உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிசலாங்கண்ணி (தாவரவியல்‌) 591

ய குப் போதிய வா ய்ப்பின்றி உழுசால்களின் வழியே ஓடி வீணாகும். சிறிது தொலைவு ஓடியநீர், இயக்க வேகம் (momentum) பெற்று மண் அரிமானம் ஏற் படுத்தும். இதனால் சிறு அருவி, ஓடை அரிமானம் நிகழ்ந்து வளமான மேல் மண் இடம் பெயர்ந்து நாளடைவில் பயிர் செய்ய இயலாத நிலை வாகும். உரு கே.ஆர். திருவேங்கடசாமி கரிசலாங்கண்ணி (சித்த மருத்துவம்) . மஞ்சள் கரிசலாங்கண்ணியைக் சுறியாகச் செய் துண்ண அறிவில் தெளிவு ஏற்படும். கரிசலாங் கண்ணிச் சாறு 10.4 லிட்டர், நெல்லிக்காய்ச்சாறு 10.4 லிட்டர், நல்லெண்ணெய் 3.25 லிட்டர் இவற் றைக் கலந்து. அதிமதுரம் 70 கிராம் சேர்த்து அரைத்துக் குழப்பி, எரித்துப் பதமாக வடித்துத் தலை முழுகினால் கண்காசம். காதுநோய் இவை தீரும். கரிசலாங்கண்ணிச்சாறு 1 பங்கும். ஆமணக்கு நெய் 1 பங்கும் கலந்து, அதில் சிறிது வெள்ளைப் பூண்டு சேர்த்து எரித்து, பதத்தில் வடித்துக் கொண்டு. வேளை ஒன்றுக்கு 18 36 கிராம் வரை கொடுக்க, காய்ச்சற்கட்டி, வீக்கம், காமாவை, குட்டம் நீங்கும். கரிசலாங்கண்ணிச் சூரணத்தை அயச்செந்தூரத் திற்கு அனுபானமாகக் கொள்ளப் பாண்டு. சோகை. காமாலை முதலிய நோய்கள் தீரும். கரிசலாங் கண்ணியும், பழம்புளியும் சரியெடை வைத்தரைத் துப் புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கப் பிள்ளைகள் அடித் தள்ளியது தீரும். சரிசலாங்கண்ணி இலைச்சாறு 1.3 லிட்டர். நல்லெண்ணெம் 1.3 லிட்டர் தைலப் பாத்திரத்தி லிட்டுச் சிறு தீயாக எரித்துப் பக்குவமாக வடித்து, 0.4 கிராம் வீதம் காலை, மாலை இருவேளை சாப் பிட்டு வர இருமல் நோய் தீரும். கரிசலாங்கண்ணி இலைச்சாறு 90 துளி எடுத்து, அத்துடன் நீர் அல்லது மோர் சேர்த்துச் சாப்பிட, பாம்பின் கடிநஞ்சு போகும். மேற்கூறிய சாறு 2 துளி எடுத்து, 8 துளி தேனிற் கலந்து கொடுக்க, கைக் குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும். இலைச்சாற்றைக் காதுவலிக்கு விட வலி தீரும். இதை நல்லெண்ணெயில் அரைத்து யானைக்கால் நோய்க்கு மேலுக்குப் பூசலாம். சிறு நீரில் இரத்தம் கலந்தால் இலைச்சாறு, 42-84 மி. லி. வீதம் நாளும் இருவேளை கொடுக்கத் தீரும். இதன் இலையை அரைத்துக் சுற்கம் செய்து தேள் கடித்த கரிசலாங்கண்ணி (தாவரவியல்) 591 இடத்தில் நன்றாகத் தேய்த்து, பின் அவ்விடத்தில் அதையே வைத்துக் கட்டினால் நஞ்சு நீங்கும். லையை வேக வைப்பதாலுண்டான ஆவியைப் பிடிக்க மூல நோய் தீரும். இலைச்சாற்றை நல்லெண்ணெய் அல்லது தேங் காய் எண்ணெயில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வர, முடி கறுத்துந் தழைத்தும் வளரும். வேர்ப்பொடி யைக் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கும் தோல் தொடர்பான நோய்களுக்கும் கொடுக்கலாம். கரிச லாங்கண்ணிசாறு, நெல்லிக்காய்ச்சாறு வகைக்கு 1.3 லிட்டர், பசுவின்பால் 2.6 லிட்டர், அதிமதுரம் 35 கிராம் அரைத்துப் போட்டுக் காய்ச்சி மெழுகுபதத் திலிறக்கி முழுகி வந்தால் அனைத்து வகைப் பித்த மும் மயக்கமும் தீரும். -சே. பிரேமா நூலோதி.க.ச. முருகேச முதலியார், குணபாடம் மூலிகை வகுப்பு: தமிழ்நாடு அரசு அச்சகம், இரண் டாம் பதிப்பு, சென்னை 1951; சிறுமணவூர் முனிசாமி முதலியார், மூலிகை மர்மம், பிராகரஸிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1930 கரிசலாங்கண்ணி (தாவரவியல்) தன் கரிய இச்செடி 50-75 செ.மீ. உயரம் வரை வளரும். மருத்துவத்திற்குப் பயன்படும் முக்கியமான செடி வகைகளுள் கரிசலாங்கண்ணியும் ஒன்றாகும். வேறு பெயர்கள் கையாந்தகீரை, கரப்பான், சாலை, கரிசாலை, கைகேசி, கரிசனம் என்பன. இது இயல் வரப்புகளில் வளரும் களைச்செடியாகும். இதன் தாவரவியல் பெயர் எக்ளிப்டா புரோஸ்ட் ரேட்டா (Eclipta prostrata) ஆகும். ஆஸ்ட்டிரேஸ் குடும்பத்தைச் சேர்ந்த இதை முன்பு எக்ளிப்டா ஆல்பா (Eclipta alba) என்றும், வெர்பெசினா ஆல்பா (Verbesina alba) என்றும் கூறி வந்தனர். செடி. இதன் தனி இலைகள் தண்டில் எதிரடுக் கத்தில் இருக்கும். லைகள் ஈட்டி வடிவமாக 4-6 × 1-1.5 செ.மீ. அளவில் இருக்கும் இலையின் கீழ் மேல் பகுதிகளில் மயிரடர்ந்து இருக்கும். லையின் அடிப்பகுதி ஆப்பு வடிவத்திலும் (cuneate), இலை ஓரத்தில் இரம்பப் பற்கள் ஒழுங்கற்றும் இருக் கும். லை நுனி கூர்மையானது, இலைக் காம்பு சிறியது. சிர மஞ்சரி (capitulam) 1-3 எண்ணிக் கையில் இலைக் கோணத்திலோ செடி நுனியிலோ தோன்றுகிறது. பூத்தண்டில் முனையில் தட்டையான பகுதியில் நெருங்கி வெளிவட்டப் பெண்பூக்கள் காணப்படும். இருபால் பூக்கள் உள்ளேயுள்ளன. பூவடிச் செதில் வட்டம் மணி வடிவமானது. பெண்