உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மா. இராசமாணிக்கனார்


புல்லாகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;
இடன்இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவுஎனக்
கடன்இறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருளாகுமோ? 20

வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்
தடமென்தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை;
எனஇவள்,
புன்கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல்
அன்பு அன்று என்று யான்கூற, அன்புற்றுக் 20

காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தங்கியாங்குத் தாழ்பு நின்
தொல்கவின் தொலைதல் அஞ்சி என்
சொல்வரைத் தங்கினர் காதலோரே."

கணவன் பிரிந்துபோய் விடுவனோ எனக் கலங்கிக் கண்ணீர் விடும் என் ஆருயிர்த்தோழி, கலங்காதே! நான் கூறுவதைக் கேள்: நான் நம் தலைவனைக் கண்டேன்; கண்டு, "தலைவ, பொருளீட்டி வரச் செல்வார், கடந்து செல்ல வேண்டிய காட்டு வழியும், காலமும் கொடுமையுடையன. உலகம் உருவாகும் காலத்தில், அவ்வுலகத்திற்கு முன்னே தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலான தேவர்கள், அடங்காது அழிவு செய்யும் அவுணர்களின் ஆணவத்தை அழிக்குமாறு வந்து வேண்டியக்கால், முக்கண் முதல்வனாகிய சிவன் கூற்றுவன் போல் சினம் கொண்டு, அழிவு செய்யும் அவ்வரக்கர்களைக்கொன்று அழிக்கும் ஆற்றலோடு அவர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச் சினந்து நோக்கியபொழுது, அவன் முகம் செந்தீப் பொறிகளைச் சிதறியது போல், வெண்கதிர் வீசும் ஞாயிறு வெயிலைக்கக்கும்; அதனால், பிறரால் சினந்து அழித்தற்கு அரிய மழுப்படை ஏந்தியோனாகிய அச்சிவன் சினந்து நோக்கியதும் அத்திரிபுரக் கோட்டைகள் இடிந்து பொடியானது போல், மலைகள் வெப்பத்தால் வெடிபட்டு, வழிச் செல்வார் செல்வதற்கு இயலாதவாறு வழியெங்கும் சிதறிக்கிடக்கும் அக்கொடிய வழியை உன்னை மறக்க முடியாத பெருங்காதல் உடைய இவள் ஈண்டுக் கிடந்து வருந்தி அழத் தனியே விடுத்துச் செல்லத் துணிந்து விட்டாய்; செல்லும் முன் நான் கூறுவதைக் கேட்பாயாக!

'முன்பு சேர்த்து வைத்த செல்வமெல்லாம் தொலைந்து விட்டமையால், இப்போது வந்து இரக்கும் வறியோர்க்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/29&oldid=1687995" இலிருந்து மீள்விக்கப்பட்டது