உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/884

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

864 கழுகு

864 கழுகு மலை சார்ந்த காடுகளிலும் பள்ளத்தாக்கு களிலும் அரிதாகக் காணப்படும் போனெல் கழுகை (Hieraaetus fasciatus) மக்கள் ராஜாளி என்றே கூறுகின்றனர். சற்று மெலிந்த தோற்றம் கொண்ட இது கருடனைவிடச் சற்றுப் பெரியது. வால் நீண்டி ருக்கும். உடலின் மேற்பகுதி ஆழ்ந்த மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். கருங்கோடுகளோடு கூடிய வெள்ளை வயிறும் மார்பும், நீண்ட வாலும் பறக்கும்போது இதைப் பிற கழுகுகளிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. தன் எடையைவிட மிகு எடையுள்ள ரைகளையும் துணிவாக அடித்துத் தூக்கிச் செல்லும். இரையைப் பற்றி எடுக்கும்போதே கூர்மையான நகங்களைப் பறவை அல்லது விலங்கு களின் உடலில் செலுத்திக் கொன்றுவிடும். கவுதாரி, காட்டுக்கோழி, பச்சைப்புறா. காசும் போன்ற பறவைகளையே இது வேட்டையாடும். கூட்டமாக இராத் தங்கலுக்காகப் பறக்கும் காகம் புறா போன்ற பறவைகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இரண்டு கழுகுகள் கூட்டாகச் சேர்ந்து மாறிமாறித் துரத்திக் களைப்புறச் செய்து வேட்டையாடும். பழக்கமும் உண்டு. காடுகளில் உயரவளர்ந்துள்ள மரங்களிலும், மனிதர்கள் நெருங்க இயலாத பாறை இடுக்குகளிலும் கூடுகட்டி ஓரிரு முட்டைகளை இடும். தோற்றத்தில் போனல் கழுகை ஒத்த ஆனால், அளவில் சிறிய மற்றொரு ராஜாரிக்கழுகு (H. Pennatus) இறகு போர்த்த காலுடையது. கால் முழுதும் வளர்ந்துள்ள இறகுகளைக் கொண்டு இதைக் கள்ளப் பருந்திலிருந்து வேறுபடுத்தி அறிய லாம். ஆணும் பெண்ணுமாக வட்டமடித்துப் பறந்து ரை தேடும். இது எலி, அணில், வானம்பாடி கொண்டைக் குருவி போன்ற சிறு உயிர்களையே வேட்டையாடும். கோழிக்குஞ்சுகளையும் தூக்கிச் செல்லும். டிசம்பர் முடிய ஏப்ரல் வரையான பருவத் தில் மரங்களில் உயரக் கூடுகட்டிச் சிவப்புக் கறைக ளோடு கூடிய வெள்ளை நிற முட்டைகள் இரண்டை இடும். இந்தியாவில் இமயமலையின் வடகிழக்குப் பகுதி களிலும், மேற்குத் தொடர்ச்சிமலையில் வடக்கு மைசூர், கேரளம் ஆகிய பகுதிகளிலும், இலங்கையின் தென்பகுதியிலும் மட்டுமே காணப்படும். கருஞ்சிவப்பு வயிற்றுக் கழுகு (Lophotriorchi's Kiener. l) கொண்டை யனைப் போலத் தலையில் கொண்டையோடு பறக் கும்போது கருஞ்சிவப்பு நிற வயிற்றைக்கொண்டு இதை அடையாளம் கண்டு கொள்ளலாம். வாலில் சாம்பல் நிறப்பட்டைகள் காணப்படும். மார்பு கருங் கோடுகளோடு கூடிய வெள்ளை நிறங்கொண்டது. வானில் இறக்கை அடித்தவாறு வட்டமிட்டு தேடும். இது காட்டுக்கோழி, பச்சைப்புறா, அணில் முதலியவற்றை அடித்து உண்பதோடு, வளர்ப்புப் புறாக்கள், வீட்டில் வளர்க்கும் கோழிகளின் குஞ்சுகள் ஆகியவற்றையும் தூக்கிச் செல்லும். மரங் களில் உயரக் கூடு கட்டி டிசம்பர்-மார்ச் முடிய இனப்பெருக்கம் செய்யும். இது சிலசமயங்களில் இரண்டு கூடுகளைக் கட்டிக் கொண்டு அவற்றைப் ரை