உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவி இறங்கும்‌ அமைப்பு 715

மேற்கூறிய முறைகளில் எந்த முறையில் கருவி களைப் பாகுபடுத்தினாலும் குறிப்பிட்ட சூழ் நிலைக்கே ஏற்றதாக இருக்கும். ஒவ்வொரு கருவியும் பல தத்துவங்களை உள்ளடக்கி இருக்கும். ஒவ்வொரு தன்மையையும் பல வகைக் கருவிகள் மூலம் அளக்க லாம். எனவே எந்த ஒரு குறிப்பிட்ட பாகுபாட்டிலும் கருவிகளை அடக்கி விட முடியாது. பயன். கருவிகளை வடிவமைப்பதோடு நின்று விடாமல் அவற்றைத் துணைச் கருவிகளுடன் இணைத்துச் செயல்படுத்துவதிலும் கருவி இயல் கவனம் செலுத்துகிறது. பல கருவிகளில் அளக்க வேண்டிய தன்மை, ஒரு துணை ஆற்றல் மூலத்தின் ஆற்றலைத் தாக்கி அத்தாக்கத்தின் அளவை மாற்றி களின் மூலம் அளந்து அறியுமாறு அமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு தகட்டின் பருமனை அளக்க அதன் ஊடே எக்ஸ் கதிர்கள் செலுத்தப்பட்டு வெளி யேறும் எக்ஸ் கதிர்களின் அளவு கணிக்கப்படுகிறது. வெளியேறும் எக்ஸ் கதிர்களின் தன்மை, ஊடுருவப் படும். உலோகத்தகட்டின் பருமனைப் பொறுத்து மாறுகிறது. அனைத்துக் கருவிகளிலும் உள்ளார்ந்த சில குறைபாடுகள் இருக்கக்கூடும். துல்லியத் தன்மை நுட்பம் ஆகிய தன்மைகளுக்கு ஏற்ப இக்குறைபாடு கள் மாறுகின்றன. துல்லியத் தன்மை என்பது கருவி காட்டும் ஓர் அளவு எந்த அளவு உண்மையான அளவிற்கு அருகில் உள்ளது என்பதைக் குறிக்கும். நுட்பம் என்பது வெவ்வேறு காலக் கட்டங்களில் அளக்கும்போதும் ஒவ்வாத அளவுகளை (மிகச்சிறிய அளவில் வேறுபடும் தன்மைகளைக்கூட) படுத்திக் காட்டும் திறனைக் குறிக்கும். வேறு காலம் செல்லச் செல்லப் பல கருவிகள் தம் தன்மையிழந்து தவறான அளவுகளைக் காட்டக் கூடும். பல கருவிகளில் தயக்க விளைவு (hysterisis ) காணப்படும். இதில் ஓரளவு மிகுதியாகும் குறிப்பு களை உணரும் அளவிற்குக் குறையும் குறிப்புகளை உணர முடியாமற் போய்விடும். மேலும் சூழலின் வெப்பநிலை. அதிர்வு போன்றவற்றாலும் கருவிகள் தாக்கமடையலாம். கருவி இயல் வல்லுநர்கள் குறைபாடுகளை நீக்கி ஏற்ற சூழ்நிலையை வாக்கிக் கொள்வர் அல்லது அவற்றிற்கான திருத் தங்களைக் கணித்துப் பயன்படுத்துவர். ய உ கருவி இயலின் இன்றைய போக்கு. போக்கு. அறிவியல். தொழில் நுட்ப முன்னேற்றங்கள் கருவி இயலின் பெரும் எதிர்பார்ப்புகளைத் தோற்றுவிக்கின்றன. புதிய ஆய்வுகளின் பயனாக, விண்வெளி அணு மின் உற்பத்தி, பொருள்களின் உயர் வெப்பநிலைப் பண்புகளை அறுதியிடல் ஆகியவை புதிய கருவியி யலில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. பொது வாகக் கருவி இயல் ஆய்வில் உயர் நுட்பம், பெரும திப்புகளை அளக்கும் திறன், பெரும நிலைமைகளில் கருவி இறங்கும் அமைப்பு 7/5 பயன்படும் ஆற்றல். உயர் வேகங்களில் ஏற்படும் விளைவுகள், மாறுதல்களுக்கு ஏற்புடைமை ஆகியவை இன்றியமையாத் தேவைகளாகும். தானியங்கு அளவும் கட்டுப்பாட்டுகளுக்குத் தொழில் துறையில் கருவி இயலைப் பயன்படுத்து வதும் பெருகி வருகின்றன. உயர்ந்த நுட்பமுடைய கருவி இயல் துணையில்லாமல் இயங்க முடியாத பல தொழில்கள் உருவெடுத்துள்ளன. நம்பகத் தன்மை. இன்றியமையா மின்னணுவியல் பகுதிகளின் நம்பகத் தன்மை சிக்கலானதாகும். ஆனாலும் திண்ம நிலைச் சுற்றுப்பகுதி, புதிய பொருள், புதிய நுட்பம்,பொதுவான அமைப்பு பொறியியலின்பால் மிகு சுவனம் ஆகியவற்றால் அது முன்னேறி வருகிறது. பயன் செய்தி நிகழ்த்தும் சுருளிகள் (data processing equipments). பதிவுகள், கணிப்பொறிகள் போன்ற வற்றைத் தானியங்கு முறைப் பிரித்தல், சேர்த்தல், விரிவாகத் தகவல்களை மீண்டும் பெற்றுப் படுத்தல், வங்கித்தொழில் ஆவணப்படுத்தல், கணக் கெழுதல் ஆகியவற்றில் இவற்றைப் பெருமளவில் பயன்படுத்தல் என்பது ரு புதிய போக்காகும். தானியங்கு படித்தலுக்கு இத்தகைய கருவிகளைப் பயன்படுத்துவதால் தானியங்கு மொழியாக்கம் பயனளிக்கிறது. மருத்துவத் துறையில் உடலியல், உடல் வேதியி யல், நரம்பியல் அலகுகளின் தானியங்கு ஆய்வுக்கான கருவி இயல் தற்போது பல்கிப் பரவும் நிலைக் லுள்ளது. நோய்களை அறியவும், உட்புறச் சீர்கேடு களை உணர்ந்து அவற்றின் இடங்காணவும் தேவை யான கருவிகள் எண்ணிக்கையிலும் நுட்பத் திற லும் பெருகி வருகின்றன. கல்வித் துறையில் கேட்கும், பார்க்கும் கருவிகள் முனைப்புடன் பெருகி கின்றன. தானியங்கு மதிப்பெண்ணிடும் கருவிகள் பிற கருவிகளின் துணையோடு கல்வித்துறை முழதுர் பயன்படும் வாய்ப்புள்ளது. றக கருவி இறங்கும் அமைப்பு வரு வயி. அண்ணாமலை எஸ். சுந்தரசீனிவாசன் டுபாதையை நெருங்கும் விமானம் இறங்கத் தேலை யான உதவிகளைத் தகவல்கள் மூலம் தரும் கருவியே கருவி இறங்கும் அமைப்பு (instrument landing system) எனப்படுகிறது. வீச்சு மாற்றப்படும் கிடைமட்ட நிலையில் வடிகட்டப்பட்ட தொடர்ச்சியான அலை களின் நிலையான கற்றையால் இக்கருவி இயங்கு கிறது. இக்கருவியில் ஓடுபாதையின் மையக் கி