உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளிஞ்சி

(அளஞ்சி, அளஞ்சை) பெ. அழிஞ்சில்.

அளிஞ்சி (மரஇன.தொ.)

அளித்து பெ. 1. (இரங்கத்தக்கது என்பதால்) எளிமை. தாய்த் தாய்க் கொண்டேகும் அளித்து இவ்வுலகு (நாலடி. 15 தாயை நாடிக் கொண்டு இறந்து போகா நின்றது இவ் ஏழை உலகு-தருமர்). 2. இரக்கத் திற்குரியது. விலங்கும் கடற்றானை வேற்றார் முனைபோல் கலங்கும் அளித்தென் கடும்பு (புற.

வெண். 213).

அளித்தையல் பெ. சித்திரப்பூத் தையல் வகைகளுள் ஒன்று. (சித்திரப்பூத்தையல் ப.197)

அளிதா(தரு) - தல் 13 வி. கனியச்செய்தல். அளி தரும் ஆக்கை செய்தோன் போற்றி (திருவாச. 3,120)

...

அளிது பெ. 1. அளி செய்யத்தக்க பொருள், இரங்கத் தக்கசெயல். அளிதோ தானே பாரியது பறம்பே (புறநா. 109, 1). அளிதோ தானே நாணே காமம் நெரிதரக் கைந் நில்லாதே (குறுந். 149). பாக் கமும் உறை நனி இனிதுமன் அளிதோ தானே (நற். 101, 5-6). திருவரைமேல் அன்பு அளிதோ (பரிபா. 8,64). வடிவம் இது மூப்பு அளிது (சீவக. 2023). 2. அன்பு. தீபமிடல் மலர்கொய்தல் அளி தின் மெழுகல் (திருமந். 1502).

அளிந்தம் பெ. கோபுரவாசல் திண்ணை. அவ்வழித் திண்ணை அளிந்தம் என்றாகும் (பிங். 637). கோபு ரங்கள் தெளிபணிக்கு அளிந்தம் (சேதுபு. நாட்டுச்சி.

102).

அளிந்தார் பெ. அன்புடையோர். அளிந்தார்கள் ஆயி

னும் ஆராயானாகித் கெடும் (பழமொ.நா. 42).

அளிப்பாய்ச்சு - தல்

-

தெளிந்தான் விரைந்து

5 வி. இரும்புக்கம்பி முதலியன

கொண்டு வரிச்சட்டமிடுதல், கிராதியிடுதல். அது அளிப் பாய்ச்சிய வீடு (திருநெல்.வ.).

அளிப்பிள்ளை பெ. இளவண்டு. மது உண்டு அளிப் பிள்ளை வாய்குழறும் (அழ. கிள். தூது 46).

அளிம்பகம் 1 பெ. குயில். அளிம்பகம் குயில் (நாநார்த்த.

985).

அளிம்பகம்' பெ. இருப்பை. அளிம்பகம் அளிம்பகம் இருப்பை

(முன்.).

179

அளுங்கோடு!

அளிம்பகம் 3 பெ. தவளை. அளிம்பகம் தவளை (முன்.).

அளிம்பகம் + பெ.

தாமரைப் பூந்தாது. அளிம்பகம்

அம்புயப் பூந்தாதே (நாநார்த்த 985).

அளியடி - த்தல் 11. வி. குறுக்கும் நெடுக்குமாக மூங் கிற் பிளாச்சுகள் அல்லது இரும்புக் கம்பிகளைப் பொருத்துதல். (தொ.வ.)

அளியன் பெ. 1. இரங்கத்தக்கவன். விருந்தினன் அளி யன் இவனென (புறநா.376, 12). அளியன் தானே முதுவாய் இரவலன் (முருகு. 284). நிறையரியர் மன் அளியர் என்னாது காமம் (குறள். 1138). அளியன் நம்பையல் என்னார் அம்மவோ (தொண்டரடி. திரு மாலை 37). அழலினால் அளியன் ஆவி அடுவதோ அழகிதென்னும் (சூளா. 1022). அளியன் என்ன ஆசைப்பட்டேன் (திருவாச. 25,5). 2. அன்புமிக்க வன். அளியன் போலப் புலம்பினன் (கந்தபு. 4, 8,

198).

அளிலாமயம் பெ. (அளில் + ஆமயம்) வாதநோய். (வைத். விரி. அக. ப. 11)

அளிவா (வரு)-தல் 13 வி. கருணை காட்டுதல். அளிவந்த அந்தணனைப் பாடுதும் காண் (திருவாச. 8,18).

அளீகம்1 பெ. வெறுப்பு. அளீகம் வெறுப்பு

(நாநார்த்த.992).

அளீகம் 2 பெ. பொய். அளீகம் பொய் (முன்.).

...

...

அளீகம்' (அளிகம்") பெ. நெற்றி. அளீகம் நெற்றி (முன்.).

அளுக்கு-தல் 5வி. மனங்குலைதல். வெள்கல் துண் ணெனல் தெருமரல் அளுக்கல் ஞொள்கல் பிறவும் குலைதலின் நுவல்பெயர் (பிங்.1853).

அளுகாச்சு பெ. அழுகை. அப்பா திட்டியபோது மகளுக்கு அளுகாச்சு வந்தது (கோவை வ.).

அளுகுலம் பெ. அளிஞ்சி. (வாகட அக.)

அளுங்கு (அழுங்காமை2, அழுங்கு) பெ. 1. எறும்பு தின்னும் ஒருவகை விலங்கு. (பச்சிலை. அக.) 2. ஒரு வகைக் கிளிஞ்சில். (சாம்ப. அக.)

அளுங்கோடு' பெ. ஒருவகை மருந்து. (வைத், விரி. அக.

ப.10)