் (இயற். நான்முகன் திருவந். 17). அற நெறிச் சமயங்கள் ஆறும் தழைப்ப (மெய்க். பாண்டி

...

யர் 14, 7).

.

அறநெறி2 பெ. ஊசலாங் கொடி. (மர இன. தொ.)

அறநெறிச்சந்தேகசாத்திரி

வோன். (கிறித். வ.)

பெ. சாத்திரஆய்வு செய்

அறநெறிச்சாரம் பெ. முனைப்பாடியார் இயற்றிய ஓர் அறநூல்.(நூ.பெ.)

அறப்பயிர் பெ. தருமச்செயல். அறப்பயிர் விளைத்து

(மெய்க். பாண்டியர் 23, 13).

அறப்பரிகாரம்

(அறப்பரிசாரம்) பெ.

துறந்தோர்

(சிலப். 2,8

முதலியோர்க்குச் செய்யும் பணிவிடை.

அரும்.)