42
மா. இராசமாணிக்கனார்
அரசனுடைய கொடுங்கோல் ஆட்சி போல், ஞாயிறானவன் கொடிய வெப்பம் மிக்க கதிர்களைக் கக்கிச் சினந்து சுடுவதால் வண்டுகள் வந்து மொய்க்குமாறு ஒழுகுகின்ற மணம்நாறும் மதுநீரைப் பண்டு உடையவாய், இன்று தளர்ந்து போன அழகிய யானை, வறண்ட மேட்டு நிலத்தை உழும் கொல்லைக் கலப்பை போல், கொம்புகள் இரண்டையும் தரையில் ஊன்றித் தலை சாய்த்துக் கிடக்க, எதற்கும் நிலை கலங்கா நீண்ட மலைகளும் வெப்பத்தால் வெடிபட்டுக் கலங்க, கடந்து செல்வதற்கு அரியவாகிய கொடிய காட்டு வழியை எம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே கடக்கத் துணிந்த உமக்கு ஒன்று கூற விரும்புகிறேன். தலைவ அன்புகூர்ந்து அதைக் கேட்டுவிட்டு அப்பாற் செல்வாயாக!
கேட்பவர்க்கு இன்பம் மிகுமாறு, விரலால் இயக்கப்பெற்று இசை எழுப்பும், யாழ்த்தண்டில் பிணிக்கப் பெற்ற நரம்புகள் ஏழும், இனிய இசை எழுப்பும் தம் பயன்கெட்டுப் போகுமாறு, இடை நின்ற நரம்பு ஒன்று திடுமென அறுந்து போவதைக் காட்டிலும் விரைந்து அழிந்து போகும் செல்வத்தைச் சிறந்தோர் விரும்புவார்களோ?
ஒருவர் தன்னை விரும்பித் தேடாதிருக்கவும், அவரைத் தானே விரும்பி அடைந்த ஆகூழ், அவரை விட்டுப் பிரியும் பொழுது, உலகத்தவரெல்லாம் எள்ளி நகைக்குமாறு அவரை அடைவதற்கு முன் அவர் பெற்றிருந்த புகழையும் அழித்து, பொழுதைக் காட்டிலும் விரைந்து பிரிந்து போகும். அவ்வியல்புடைய ஆகூழினும் இழிவுடையது செல்வம். அத்தகைய செல்வத்தைச் சிறந்தோர் விரும்புவார்களோ?
சினந்து அழிக்க எண்ணியபோது, தமக்கு உயர்வு உண்டாகத் தாம் பெறும் செல்வத்தை எண்ணிப் பாராமல், தன் உயர் வாழ்விற்கே உழைத்த அமைச்சர்களையும், அவர்கள் தன் பொருட்டு உழைத்தவர் ஆயிற்றே என்ற கருணையுள்ளத்தால் அவரை விட்டுவிடாது, கொன்று உயிர் போக்கும் கொடிய அரச வாழ்வைக் காட்டிலும், விரைந்து அழிந்து போகும் செல்வத்தைச் சிறந்தோர் விரும்புவார்களோ?
ஆகவே, தழுவுந்தொறும் இன்பம் தரும் அகன்ற மார்பையுடைய தலைவ! நிலையிலா அப்பொருளை நீ விரும்புவது கூடாது. அப்பொருள் குறித்து மேற்கொண்ட இச்செலவையும் கைவிடுதல் வேண்டும். அதுவே என் வேண்டுகோள்! ஆராய்ந்து பார்த்தால், நாடாளும் பழியின்றி அரசாள, தன் மனை