உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள்ளு 1-தல்

அள்ளு1-தல் 5 வி. 1. செறிதல். அள்ளிலை அணிந்த வைவேல் (சீவக. 614 அள்ளுதல்-செறிதல். நச்.).2. (ஒரு சேரப்) பரவுதல். புடை பெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள்வற்றே பசப்பு (குறள்.1187).

.

அள்ளு 2-தல் 5வி. 1. (கையால்) வாரியெடுத்தல். அள்ளிக்கொள்வன்ன குறுமுகிழ ஆயினும் கள்ளி மேல் கைந் நீட்டார் சூடும்பூ அன்மையால் (நாலடி. 262). பூழ்தி அள்ளி அவிக்க நின்றாடும் எங்கள் அப்பன் (காரை. பதிகம் 1, 2). அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டிருந்த ஆப்பாடியாரே (தேவா. 4, 48, 7). அள்ளி நீவெண்ணெய் விழுங்க (பெரியாழ். தி. 2, 7, 5). மறியின் குருதியின் மண்ணும் அள்ளிச் சென்றொரு வேலர் கை (அம்பி.கோ. 263). வெண் திரு நுண்தூள் அள்ளிச் சாத்தும் (சேதுபு. கடவுள். 8). குறவர் செந்தினையோடு கருந்தினை அள்ளிச் சிதறு புனங்கள் (திருமலைமுரு. பிள். 28). பூச னைக்கு முன் அமுது நன்கனி அள்ளியே நாவி லிட்டவர் ஞமலியாகுவர் (தீர்த்தகிரிபு. 1,49). அள்ளிப் பருப்புமிட்டு (நல்லதங். ப.31). சத்தி புகழாம் அமுதை அள்ளு (பாரதி. தோத்திரம். 26).2 பற்றி யெடுத்தல். சுள்ளி சுனை நீலம் ... அள்ளி அளகத் தின்மேல் ஆய்ந்து (திணைமாலை. 2). அள்ளிப் பறித் திட்டு அவன் மார்பில் எறிந்து (நாச்சி. தி.13,8). பழன நன்னாரை ...கடைசியர் கண்ணிழல் கயலென அள்ளி நாணுறும் (கம்பரா. 1, 9, 6). 3. வாரிக்கொண்டு போதல், (நெஞ்சைக்) கவர்தல். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் (பாரதி. தேசியம்.

2,7).

அள்ளு-தல் 5 வி. நுகர்தல். அள்ளுற அளிந்த காமம்

(சீவக.1387).

அள்ளு-தல் 5 வி. எற்றுதல். (செ.ப.அக.)

அள்ளுக பெ. பற்றிரும்பு. (முன்.)

G

அள்ளு பெ. வண்டி வில்லைத் தாங்கும் கட்டை. (சங்.

அக.)

அள்ளு' பெ. காது. (முன்.)

அள்ளு8 பெ. குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம். (செ. ப. அக.)

அள்ளு' பெ. பெ. கைகொள்ளும் அளவாக அள்ளிக் கொள் ளும் தானியக் கூலி. (முன்.)

10

அள்ளு 1 பெ. விலாவெலும்பு. (செ.ப.அக .அனு.)

466

அள்ளூறு -தல்

அள்ளு 11 பெ. நெருக்கம். (மதுரை. அக.)

அள்ளு 12

பெ. கூர்மை. (முன்.)

அள்ளு எந்திரம் பெ. ஆழ்குழியில் விழுந்துவிட்ட எந்திரம் முதலியவற்றைத் தூக்கியெடுக்கும் கருவி. (எந்திர.க.

சொ. ப. 80)

அள்ளுக்கட்டு-தல்

5 வி. 1. பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல், பற்றிரும்பு கட்டுதல். (கதிரை. அக.) 2. பலப்படுத்துதல். (செ.ப. அக.) ஆதரவாகச் சில சொற்கள் சொல்லுதல். (தஞ்.வ.)

3.

அள்ளுக்காசு பெ. சந்தையில் விற்பனையாளரிடமிருந்து வாங்கும் கட்டணம்.

(வட். வ.)

அள்ளுகொண்டை பெ. அள்ளிச் செருகியிடும் கொண்டை வகை. (பே.வ.)

அள்ளுகொள்ளை பெ. 1. பெருங்கொள்ளை. (செ. ப. அக.) 2. மிகமலிவு. (இலங். வ.)

அள்ளுச்சீடை பெ. சீடை என்னும் தின்பண்டவகை. (செ.ப.அக. அனு.)

அள்ளுமாந்தம் பெ. இருமல் மார்ச்சளியுடன் குழந்தை களின் விலாவைத் தூக்கி மூச்சுவிடச் செய்யும் ஒரு நோய். (பைச.ப. 224 )

அள்ளுரல் பெ. அரணை அல்லது காட்டுக்கரணை.

(சாம்ப. அக.)

அள்ளூறு-தல் 5வி. 1. (ஒன்றை அடைய வேண்டும் என்ற ஆசையால்) வாயூறுதல். ஆரமுதை அமரர் கோனை அள்ளூறி எம்பெருமான் என்பார்க்கு (தேவா. 6,86.3). அமுதன் என்று அள்ளூறித் தித் திக்கப் பேசுவாய் (திருவாச. 7, 3). அள்ளூறும் உழு வல் அன்பின் தொண்டர் (பச்சை நா.பிள். 10, 4). 2. (உளம்) கசிதல். உருகுவது உள்ளங் கொண் டோர் உருச்செய்தாங்கு எனக்கு அள்ளூறு ஆக்கை அமைத்தனன் (திருவாச. 3,177). அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு (கருவூர். திரு விசை. 6,3). 3. ஊற்றெடுத்தல், பெருகுதல். அடியார் அகத்தில் அள்ளூறும் அள்ளூறும் தீஞ்சுவைத் தெள்ளமுதம் அன்னாய் (கச்சி. காஞ்சி. கழு. 220). அள்ளுற ஆசை கிடந்தூற்ற (திருப்பூவண. உலா 291). அள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேறல் (மீனா. பிள். 76). உறவினர் அல்லாரைத் தம்முளே அடக்காராகில் அள்ளூறத் தீங்குசெய்வார் (பிரபோத. 2,18)