776 கல்லீரல் நோய்கள்
776 கல்லீரல் நோய்கள் கூடுதலாகக் காணப்படும். வைட்டமின் K கொடுப்ப தாலும் மாறுவதில்லை. புற இரத்த ஆய்வில் பர் Bur' red cells) சிவப்பணுக்கள் காணப்படும். இரத்தச்சோகையுடன் திராம்போசைட், வெள்ளை அணுக்கள் குறைவும் மண்ணீரல் வீக்கத்தில் காணப் படும். பேரியம் எக்ஸ்கதிர்ப் படத்தில் உணவுக் குழலின் வீர்த்த இரத்த நாளங்களைக் காணலாம். முடிவாக ஈரல் திசு ஆய்வில் நார்த்திசு சூழப்பட்ட புதுவளர் கட்டி அமைப்பு இந்நோயைக் கண்டுபிடிக்க உதவும். நோய்கள். மகோதரம், ஈரல் ஆழ்மயக்கம். போர்ட்டல் நாள அழுத்தத்தால் செரிமான மண்டலக் குருதிவாரி, மண்ணீரல் வீக்கம், குழந்தைகளில் கொழுப்புச்செரிமானம் இல்லாமையால் தோன்றும் செரிமான நோய், வைட்டமின் A, D, KE குறை பாட்டால் சிவப் இரத்த ஒழுக்கு. ரிக்கட்ஸ் நோய் பணு அழிவுச்சோகை (haemolytic anacmia), சளிப் படல் நோய் முதலியவை உண்டாகும். தமனி நாளப் புரையால் இரத்த ஓட்டத்தில் அழுத்த வேறுபாடு புர்' எனும் ஒலி உண்டாதல் விரல்களின் நுனி பருத்துக் கரு நீலநிறத்தில் இருத்தல் தோன்றக் கூடும். மூளைத்தாக்கத்தால் மறதி, கைநடுக்கம், வாய் குழறல், உடல் தளர்ச்சி, முடிவில் ஆழ்மயக்கம் ஆகியவை உண்டாகும். மருத்துவம். கார்ட்டிசோன், தடுப்பாற்றல் மருந் துகள் கொடுத்துக் கூர்த்த நிலையில் மருத்துவம் செய்ய வேண்டும். மகோதரம் குறைய உப்பில்லாப் பத்தியம், குளோர்தையசைடு, ஸ்பைரினோலாக் டோன் ஆகிய மருந்துகள் கொடுக்க வேண்டும். புரதம் குறைந்த குளுக்கோஸ் மிகுந்த உணவுடன் வைட்டமின்களையும் உள் ஏற்காத எதிர் நுண்ணுயிர் மருந்துகளையும் கொடுக்க வேண்டும். பத்து ஆண்டு முடிவில் பொதுவாகக் குருதிவாரி, ஆழ்மயக்கம். முதலியவற்றால் மரணம் ஏற்படும். கல்லீரல் நோய்கள் மா. ஜெஃபிரெடரிக் ஜோசப் மஞ்சள் காமாலையுடன் கூடிய நோய்கள், மஞ்சள் காமாலை இல்லா நோய்கள் எனவும், குறிப்பிட்ட கல்லீரல் பகுதியின் வீர்ப்பைக் கொண்டு பிறவிக் குறைபாடு நோய்கள் எனவும், சாறுண்ணிகளால் உண்டாகும் பை நோய்கள் சீழ்க்கட்டி, புற்றுக்கட்டி, நோய்கள் எனவும், மிகவும் பெரியதாக வீர்த்த பல் வேறு கட்டிகள், இரண்டாம் நிலைப்புற்று எனவும், பலவாறாகப் பிரித்து அறியலாம். குழந்தைப்பருவ மஞ்சள் காமாலை நோய்கள். இது கல்லீரல் அக மாற்றங்களால் உண்டாகும் மஞ்சள் காமாலை, கல்லீரலின புற மாற்றங்களால் உண்டா கும் மஞ்சள் காமாலை என ருவகைப்படும். கல்வீரல் மாற்றங்களால் உண்டாகும் மஞ்சள் காமால்ை. குழந்தை பிறந்தவுடன் காணப்படும் மஞ்சள் காமாலை நோய் பொதுவாக ஈரல் பணி சரிவரத் தொடங்காததால் உண்டாவதாகும். ஓரிரு
