உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்வீச்சு இயற்பியல்‌ 463

ரேடிய ஊசி குணமாக்கப்படவேண்டிய இடம் படம் 14. ஊசிகளை ஒரு தளத்தில் குத்தி (single plane implant) நாக்கில் தோன்றும் புற்று நோயைக் carcinoma of tongue) குணப்படுத்துதல். களில் இருக்கும் சுட்டி, கருப்பையில் தோன்றும் புற்று நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த ரேடியம் ஊசிகள் பயன்படுகின்றன. செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கதிரியக்கத் தனிமங்களும் (எ.கா: 80C0, 137Cs, 182Ta) ஊசி வடி விலோ நீர்ம நிலையிலோ (67. 67: கதிரியக்கத் தங்கம்) கதிர் மருத்துவத்தில் பயன்பட்டு வரு கின்றன. பரவ கணிப்பொறி கண்டறி கதிரியக்கவியலிலும், மருத்துவக் கதிரியக்கவியலிலும் கணிப்பொறி லாகப் பயன்படுகிறது. குறிப்பாக, நோயாளிகள், அவர்களின் நோய்கள், அவர்கள் பெறும் கதிர் வீச்சின் அளவு போன்ற விவரங்களை அறியவும் அவற்றைப் பயன்படுத்தவும் கணிப்பொறி பயன்படு கிறது. உருவங்களைத் திரையில் காணக் கணிப் பொறி மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக உரு வத்தில் உள்ள விவரங்களைத் தெளிவாக்கக் கணிப் பொறி வேண்டும். மருத்துவ முறையில், சம அளவு வரையவும், வளைவுகளை மீட்சிச்சிதறலில் பயன் படாக் கதிர் வீச்சைக் கணக்கிடவும் கணிப்பொறி உதவுகிறது. இவற்றிலிருந்து நோயாளி பொருத்த மான அளவுக்குக் கதிரூட்டப்படுகிறார். கூதிர் உயிரியல் (radio biology). உயிரினப் பொருள்களில் சிறு அளவு கதிர்வீச்சும் கூற்றுவிளைவு கதிர்வீச்சு இயற்பியல் 463 களைத் (lethal effects) தோற்றுவிக்கும். அயனி யாக்கக் கதிர்கள் படுவதால் தோன்றும் நீரேற்றப் பட்ட எலெக்ட்ரான் (H°, OH°) போன்ற கதிரியக்க விளை பொருள்கள் உயிரணுக்களில் உள்ள டிஆக்சி ரிபோநியூக்ளியிக் அமிலம், ரிபோ நியுக்ளியிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகளின் வினைகளில் மாற்றத்தைத் தோற்றுவிக்கின்றன. ஆக்சிஜன் இருக்கும்போது கதிர்வீச்சு மிகுதியான உயிரின விளைவுகளைத் தோற்றுவிக்கிறது. இவ்விளைவு மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. கதிர் மருத்துவத்துக்கு உட்படுத்தப் படும் நோயாளியை ஆக்சிஜனை உள் மூச்சு வாங்கு மாறு வைக்கலாம். அல்லது மருத்துவத்தை ஆக்சிஜன் நிரப்பப்பட்ட அறையில் நடத்தலாம். கட்டி உயி ரணுக்களில் ஆக்சிஜன் செறிவு குறைவாகவும், இயல்பான உயிரணுக்களில் ஆக்சிஜன் மிகுதியாகவும் உள்ளது என்று கருதப்பட்டுள்ளது. எனவே, கதிரூட் டும்போது ஆக்சிஜன் இருக்குமானால்கட்டி உயிரணுக் களில் மிகுதியான விளைவுகள் ஏற்படும் என்று கருதப் படுகிறது. கட்டித் திசுக்களிலும், இயல்பான திசுக்களிலும் கதிர்வீச்சினால் தோன்றும் கூற்று விளைவுகள் வெவ்வேறாகும். ஓர் உயிரணுவை அழிக்கக் கொடுக்கப் படும் சிறுமஅளவான கதிர்வீச்சு ஏற்பளவு (tolerance dose) எனப்படும். வளமான அல்லது இயல்பான திசுக்களின் ஏற்பளவு கட்டித் திசுக்களைவிட மிகுதி. இவ்விரண்டு அளவுகளின் விகிதத்தை மருத்துவ விகிதம் (therapeutic ratio) என்று கூறுவர். இவ் விகிதம் பெருமமாக இருப்பின், கதிர்வீச்சினால் கட்டிகளை நலமாக்கலாம். ஆக்சிஜன் கொடுக்கப் படும்போது இவ்விகிதத்தின் அளவு மிகுதியாகும். ஒரே சமயத்தில் கதிரூட்டம் கொடுக்காமல். கொடுக்க வேண்டிய மொத்த அளவைப் பல பகுதி களாகப் பகுத்துக் கொடுத்தால் கட்டிகளை நன்றாக நலமாக்கலாம் என்று பட்டறிவின் மூலம் கண்ட றிந்து உள்ளனர். சான்றாக, வாரத்துக்கு ஒருமுறை கதிரூட்டம் தருவதைக் குறிப்பிடலாம். இம்முறை பின்னமாக்குதல் அல்லது பகுத்தளித்தல் எனப்படு கிறது. கதிரூட்டப்பட்ட இயல்பான திசுக்கள், கட்டித் திசுக்களைவிடக் கதிரியக்க விளைவிலிருந்து விரைவில் மீண்டு வரும் தன்மை கொண்டவை. அளவைப் பகுத்துக் கொடுக்கும்போது, ரண்டு மருத்துவமுறைக்கும் இடையே உள்ள காலத்தில் இயல்பான திசுக்கள் (கட்டி திசுக்களைவிட) பெரு மளவில் மீண்டு வரும். எனவே, மருத்துவ முடிவில் (இயல்பான திசுக்களைவிட) மிகுதியான கட்டித் திசுக்கள் மடிந்திருக்கும். மொத்த கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு (radiation protec- tion). இயல்பான திசுக்கள் கதிர்வீச்சினால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், கண்ட றி முறையானாலும் மருத்துவ முறையானாலும் நோயாளிக்குத் தேவைப்பட்ட கதிர்வீச்சு அளவு