உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறக்கட்டளை

அறக்கட்டளை பெ. (இக்.) குறித்த அறம்தொடர்ந்து நடைபெறும் பொருட்டு ஏற்படுத்தப்படும் நிதி. பல் கலைக்கழகத்தில் பெரியபுராண அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது (செய்தி.வ.).

அறக்கடவுள் பெ. 1. இயமன். தொல்லறக்கடவுள் அருளுடன் அளித்த (பாரதம். 4, 1, 3). இறக்கம் இவ்வுடலென்று அண்ணல் நல்லறக்கடவுள் சொற்ற னன் அவர் தெளிந்தார் (செ. பாகவத. 7, 2, 15} அறக் கடவுள் தாக்கும் எனப் பகர்வர் (குமணசரித் 127).2. தருமதெய்வம். ஒருபது மடவார் அறக் கடவுளுக்கும் ஒருபதின் மூவர் காசிபற்கும் (செ. பாகவத. 6, 2, 9). அறக்கடவுள் எண்ணுதலாவது அவன் கெடத்தான் நீங்க நினைத்தல் (குறள். 204 பரிமே.). 3. விதுரன். நல்லறக் கடவுளுக்கு முரையா (பாரதம். 1, 3, 54).

அறக்கடை

(அறங்கடை) பெ. தீவினை, பாவம். அறக்கடை தணப்ப (சிவஞா. காஞ்சி. பதிகம் 4). அறக்கதிராழி பெ. தருமசக்கரம். அறக்கதிராழி திறப் பட உருட்டி (மணிமே. 5, 76).

அறக்கப்பறக்க வி. அ. 1. விழுந்துவிழுந்து, ஓடியாடி. அறக்கப்பறக்கப் பாடுபட்டும் படுக்கப்பாயில்லை (பழ. அக. 768). 2. மிக்க விரைவாக. அறக்கப்பறக்க வருகிறான் (பே.வ.)

அறக்கப்பாலை பெ. திருநாமப்பாலைப்பூடு. (சித். அக./ செ.ப அக. அனு.)

அறக்கப்பிளப்பி

(அறகப்பிளப்பி)

பெ. திருநாமப்

(வைத். விரி. அக.ப.24)

பாலைப்பூடு.

அறக்கம்' பெ. திருநாமப்பாலை.

(சித். அக.)

அறக்கம் 2 பெ. சுக்கு. (சாம்ப. அக.)

அறக்கமா பெ. புளிமா. (முன்.)

அறக்கருணை பெ. தெய்வ அருள். (சங். அக.)

அறக்கழிவு பெ. உலக அறவழக்கத்திற்குப் பொருத்த

மில்லாமை. அறக்கழிவுடையன

வரினே (தொல். பொ. 214 இளம்.).

பொருட்பயம்

அறக்களவழி பெ. வேளாண் தொழிலைக் கூறும் புறத்

துறை. (மாறனலங். 120 உரை)

அறக்களவேள்வி பெ. புண்ணிய யாகம்.

அறக்கள

வேள்வி செய்யாதியாங்கணும் (சிலப்.28,131).

88

அறங்காவல்

அறக்கற்பு பெ. அமைதி நிலையமைந்த கற்பு. கோப்

பெருந்தேவி

அடியார்க்.).

அறக்கற்புடையாள் (சிலப். பதிகம் 42

அறக்காடு பெ. சுடுகாடு. (வின்.)

அறக்குளம் பெ.

தருமத்திற்காகத்

தோண்டிய நீர்

நிலை. காவோடு அறக் குளம் தொட்டல் மிக

இனிதே (இனி. நாற்.23).

அறக்குளாமீன் பெ. கடல்மீன் வகை. (aflair.)

அறக்கூழ்ச்சாலை பெ. தருமத்திற்குக் கஞ்சி ஊற்றும் இடம். சிறப்புஞ்செல்வமும் பெருமையுமுடையோர் அறக்கூழ்ச்சாலை அடையினும் அடைவர் (வெற்றி

Gal. 51).

அறக்கொடி பெ. பார்வதி. (த.த. அக.) அறக்கொடிபாகன் பெ. சிவன். (முன்.)

அறக்கொள்(ளு)-தல் 2 வி. முழுவதும் பெறுதல். விலைத்திரவியமும் இறைத்திரவியமும் அறக் கொண்டு (தெ.இ.க.3,16).

அறக்கோட்டம் பெ. தருமசாலை. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை (மணிமே. 19 தலைப்பு.). அறக்கோல் பெ. செங்கோல். அறக்கோல் வேந்தன் அருளிலன் கொல்லோ (LAGOT. 15, 47).

அறகப்பிளப்பி (அறக்கப்பிளப்பி) பாலைப்பூடு. (செ. ப. அக. அனு.)

பெ. திருநாமப்

அறங்கடை (அறக்கடை) பெ. தீவினை, பாவம். அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால் (மணிமே. 11,113). அறங்கடை நின்றாருள்ளும் ஆற்றவுங் கடையனாகி (திருவிளை. பு. 27,9). உயிர்கள் அயர்த் தும் அறங்கடைநீணீர் தோயாமே (மீனா. பிள்.32).

அறங்கரை-தல் 4 வி. தருமத்தைச் சொல்லுதல். அறங் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசான் (தொல். சிறப்புப்.10). அறங்கரை நாவினா னும் நிகழ்ந்தனன் (திருவால. பு. 37,51). அறங்கரை மழலைச் செவ்வாய் அரும்பெறல் புதல்வர் (செ.

பாகவத. 7, 2, 44).

அறங்காவல் பெ. 1. கோயில், சைத்தியம் முதலாயின காக்கும் தொழில். அறங்காவலுக்கு உடைப்படை யால் ஒரு சேவகரையும் ஒரு வேலி நிலமும் இட் டுக் குடுத்து (தெ.இ.க. 4, 1396). 2. கோயில் நடை முறைகளைப் பேணுகை. (கோயில் வ.)