ெ
வாரங்களில் இது முற்றிலும் மாறும். மாறாகத் காமாலை பல் தொற்றுகளால் உண்டாகும் மஞ்சள் வேறு வைரஸ், பாக்ட்டீரியாக்களால் தாயிடமிருந்தும் உணவு மூலமாகவும் பரவி ஈரலைத் தாக்கிப் பித்தம் சேர்ந்து நலிவுறச்செய்ய, குழந்தை நோய்வாய்ப்படும். உடல்நிலை சீர்கேடு அடைவதுடன் மஞ்சள் நிறம் கூடுகிறது.பிறப்பிலிருந்து காணப்படும் ஈரல் பணியின் குறைபாடு, நொதிக் குறைபாடு இவை ஒரு பாரம் பரிய நோயாக ஜீன்கள் மூலம் குழந்தைகளுக்கு வரு கின்றன. உடல் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் குறை பாடுகள் ஃபிரக்டோஸ் ஒவ்வாமை, டைரோசின், காலக்டோன் (galactone) சர்க்கரை ஒத்துக் கொள் ளாமை இவற்றால் உண்டாகின்றன. இவற்றைத்தவிர பிற ஈரல் அக மாற்ற நோய்கள், B -1 ஆண்ட்டி டிரிங் சின் குறைபாடு, முண்டுப்பை நார்த்தல் நோய் (cystic sibrosis) நீமென் பிக் நோய் (Niemann pick disease), மூளை ஈரல் சிறுநீரகச் சில்வே வகரின் கூட்டியம் (zell weger's syndrome) மென்கிஸ் வளைந்த மயிர்க் கூட்டியம் (Menkes, kinky hair syndrome)ஆகியவை, குழந்தைப் பருவப் பித்தநீர்த் தேக்கத்திற்கான காரணங்கள் ஆகும். பிறந்த குழந்தைக்கு மிகுதியாக உணவு கொடுப்பதால் ஏற்படும் குடல் அதிர்ச்சி (Gut shock), குறைமகப் பேற்றுச் சூழலுக்கு முன்பே பிறந்த குழந்தைகளுக்கு நாளவழி உணவேற்றல், இரத்த அழிவு நோயால் பித்த நாளங்களில் பித்தம் உறைந்து அடைத்தல் ஆகிய காரணங்களாலும் இந் நோய் தோன்றக்கூடும். உடற் கூற்றியலில், ஈரல் அமைப்பில் ஏற்படும் வேறுபாட்டாலும் மடல் இடைப் பித்த நாளக் குறைவாலும் பித்தம் ஈரலுள் தங்கும். ஈரல் புறப் பித்த நாள அடைப்பு - வளர்ச்சி யின்மை, பித்த நாளத்தில் ஏற்படும் துளை, பித்த நாளச் சிரைப்பை ஆகிய ஈரல் புற மாற்றங்களிலும் குழந்தைப் பருவப் பித்தத் தேக்கம் ஏற்படலாம். இரத்த அழிவு பித்தநீர்த் தேக்கமில்லாமல் பின்வரும் காரணங்களாலும் மஞ்சள் காமாலை உண்டாகும். இணையப்பெறாத பிலிரூபின் அதிகரிப்பு, முலைப் பால் மஞ்சள் காமாலை லூசி டிரிஸ்கால் கூட்டியம் (Lucey-Driscoll syndrome) பிறவித் தைராய்டுகூடுதல் சுரப்பு, மேற்குடல் அடைப்பு, கில்பர்ட் கூட்டியம் கிரீக்லர் நர்ஜார் கூட்டியம் இவற்றுடன் மருந்து களாலும் மஞ்சள் காமாலை நோய் உண்டாகலாம். இணைந்த, பித்தநீர்ப் பிலிரூபின் அதிகரிப்பு, டூபின் ஜான்சன் கூட்டியம், ரோட்டார் கூட்டியம் இவற்றி லும் காணப்படும்.