உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 கரும்பொருள்‌ கதிர்வீச்சு

702 கரும்பொருள் கதிர்வீச்சு ஒரு சுதிர்களை வெளியிடும், ஒரு கரும்பொருள் தன்மீது விழும் அனைத்து அலைநீளக் கதிர்களையும் முழுமை யாக உட்கவர்ந்து கொள்ளக்கூடியதாகையால், அதிலிருந்து வெளிப்படும் கதிர்களும் அனைத்து அலைநீளங் கொண்டவையாகவும், எந்த பொருளின் தன்மையையும் சார்ந்திராதவையாகவும். கரும்பொருளின் வெப்பநிலையை மட்டுமே பொறுத்த வையாகவும் இருக்கும். கரும்பொருளுக்கும் சுற்றுப் புறங்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய வெப்பச்சம நிலை, வெப்பநிலையை மட்டுமே பொறுத்து அமை யும். இதனால் ஒரு சுரும்பொருளிலிருந்து வெளிப் படும் ஆற்றல் கதிர்களும், ஒரு சீரான வெப்பநிலை யிலுள்ள கூட்டிற்குள் காணப்படும் ஆற்றல் கதிர் களும் ஒரே வகையாசு ருக்கும். எனவே சூடான கூட்டில் உள்ள கதிர்களே. கரும்பொருள் கதிர்வீச்சுகள் எனப்படுகின்றன. ஒரு ஒரு கரும் பொருள் அனைத்து அலைநீளக் கதிர் களையும் பெரும அளவில் களிலும் பெருமமாக உட்கவரக்கூடியதாகை யால், அதன் கதிர் வீசலும் அனைத்து அலை நீளங் ள்ளது. எனவே ஒரு சுரும் கதிர்களும், ஒரு சூடான கதிர்களும் முழுக்கதிர்வீச்சு பொருள் உமிழும் கூட்டிற்குள் உள்ள (total radiation) எனப்படுகின்றன. கிர்ச்சாப் விதி. எந்த வெப்பநிலையிலும், எந்த ஓர் அலை நீளத்திற்கும், கதிர்வீசு திறனுக்கும். உட் கவர்திறனுக்கும் இடை யிலுள்ள தகவு அனைத்துப் பொருள்களுக்கும் ஒன்றாக உள்ளது. அது ஒரு குறிக் கோள் கரும்பொருளின் கதிர்வீசு திறனுக்குச் சமம் என்று 1859இல் கிர்ச்சாப் நிறுவினார். ரிட்ச்சி அதை ஆய்வுகள் மூலம் மெய்ப்பித்தார். இதனால் சிறந்த கதிர் வீசிகள் சிறந்த உட்கவர் பொருள்களாகவு மிருப்பதை அறியலாம். கதிர்வீசுதிறனும் உட்கவர் திறனும் பொருளின் தன்மையை மட்டுமே பொறுத்த வையாதலால் து ஒரு பொது து விதி என்பதும் அனைத்து நிலைகளிலும் தூய வெப்பநிலைக் கதிர் களுக்குப் பொருந்துவது என்பதும் தெளிவாகின்றன. சூடா கரிய நிறங்களில் பூவேலைகள் செய்யப்பட்ட பீங்கான் துண்டு ஒன்றை 1000°C அளவிற்குச் டாக்கிவிட்டு, உடனே அதை இருட்டறையில் வைத்துப் பார்த்தால், பூ வேலைகள் பிற வெண் பகுதிகளைவிட மிகு பொலிவுடன் காணப்படும். கரு நிறங்கள் உயர் உட்கவர் திறனுள்ளவையா தலால், இருட்டில் பெருமளவில் கதிர் வீசவும் செய்கின்றன. இதேபோல மெருகேற்றப்பட்ட பொருள்கள் குறைந்த அளவிலேயே ஆற்றவைக் கதிர் வீசவும் உட்கவரவும் செய்கின்றன. அவற்றின் மேல் படும் ஆற்றலில் பெரும்பகுதி எதிரொளிக்கப் பட்டுவிடுகிறது. சூரியனின் தொடர் நிறமாலையில் காணப்படும் பிரான்ஹாபர் வரிகளைக் கிர்ச்சாப் கொள்கையி