உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கடந்து செல்கை

22 கடந்து செல்கை என்று பெயர். இவ்வமைப்பு இருவித்திலைத் தாவ ரங்களில் காணப்படும். காம்பியமற்ற சாற்றுக் குழாய்த் திரள்கள் மூடிய சாற்றுக் கற்றைகள் (closed vascular bundies) குழாய்க் எனப்படும். சைலமும் ஃப்ளோயமும் கொண்ட திசுக்கள் சாற்றுக் குழாய்க் கற்றைகளை உருவாக்குகின்றன. சாற்றுக்குழாய்க் கற்றைகள் அல்லது கடத்துமிழை யம் இல்லையெனில் நீரும் பிற உணவுப் பொருள் களும் செடிகளின் வளர்ச்சிக்குக் கிட்டா. கடந்து செல்கை கொ.பாலகிருட்டிணன் வான வானியலில் கடந்து செல்கை (transit)என்னும் சொல் லுக்கு மூன்று வரையறைகள் உள்ளன. கோளங்கள், புவியுடன் ஏறக்குறைய ஒரே நேர்கோட் டில் அமையும்போது, புவிக்கருகில் உள்ள சிறிய கோளம், தொலைவிலுள்ள பெரிய கோளத்தைக் கடந்து செல்வதைக் கடந்து செல்கை எனக் கூறலாம். கதிரவனைக் கடந்து செல்வது கதிர் கடப்பு (solar transit) எனப்படும். அதேசமயத்தில் சிறிய கோளத் தைப் பெரிய கோளம் கடக்கும்போது அதைக் கோள் மறைப்பு (occultation) என்றும், கதிரவன், புவிக் கிடையே சந்திரனும், கதிரவன், சந்திரனுக்கிடையே புவியும் வரும்போது சிலசமயங்களில் ஏற்படுவதைக் கிரகணம் அல்லது ஒளி மறைப்பு (eclipse) என்றும் கூறலாம். கதிரவனின் ஒளி சந்திரன் மேல் படாமல், புவி மறைப்பதைச் சந்திர கிரகணம் அல்லது சந்திரன் மறைப்பு (lunar eclipse) என்றும், புளியிலிருந்து கதிர வனைப் பார்க்க முடியாமல் நடுவில் சந்திரன் மறைப் பதைச் சூரிய கிரகணம் அல்லது கதிரவன் மறைப்பு (solar eclipse) என்றும் குறிப்பிடலாம். கள் கதிரவனுக்கும், புவிக்குமிடையே உள்ள கோள் உட்கோள்கள் (inferior planets) என்றும், மற்றைய கோள்கள் புறக்கோள்கள் (superior planets) என்றும் கூறப்படும். புதன், வெள்ளி இரண்டும் உட் கோள்கள் ஆகும். இவை, ஒவ்வொன்றும் தங்கள் சுற்றுப்பாதையில் இயங்கும்போது கதிரவனுக்கும். புவிக்குமிடையில் ஏதேனும் ஒரு நிலையில் ஒரே நேர் கோட்டில் அமையக்கூடும் அந்நிலை அண்மை ஒரு திசைநிலை அல்லது அண்மை இணை நிலை (inferior conjunction) எனப்படும். புதனின் பாதையும், வெள்ளி யின் பாதையும், புவியின் பாதைக்கு முறையே 70 சாய்விலும், 3.40 இருப்பதால் இவை அண்மைத் திசை நிலையில் வரும்போது கதிரவனின் வட்டிற்குச் {disc) சற்று மேலோ கீழோ புதனும் வெள்ளியும் கடந்து செல்லும். ஆனால், சில சமயங்களில் வை கதிரவனைக் கடக்கும்போது, அவற்றின் வட்டின் மீது ஒரு கரும்புள்ளி நகர்வதுபோல் தோற்றமளிக்கும். இது உட்கோளின் கடந்து செல்கை (transit of an inferior planet) எனப்படும். இந்நிலை ஏற்படும்போது கோள், கதிரவன் விளிம்பின் இடப் (அல்லது கிழக்கு ) பகுதியில் சென்று, வலப் (அல்லது மேற்கு ) பகுதி யில் மறையும் உட்கோள்களின் கடந்து செல்கை, குறுகிய, நீண்ட கால இடைவெளிகளில் ஏற்படும். அவை கதிரவனைக் கடக்கும் நேரம் சில சமயங்களில் நாடிகளாகவும் இருக்கும்; சிலசமயங்களில் பல மணி நேரமும் ஆகும். வெள்ளியின் சுடந்து செல்கை ஜுன் அல்லது டிசம்பர் மாதங்களில் எட்டு ஆண்டுகள் இடைவெளி யில் இரண்டிரண்டாக, பின்னர் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுக்கொருமுறை ஏற்படும். 1874, 1882 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இவை மீண்டும் 2004, 2012 ஆம் ஆண்டுகளில் தெரியும். புதனின் கடந்து செல்கை மே மாதத்தில் 7 அல்லது 46 ஆண்டுக்கொரு முறையும் நவம்பர் மாதத்தில் 13 ஆண்டுக்கொருமுறையும் ஏற்படும். 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதன் கதிரவனை குறைய ஐந்து மணி நேரத்தில் கடந்ததைத் நோக்கி மூலம் கண்டனர். ஏறக் தாலை கோள் கடந்து செல்கை போலவே வால் விண் மீன்கள், சிறு துணைக் கோள்கள் (satellites) கதிர வனையும், வியாழனின் நான்கு துணைக்கோள்கள் வியாழன் வட்டினையும் கடப்பதைத் தொலை நோக்கிகள் மூலம் காணலாம். சுடந்து செல்கையி னால், விண்பொருள்களின் தொலைவுகளை அளக் கவும், கோள்களின் பாதைகளைத் துல்லியமாகக் கணக்கிடவும் முடியும். ஒவ்வொரு விண்பொருளும் ஒவ்வொரு நாளும் நடுவரைக்கு இணையாகத் தங்கள் பாதைகளில் இயங்கும் போது உச்சி வட்டத்தை (meridian) இரு முறை கடப்பது உச்சிக்கடத்தல் (transit or culmina- tion) எனப்படும். தொடுவானத்திற்கு (horizon) மேலே இயங்கும்போது உச்சி வட்டத்தைக் கடப்பது மேல் உச்சிக்கடத்தல் (upper transit) என்றும், தொடு வானத்திற்குக் கீழே வட்டத்தைக் கடப்பது கீழ் உச்சிக்கடத்தல் (lower transit) என்றும் குறிக்கப் படும். தாலை இதனை விண்பொருள்கள் உச்சியைக் கடக்கும் நேரத் தைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளில் ஒன்று உச்சிக்கடத்தல் காண் நோக்கி transit instrument) ஆகும். உச்சிக்கடத்தல் எனவும் குறிப்பிடுவதுண்டு. வானாய் வுக் கூடத்தில், கிழக்கு மேற்காகப் பொருத்தப்பட்ட உட்புழை உருளையின் (hollow cylinder) அச்சுக்குச் செங்குத்தாக ஓர் ஒளிக் கோட்டத் தொலைநோக்கி (refractor telescope) அமைக்கப்பட்டிருக்கும்.