உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மா. இராசமாணிக்கனார்


"அணைமருள் இன்துயில் அம்பணைத் தடமென்தோள்,
துணைமலர் எழில்நீலத்து ஏந்துஎழில் மலர் உண்கண்,
மண மௌவல் முகையன்ன மாவீழ் வான்நிரை வெண்பல்,
மணம் நாறு நறுநுதல், மாரிவீழ் இருங்கூந்தல்,
அலர்முலை ஆகத்து, அகன்ற அல்குல் 5

சிலநிரை வால்வளைச் செய்யாயோ! எனப்
பலபல கட்டுரை பண்டையின் பாராட்டி,
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே.
பொருள் அல்லால் பொருளும் உண்டோ? என யாழ நின் 10

மருளிகொள் மடநோக்கம் மயக்கம்பட்டு அயர்த்தாயோ?
காதலார் எவன்செய்ப, பொருள் இல்லாதார்க்கு? என
ஏதிலார் கூறும்சொல் பொருளாக மதித்தாயோ!
செம்மையின் இகந்துஒரீஇப், பொருள்செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ? 15

அதனால்,
எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள்நாம்
கவவுக்கை விடப்பெறும் பொருள்திறத்து
அவவுக் கைவிடுதல்; அது மனும் பொருளே."

'கிடந்து தூங்க இன்பந்தரும் தலையணைபோல் மெத்தென மென்மையுடையதும். அழகிய மூங்கில் போன்ற பெருமையையுடையதும் ஆகிய மெல்லிய தோள்களையும், நீலத்தின் இரட்டை மலர்கள் போன்ற சிறந்த அழகு வாய்ந்த மைதீட்டிய கண்களையும், வண்டுகள் விரும்பி வந்து அடையும் மணம் மிக்க மல்லி அரும்பு போன்ற கூர்மையும் வரிசையும் வாய்ந்த வெண்பற்களையும், மணநாறும் நல்ல நெற்றியையும், கார்மேகமும் விரும்புமளவு கருத்து நீண்ட கூந்தலையும், கொங்கை பருத்த மார்பையும், அகன்ற அல்குலையும், ஒரு சிலவே இட்டு நிரைத்த வெண்சங்காலான வளைகளையும் உடைய செய்யோனே!' எனப் பலப்பல பாராட்டுரைகளை வழங்கிப் பண்டெல்லாம் பாராட்டி விட்டு, இப்போது இனிய மொழிகளைக் கூறித்துன்பம் உண்டாகப் பிரிந்து போவதால், பண்டு பாராட்டிய அவை அத்தனையும், என்பால் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/57&oldid=1710933" இலிருந்து மீள்விக்கப்பட்டது