உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 கணித வரலாறு

400 கணித வரலாறு பயன் கள் மும்முரமாசுப் பயிலப்படுகின்றன. இப்புதிய வடிவங்களில் கணிதத்தின் பெரும்பகுதிகள் புகுத்தப் படுகின்றன. வெளியின் கணக்கீட்டு முறை, வரைபடங் கள், புள்ளி விவரப் படங்கள் இவற்றின் பாட்டில் காணப்படுகின்றன. X என்னும் எண்ணின் மீது அட்டவணைப்படுத்தப்பட்ட சார்ந்து வரும் தன்மை y = f(x) என்ற சார்பாகும். ஆதலால் இச் சார்பை வரைபடத்தில் ஒரு வளை வரையின் மூலம் குறிக்கலாம். இவ்வாறாகப் பல தகவல்கள் சேகரிக்கப் படுகின் றன. கணித வரலாறு பி. எஸ். கிருஷ்ணன் கணிதம் வளர்ந்த வரலாற்றைப் பண்டைக் காலம், இடைக்காலம், தற்காலம் என மூன்று நிலைகளில் விளக்கலாம். பண்டைக்கால வளர்ச்சி. குகைகளில் வாழ்ந்த கற்கால மனிதனின் தேவைகள் மிகக்குறைவு உணவைத்தேடி அலைந்த மனிதன் விவசாயத்தில் ஈடுபட்டு, நெசவு, பானை போன்ற செய்தல் தொழில்களை உருவாக்கிக் கொண்டான். சி தொழில்களை வளர்த்துக் கொண்டு, குறிகளைக் (symbols) கொண்டு எண்ணுவதை வளர்த்துக் கொண்டான். சிறு கற்கள். குச்சிகள், அம்புகள் ஆகியவற்றைக் கொண்டு பல எண்கள் அமைத்தான். ரண்டு எனும் எண்ணுக்கு அப்பால். தெரியாதவர் கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்ததற்கான சான்றுகள் இருக் கின்றன. நைல் நதிப்பள்ளத்தாக்கும், யூப்ரடிஸ், டைகிரீஸ் போன்ற பள்ளத்தாக்குகளுமே நாகரிகத்தின் ஆரம்பமாக இருந்தன. அப்பொழுதுதான் நாள் காட்டி (calender) யை உருவாக்குவதற்கான முயற்சி கள் ஏற்பட்டு, வடிவக் கணிதமும் (geometry) எண் கணிதமும் (aoitbemtic) உருவாக்கப்பட்டன. டைக்ரிஸ் யூப்ரடிஸ் ஆகிய நதிகளை அடக்கிய இடம் மெசப டோனியாவாகும். இங்கே நிலவிய நாகரிகம் சுமேரிய நாகரிகம் எனப்பட்டது. சுமேரியர்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தனர். கோள்களின் சுழற்சியைக் கொண்டு, எதிர்காலத்தைப்பற்றிக் கணிப்பதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். . இப்போது வழக்கிலுள்ள எண்ணும்முறை 10ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால் மெசப டோனியர்கள் காலத்தில் 60ஐ அடிப்படையாகக் கொண்டமுறை வழக்கத்திலிருந்து 6 7 8 என்றால், அம்முறையில் 6x 60' + 7x 60+ 8x 60 = 22028 எனப்பொருள். கி.மு. 1700க்கு முன்பாகவே இம் முறை பழக்கத்தில் இருந்திருக்கிறது. பாபிலோனி யர்களின் அரசர் ஹம்மராபி என்பவர் கணக்கீடுகளில் வல்லுநராயிருந்தார். பூச்சியத்திற்கு அடையாளம் ல்லாத அக்காலத்தில் பல எண்களை எழுதும்போது, பூச்சியத்தைக் குறிக்க ஓர் இடைவெளி விடுவது பழக்கமாயிற்று. இருபடி, முப்படி. நாற்படிச் சமன் பாடுகளையும் தீர்க்கும் முறைகளைக் கூட இவர்கள் அறிந்திருந்தனர். செய்முறை வடிவக்கணிதத்தில் எகிப்தியர்களும். இந்தியர்களும் வல்லுநர்களாக இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தேல்ஸ் எனும் பயணி கிரேக்க கணிதத்திற்கு வித்திட்டதாகத் தெரிகிறது. பல நாடுகளிலுள்ள வல்லுநர்களிடமிருந்த செய்திகளைத் தெரிந்து கணிதத்திற்கு இவர் மெருகு கொடுத்திருக்கிறார். கி.மு. 585இல் ஏற்பட்ட சூரிய மறைப்பில் (solar eclipse) நேரத்தை மிகநுட்பமாசுக் கூறிய பெருமை இவருக்குண்டு. கிரேக்கத்தின் ஏழு முனிவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட தேல்ஸ் என்பார் சுடலிலுள்ள கப்பலின் தொலைவை அளந் தறியும் முறையைக் கணித்தார். இவர் மாணவர் பித்தகோரஸ் கணிதத்தில் நிரூபணத்தை (proof) அறிமுகப்படுத்தினார். 1,2,3, எனும் கூட்டுத் தொடர் (arithmetic progression) மட்டும் கணிதத் திற்குப் போதாது என்று இசைத் தொடரைப் (harmonic progression) புகுத்திய பெருமை இவருக் குண்டு. எண் கோட்பாட்டிலும் (number theory) வடிவக் கணிதத்திலும் பல படைப்புகளை உருவாக்கினார். கணிதம் என்ற சொல்லை உருவாக் கியவரே பித்தகோரஸ் என்று அறியப்படுகிறது. இவர் வானவியலிலும் வடிவக் கணிதத்திலும் பல கண்டு பிடிப்புகளை நிறுவினார். வர் கி.மு. ஐந்தாம், நான்காம் நூற்றாண்டுகளில் ஏதென்ஸ் நாட்டவர் கணிதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஹிப்பாகிரட்டிஸ், பிளாட்டோ, யூடோக்ஸ் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஹிபிலிப்பாக்ரட்டிஸ், எலிமென்ஸ் எனும் புத்தகத்தில் ஒரு வட்டத்தின் பண்புகளைத் தொகுத்தளித்தார். இதே சமயத்தில் வாழ்ந்த டெமாகிரிட்டஸ் என்பவர் தான் ஒரு கூம்பின் கணத்தைக் காணும் வாய் பாட்டை உருவாக்கியவர். சாக்ரட்டிஸ், பிளாட்டோ போன்றோர் கணிதத்திற்கு ஆற்றியுள்ள பணி எல்லை யற்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் கணிதப்பெருமை ஐரோப்பாவில் குன்றி, ஆஃப்ரிக்கா விற்குப் பரவியது. மகா அலெக்சாண்டரின் படை யெடுப்பிற்குப் பிறகு எகிப்து, மெசபடோமியா. இந்தி யாவின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் கணிதம் அலெக்சாண்டரின் வாரி வளர்ச்சி பெற்றிருந்தது. சான தாலமி 1 என்பார் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியதால். யூக்ளிட் எனும் கணித மேதை அதில் ஆசிரியராகவும், ஆர்க்கிமிடீஸ், அப்போலோனியஸ்