னால் விளக்கலாம். சூரியனின் சூடான மையப்பகுதியி லிருந்து வெளிப்படும் ஒளி, சற்றே குறைந்த வெப்ப நிலையிலுள்ள வெளிப்புற வளிமங்களின் வழியே வரும்போது அவற்றிலுள்ள தனிமங்கள் சில குறிப் பிட்ட அலை நீளமுள்ள பகுதிகளை உட்கவர்ந்து விடுகின்றன. அத்தனிமங்களைக் கிளர்வூட்டினால் அவை அதே அலை நீளக்கதிர்களையே வெளியிடும் உயர்ந்த வெப்பநிலையில் அவை எந்த அலைநீள வரிகளை வெளியிடுகின்றனவோ, அதே அலைநீள வரிகளை அவை குறைந்த லெப்பநிலையிலிருக்கும் போது உட்கவர்ந்து விடுகின்றன. ஓர் அணுவைத் தகுந்த முறையில் கிளர்வூட்டினால் அது ஒரு குறிப் பிட்ட அலைநீளமுள்ள ஒளியை வெளியிடும் என்பது கிர்ச்சாப் விதியிலிருந்து நிறுவப்படுகிறது. அதன் ஸ்டீபான் - போல்ட்ஸ்மன் விதி. ஒரு கூட்டிற்குள் இருக்கிற பொருளிலிருந்து கதிர் வீசப்படும் ஆற்ற லுக்கும், அதன் வெப்பநிலைக்குமிடையில் உள்ள தொடர்பை முதன் முதலாக நியூட்டன் ஆய்வு செய்து குளிர்வு விதியை உருவாக்கினார். மூலம் ஒரு பொருளின் வெப்பநிலை குறைகின்ற வீதம், அதற்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் இடையில் இருக்கிற வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர் விகிதத்தில் உள்ளது. ஆனால் அந்த வெப்ப வேறுபாடு குறைந்த நிலை அளவில் இருக்கும் வரையே நியூட்டனின் குளிர்வு விதி பொருத்தமாக உள்ளது. 1879இல் ஸ்டெஃபான் என்பார் T வெப்ப நிலையிலுள்ள ஒரு பொருளிலிருந்து ஒரு நொடியில் கதிர்வீசப்படும் வெப்பம் R எனில், R aT" எனக் காட்டினார். இதில் ச என்பது ஸ்டெஃபான் மாறிலி எனப்படும். இது ஸ்டெஃபான் விதியாகும். இந்த விதியைப் போல்ட்ஸ்மான் என்பார் கொள்கையடிப் படையில் மெய்ப்பித்தார். எனவே இந்த விதி இருவர் பெயராலும் குறிப்பிடப்படுகிறது. T. வெப்ப நிலையிலுள்ள கூட்டிற்குள், T வெப்ப நிலையிலுள்ள ஒரு பொருளிலிருந்து ஒரு நொடியில் கதிர்வீசப்படும் வெப்பம் R = 0 (T+ _ T'). நியூட்டனின் விதி, குறைந்த வெப்பநிலை வேறுபாடுகளுக்கான ஸ்டெஃ பான் விதியின் ஒரு சிறப்பு நிலையேயாகும். ஆற்றல் பரவீடு. கரும்பொருள் கதிர்வீச்சின் செறிவு அனைத்து அலைநீளங்களுக்கும் சமமாக இருப்பதில்லை. வெவ்வேறு அலைநீளங்களுக்குள் ஆற்றல் எவ்வாறு பங்கிடப்பட்டுள்ளது என்பதை, அலைநீளத்தையும், வெப்பநிலையையும் பொறுத்துக் கரும்பொருளின் கதிர்வீசு திறன் அமைந்துள்ள விதத்தி லிருந்து அறியலாம். மின்சாரத்தால் சூடாக்கப்படும் ஒரு பிளாட்டினக் கம்பிச் சுருள் 525°C இல் மங்கிய சிவப்பு நிறமாகவும், 900°C இல் பழுத்த சிவப்பாயும், 1100°C இல் ஆரஞ்சுச் சிவப்பாகவும் 1250°C இல் மஞ்சளாகவும், 1600°C இல் வெண்மையாகவும் ஒளி