82 கட்ட விதி (நிலைமை விதி)
82 கட்ட விதி (நிலைமை விதி) படுத்தலாம். வரைபடத்திலுள்ள புள்ளிகள் திண்ம, நீர்ம, வளிம, நிலைமைகளும் ஒருங்கிணைந்த சம நிலையைக் குறிக்கும். இதன் கட்டின்மை எண் பூஜ்யம் ஆகும். இதில் வெப்பம், அழுத்தம் ஆகிய எதையும் மாற்ற இயலாது. நீரின் நிலைமை வரைபடத்தின் மூலம் நீரின் நிலவும் சம் பல்வேறு நிலையை விளக்கலாம். நிலைமைகளுக்கிடையில் நீரின் நிலைமை வரைபடம். நீர்ம, ஆவி நிலைகளில் பனிக்கட்டி, நீர், ஆவி ஆகிய மூன்று நிலைமைகளாக நிலைமைகளும் ஒரே மட்டும் கொண்டவை. அமைப்பாகும். நீர் என்பது திண்ம. அமைகிறது. அனைத்து இயைபுப் ஆசுவே இது பெ யாருளை ஒரு கூறு நீரின் மூன்று நிலைமைகளுக்கிடையில் கீழ்க் காணும் மூன்றுவிதச் சமநிலைகள் நிலவுகின்றன. அவை: 1. நீர்= நீராவி (OP) 2 பனிக்கட்டி= நீர் (00) வரை 3. பனிக்கட்டி நீராவி (ON) படத்தில் OP, OO. ON என்னும் மூன்று கோடுகளும் மேற்கூறிய மூன்று சமநிலை அமைப்பு களை விளக்குகின்றன. OP என்பது நீரின் ஆவி அழுத்தம், வெப்பநிலைக்கு ஏற்ப எவ்வாறு மாறுபடு கிறது என்பதையும், ON என்பது பனிக்கட்டியின் ஆவி அழுத்தம் வெப்பநிலையைப் பொறுத்து எவ் வாறு மாறுபடுகிறது என்பதையும், 00 என்பது பனிக்கட்டி - நீர் சமநிலை எவ்வாறு வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிடுகின்றன. படத்தைக் கூர்ந்து நோக்கின், ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் பனிக்கட்டியும் நீரும் ஒரே ஆவி அழுத்தம் பெற்றுள்ளதைக் காணலாம். 0 என்னும் புள்ளியில் நீரின் ஆவி அழுத்தக் கோடும் (OP) பனிக்கட்டியின் ஆவி அழுத்தக் கோடும் (ON) ஒன்றையொன்று வெட்டிக் கொள் வதைக் காணலாம். வெட்டிக் கொள்ளும் அந்தப் புள்ளியில் பனிக்கட்டி - நீர் - ஆவி ஆகிய மூன்று நிலைமை களும் ஒருங்கிணைந்திருப்பதைக் காண முடிகிறது. ஆகவே இப்புள்ளி மும்மைப்புள்ளி (triple point) எனப்படுகிற கிறது. 0 என்னும் புள்ளி பனிக்கட்டி தன் னுடைய ஆவி அழுத்த நிலையில், அதன் உருகு நிலையைக் குறிக்கிறது. (பனிக்கட்டியின் சாதாரண உருகுநிலை என்பது ஒரு வளி அழுத்தத்தில் குறிப் பிடப்படும் வெப்பநிலையாகும்). மும்மைப் புள்ளியின் தன்மை எது வென்பதை நிலைமை விதியின் மூலம் அறியலாம். நிலைமை விதி F CP + 2 என்பதி லிருந்து, இந்த மும்மைப்புள்ளியின் கட்டின்மை எண் (F) F 1--3 + 2 0 (பூஜ்ஜியம்) எனப் பெறப் படும். ஆகவே இது ஒரு மாறா அமைப்பு (invariant system) ஆகும். அதாவது அனைத்து நிலைமைகளும் சமநிலையில் உள்ளபோது வெப்பம், அழுத்தம் போன்ற காரணிகள் எவற்றையும் மாற்ற இயலாது. மாறாக ஏதாவது ஒரு காரணியை மாற்றும்போது ஏதாவது ஒரு நிலைமை மறைந்து விடும். பனிக்கட்டி - நீர் அல்லது நீர்-ஆவி போன்ற ஏதே னும் இரு நிலைமைகள் மட்டும் இருந்தால் அவ்வ மைப்பின் கட்டின்மை எண் 1 ஆகும். F 1-2+ 2=1.இதில் நிலைமைகளின் எண்ணிக்கையை மாற் றாமல், வெப்பத்தையோ அழுத்தத்தையோ மாற்ற யலும். வரைபடத்தில் OP, 00, ON ஆகிய கோடு சுளுக்கு இம்முடிவுகள் ஏற்புடையன. படத்தில் QOP என்னும் பரப்பில் நீரும், OON என்னும் பரப்பில் பனிக்கட்டியும், NOPக்கு கீழுள்ள பரப்பில் ஆவியும் உள்ளன. இப்பரப்பில் ஒவ் வொரு புள்ளியையும் விளக்க இரு காரணிகள் தேவைப்படுகின்றன. இப்பரப்புகளை OP, OQ, ON என்னும் கோடுகள் பிரிக்கின்றன. OM என்னும் புள்ளிக்கோடு பனிக்கட்டியுள்ள பரப்பினுள் சென் றுள்ளது. இது சிலசமயங்களில் நீர்மங்களைத் திண்ம நிலைக்கு மாற்றாமலேயே அவற்றின் உறைநிலைக்குக் கீழ் குளிரச் செய்யலாம் செய்யலாம் என்பதைக் குறிக்கிறது. இது மிகு குளிர்வு (super cooling) எனப்படுகிறது. OM இல் நீரும், நீராவியும் சிற்றுறுதிச் சமநிலையில் (metastable equlibirium) 12. GIT GYT GDT ஏனெனில் நிலையான ஒரு நிலைமையை இதனுடன் சேர்க்கும் போது உடனே இச்சமநிலை மாறுகிறது. இவ்வாறு நிலைமை வரைபடத்தின் மூலம் பல நிலைகளுக் கிடையில் நிலவும் சமநிலைகளையும் அவை எந்தச் எவ்வாறு சூழ்நிலைகளில் மாறுதலடைகின்றன. என்பதையும் நன்கு அறியலாம். நிலைமை விதி, நிலைமை வரைபடம் ஆகியவற்றால் தனிமங்களின் புறவேற்றுமைப் பொருள்கள் எவ்வாறு, எந்தச் சூழ்நிலைகளில் மாறு படுகின்றன என்பதை அறியலாம். உலோகங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உலோகக் கலவையைத் தரும்போது எவ்வித மாறுதலடைகின்றன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். உறை கல்வை களில் உறைநிலைத் தாழ்வு எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் அறியலாம். படிகங்களில் நீர்த்தல் (deliquescence). நீறுபூத்தல் (efflorescence) ஏன், எவ்வாறு நிகழ்கின்றன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். திண்மக் கலவைகளைத் தூய்மை யாக்கும் முறை பற்றியும். நீர்மக் கலவைகளை எல் வாறு வாலை வடித்துப் பிரித்தெடுக்கலாம் என்பது பற்றியும் அறியலாம். " -பா.குற்றாலிங்கம் நூலோதி.S. Glasston and D. Lewis, Elements of Physical Chemistry, Macmillan & Co. London. 1963: S.H. Maron and C.F. Prution. Principles of