உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதக்கண்

அற்புதக்கண் பெ. அபிநயக் கண்வகை. (பரத. 1, 95)

அற்புதசயா பெ. கடுக்காய்மரம். (மரஇன. தொ.)

அற்புதத்திருவந்தாதி பெ. காரைக்கால் அம்மையார் பாடிய நூல். அற்புதத் திருவந்தாதி அப்பொழு தருளிச் செய்வார் (பெரியபு. 24,52).

அற்புதப்பாவை பெ. (காப்.) மயனால் நிருமிக்கப்பட்டு முக்காலச்செய்தியைக்கூறும் வியத்தற்குரிய பாவை. அந்தில் எழுதிய அற்புதப் பாவை (மணிமே.7,95).

அற்புதம்1 பெ. 1. வியப்பு, அதிசயம். கடவுட் பாவை அங்கவற்குரைத்த அற்புதக்கிளவியும் (மணிமே. 21,

8).

வெண்ணெய் நல்லூரில் அற்புதப்பழ ஆவணங் காட்டி (தேவா. 7, 68,6). புவியுள் நான் கண்ட தோர் அற்புதம் கேளீர் (பெரியாழ். தி. 3, 6, 7). அற்புதமான அமுத தாரைகள் (திருவாச. 3, 174). அற்புதம் அமரரும் எய்தல் ஆவது (கம்பரா. 4, 13, 33). அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே (கருவூர். திருவிசை. 6,3). மலைய வெற்பின் அற்புதம் காட்டும் அந்நீர் (சேதுபு. நாட்டுச். 24). தொண்டர் களும் விண்டு அருள் மெய் அற்புதப் பொற்பு (பச்சைநா.பிள். 6, 6). அமரர்கோற்கு உடலம் ஈந்த அற்புத முனிவன் நீயே (குமணசரித். 259). அற்புதம் ஈதுநிசம் ஆச்சுது (திருவனந்தை விலா. 286).2. ஒன்பது வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று. சிங்காரம்...அற்புதம் ... நவரசம் (திவா.2695). 3. (அணி) செய்யுள் அணி வகை. புகழ்ச்சி அற்புதம் ...உவமை விகற்பிப் பரே (வீரசோ. 154). அற்புதவாய்மையின் அறைவ தற்புதமே (மாறனலங். 138).

201

அற்புதம் 2 பெ. இரக்கச்சொல். அற்புதம் இரக்கச் சொல்லும் அதிசயந்தானே (அரும்.நி.646).

அற்புதம்3 பெ. அறிவு, ஞானம். தென்மதுரையிலே மணவேள்வியில் அற்புதம்பெற வந்த முனிவர்

குழாத்தை (திருவால. பு. பயகரமாலை 5). அற்புதமாம் மாணிக்கவல்லி மணவாளற்கு யாம் கொடுக்கும் காணிக்கை (மதுரைச் உலா 130). தெளிதரத் தெருட்டும் அற்புதக் காதை கட்டுரைப்பாம் (கச்சி. காஞ்சி. பாயி. 4).

அற்புதம் பெ. அழகு. நவ்வி ... பொலம் அற்புதம் ... அழகே (திவா. 1581). அம்பிகை திருமணத்தின் அற்புதமும் (சிவமகாபு. சோதிலிங். 6). கற்றவர் மனத்து உறையும் அற்புதம் (கலைமகள் பிள். 41).

48

4

அற்றநிலை

அற்புதம்" பெ. சூனியம். (சி.போ.பா.9,2)

அற்புதம்" பெ.

ஆயிரங்கோடி.

பெருங்கடாகத்துறு

பருமை அற்புத யோசனையாம் (சிவப்பிர. விகா. 272). எண்ணிலா அற்புத நற்சீவர் (பச்சைநா. பிள். 4, 8). அற்புதம்' பெ. தசைக்கணு. (நாநார்த்த. 1057)

அற்புதம் 8 பெ. சிதம்பரம். (த. த. அக.)

அற்புதமூர்த்தி பெ. 1. (ஞானமே வடிவாகவுடைய ) அருகக்கடவுள். அற்புதமூர்த்தி தன் அலர்தரு தன் மையின் (நன். நூற்சிறப்புப். 5). 2. கடவுள் (த. த. அக.) அற்புதவதி பெ. அரிவாள்மணைப்பூண்டு. (மரஇன. தொ.) அற்புதவல்லி பெ. திருமகள். தேங்கமலத்து அற்புத வல்லியவளே (குலோத். உலா 136).

அற்புதவாதம் பெ. இசிவு நோய்வகை. (ராட். அக.)

அற்புதவாயு பெ.

அற்புதவாத நோய். இருந்தவர் அறத்தர் ஆயுநற்றேவர் இவருக்கு அன்பில்லோர் அற்புதவாயு வாய்க்கோணர் (கடம்ப. 4. 614).

அற்புதன் பெ. 1. வியக்கத் தக்கோன். அற்புதன் காண் சொற்பதமுங் கடந்து நின்ற கடந்து நின்ற எம்மான் (தேவா. 6,64,10). அற்புதன் அருஞ்சிறையின் மீட்டநாள் (கம்பரா. 5, 4,20).2. கடவுள். அற் புதன் காண்க அனேகன் காண்க (திருவாச. 3,39) அற்புதன் அற்புதரே அறியும் ... சிற்பதம் (கம்பரா. 1,8,21). அற்புதர் அடிபணிந்து அலர்ந்த செந் தமிழ்ச் சொற்றொடை பாடி (பெரியபு. 28,251). அற்புத அகோசர (தாயுமா. 6,1).

(த. த. அக.)

3. கம்மாளன்.

அற்புதாகமம் பெ. (கிறித்.) புதிய ஏற்பாட்டுள் ஒரு பகுதி. (ராட். அக.)

அற்றகாரியம் பெ. தீர்ந்த செய்தி. அறுபொருள் தீர்ந்த பொருளென்றுமாம் அற்றகாரியம் என்றாற் போல (சிலப். 17 முன்னிலைப். 2 அடியார்க் ).

அற்ற குற்றம் பெ. குறை, இழப்பு, நட்டம். (வட்.வ.) அற்றத்துவயல் பெ. இறுதி வயல். (நாஞ்.வ.) அற்றநிலை பெ. பற்று இல்லாத நிலை. ஒளியின் ஏய்த்துத் தன்னோடு ஒருக்கி அற்றநிலை அருள் ஆனந்தன் (ஆனந்த. வண்டு. 10).