உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/852

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 கழலை (கால்நடை)

832 கழலை (கால்நடை) ஏற்படுத்திக் கட்டிகள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றன. கால்நடைகளில் கழலைக்கட்டிகள் ஹிஸ்டோ சைட்டோமஸ். இவை தனியாகவோ கூட்டாகவோ தோலின் மேல் பரப்பில் காணப்படும். தவல கால், பாதங்களிலும் காணப்படுவதுண்டு. இது இரண்டு வயதுக்குட்பட்ட நாய்களில் மிகுதி யாகக் காணப்படுகிறது. இது சில சமயங்களில் தானாகவே மறைந்துவிடும். மாஸ்ட் செல் கழலைக்கட்டிகள். இவையும் தனி யாகவோ கூட்டாகவோ உடலின் பின்பகுதியில் காணப்படுகின்றன. குறிப்பாக ஆண் இன உறுப்பு கள், கால்களில் காணப்படும். த்தகைய சுட்டிகளைக் கார்டிகோஸ்டீராய்டுகளின் மூலம் சிறிதளவு கட்டுப் படுத்த முடியும். பாப்பிலோமோ கட்டிகள். இவை தனியாகவோ கூட்டாகலோ காணப்படும். பொதுவாக கழுத்து. பாதம், வாய் ஆகிய இடங்களில் காணப்படும். இவை நாய்களுக்கு வரும், பொதுவாக, பூனைகளில் இந்தக் கழலைக் கட்டிகள் ஏற்படுவதில்லை. செதில் செல் கட்டிகள் (squamous cell). இவை தோலின் மேற்பரப்பில் தோன்றும். இவற்றின் வெட்டுப்பரப்பு இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். மெலனோமா. இவ்வகைக் கட்டிகள் தோல் மற்றும் வாயின் உட்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தனியான சிறிய கட்டிகள் போலத் தோன்றும். தோலின் மேல் ஏற்படுபவை சாதாரணமாகவும் உயிருக்குக் கேடில்லாமலும் இருக்கும். வாயின் உட்பகுதியில் காணப்படுபவை சில சமயங் களில் உயிருக்குக் கேடாகலாம். ஆனால் கூட்டாக இரத்தக் ஹெமான்ஜியோமா. இவை குழாய்களில் ஏற்படும் கட்டிகள். கால்கள் மற்றும் மண்ணீரல்களிலும் காணப்படும் இவை பஞ்சு (sponge) போன்று காணப்படும். இவை மிக மெதுவாக வளரக்கூடியவை. இவற்றை அறுவை மருத்துவத்தால் தான் குணப்படுத்த முடியும். அடிணோ கார்சினோமா. இவை உணவுக்குழாய் பாதைகளில் வயிற்றிலிருந்து குடலின் இறுதிப் பகுதி வரை ஏற்படலாம். இவை சிறுகுடல் மற்றும் பெருங் குடலில் பெரிதாக வளர்ந்து அடைப்பை ஏற்படுத்தும். இதைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து அறுவை மூலம் குணப்படுத்துதலே சிறந்ததாகும். கணையத்தில் உண்டாகும் கட்டிகள் இவை கணையத்தின் எந்தப் பகுதியிலும் உண்டாகலாம். வை சிறிய மற்றும் வெள்ளை நிறக் கட்டிகளாக இருக்கும். கணையத்தி.. செல் களிலிருந்து இன்சுலின் என்னும் ஹார்மோன் சுரக் றை கிறது. ஆகவே உடலில் சர்க்கரைச் சத்துக் வால் ஏற்படும் அறிகுறிகளை வைத்து இவ்வகைக் கழலைக்கட்டிகளைக் கண்டுபிடிக்கலாம். லியோமயோமா. இவை மென்மையான திசை செல்களிலிருந்து உண்டாகும். உணவுக் குழாய்ப் பாதைகள், குடல் பாதைகள், கருப்பை, பெண் இன உறுப்புகளில் காணப்படும். இவை தனியாக பெரியன வாக காணப்படும். மேலும் மிக மெதுவாகவே வளர் கின்றன. அறுவை மருத்துவம் மூலமே குணப்படுத்த இயலும். ஆஸ்ட்டியோக எண்டிரேபாஸ். பொதுவாக இவை தோள்பட்டை எலும்பு நெஞ்சு எலும்புகள், முது கெலும்புகள் இடுப்பு எலும்புகள் ஆகியவற்றில் காணப்படும். ஆஸ்ட்டியோ சார்க்கோமா. பெரிய நாய்களில் உண்டாகின்றன. நாய்களின் நீளமான எலும்பு களைத் தாக்குகின்றன. இவற்றைக் குணப்படுத்த பாதிக்கப்பட்ட உறுப்புகளை அறுவை மூலம் அகற்று தலே பயனுள்ளதாகும். ஹெப்படோமஸ். இவ்வகைக் சுழலைக்கட்டிகள் நாய்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவை சுல்லீரல்களின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. வை மென் தன்மை கொண்ட கட்டிகள் ஆகும். கணையக் குழாய்களில் ஏற்படும் கட்டிகள். இவை புறப்படைத் திசுக்களிலிருந்து(epethelial cells)தோன்று கின் றன. வை தனியான பெரிய கட்டிகளாக இருக்கும். இந்தச் செல்களில் மியூசின் என்னும் பொருள் உள்ளது. இவ்வகைக் கழலைக் கட்டிகளைக் குணப்படுத்த சரியான மருத்துவம் எதுவுமில்லை. அடினோகார்சினோமா. இவை சிறுநீரகத்தைத் தாக்கக் கூடியவை. முன்பாகவே கண்டுபிடித்து, சுட்டி கள் உள்ள சிறுநீரகத்தை அறுவை மூலம் அகற்றுவதே சிறந்த வழியாகும். செர்சோலி செல்கட்டிகள். இவை செமினிபெரஸ் குழாய்களில் தோன்றுகின்றன. சமயங்களில் சில இரண்டு விதைகளிலும் காணப்படுகின்றன. பாதிக் கப்பட்ட விதையின் எதிர்ப்பக்க விதை செயலிழந்து விடுகிறது. இக்கட்டிகளால் 25 க்கு மேற்பட்ட நாய்கள் பெண்மைத்தன்மை உடையனவாக மாறி விடுகின்றன. ஆண்மை நீக்கம் செய்தலே சிறந்தது. சுக்கிலச் (prostate) சுரப்பிகளில் அடினோ கார்சி னோமா. இவ்வகைக் கட்டிகள் சிறுநீர்க் குழாய்களில் ஒரு குழாயையோ இரண்டு இரண்டு குழாய்களையுமோ அடைத்துவிடக்கூடும். இதனால் இரண்டாம் நிலை ஹைட்ரோ நெஃப்ரோனிஸ் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த மருத்துவம் இல்லை. மேலும் கட்டிகளை முழு வதுமாக அறுவை மூலம் நீக்குதலும் இயலாததாகும். நுண்துகள் செல் கழலைக் கட்டிகள். இவை ஈஸ்ட் ரஜன் மற்றும் ஆண்ட்ரஜன் ஆகிய ஹார்மோன்