உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/890

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

870 கழுதைப்புலி

870 கழுதைப்புலி பொராகோ இண்டிகா (Borago indica) என்பது இதன் பழைய பெயராகும். இது போராஜினேசி குடும் பத்தைச் சேர்ந்த செடி. இச்செடிகளை இந்தியச் சமவெளி, பலுசிஸ்தான், ஸ்ரீலங்கா, மொரிஷியஸ், ஆஃப்கானிஸ்தான், பெர்ஷியா ஆகிய நாடுகளில் காணலாம். கவிழ்தும்பை என்னும் பெயரே காலப் போக்கில் கழுதைத்தும்பை ஆயிற்று என்பார். வுடையவை. செடி. கழுதைத்தும்பை, நேராக வளரும் ஒரு பருவச் செடியாக நன்கு கிளைத்து வளரும். செடி முழுதும் மயிரடர்ந்து 15-45 செ.மீ. உயரம் வளரும். இலைகள் 3-8-10 செ. மீ. 0.6-5 செ. மீ. அள லை காம்பற்று முட்டைவடிவம் அல்லது நீள் முட்டை வடிவமானது. இலை நுனி மழுங்கியோ சற்றுக் கூராகவோ இருக்கும். பூக்கள் செங்கரு நீல நிறமானவை. இவை இலைக்கெதிராகத் தனித்தனியாக இருக்கும். செடி நுனியில் சில பூக்கள் சைம் மஞ்சரியாக இருக்கும். பூக்காம்பு 6-13மி.மீ. நீளமுடையது. புல்லிவட்டம் 11 மி. மீ. நீளமுடையது. இலை மற்றும் புல்லிகளின் மீது நீளமான மயிர் இருக்கும். அல்லிவட்டம் 1.3செ.மீ. நீளமானது. அல்லிவட்டக் குழல் 6மி. மீ. நீளமாயிருக்கும். இதில் ஒவ்வொரு கதுப்பும் 3-4 மி. மீ நீளமிருக்கும். மகரந்தத்தாள்கள் அல்லிவட்டக் குழலில் தோன்றும், சூல்பை (ovary) முட்டை வடிவிலிருக்கும். சூல் தண்டு 6மி.மீ. நீளத்தில் பளபளப்பாக இருக்கும். காய்கள் பிரமிடுகள் வடிவிலிருக்கும். பழுத்த காய்கள் கலந்த வெள்ளை நிறமாகவோ, மாகவோ இருக்கும். வெள்ளை நீலம் நிற பயன்கள். கழுதைத் தும்பை மருந்தாகப் பயன் படுகிறது. இது சிறுநீரைப் பெருக்கும்; இரத்தத்தைத் தூய்மை செய்யும். புதிய இலைகளிலிருந்து சாறு தயார் செய்து புண்களைக் கழுவ, அவை விரைவில் ஆறும். இலையைத் தேன் விட்டு வதக்கி நீர் சேர்த்துச் சாறு தயாரித்து அருந்தி வரப் பெரும் பரடு நீங்கும். இலைகளைத் தூய்மை செய்து அரைத்து ஆமணக்கு எண்ணெயுடன் கிளறி அரை யாப்புக் கட்டிக்கு வைத்துக் கட்டினால் நலம் பெற லாம். இச்செடியை எடுத்துக் கல், மண் போக்கி ஒரு கைப்பிடியளவு பொடித்து ஒரு லிட்டர் நீர்விட்டு கஷாயம் செய்து காலை மாலை 125 மில்லி வீதம் கொடுத்துவர அரையாப்புக் கட்டி, வாதநோய். இரத்தமும் சீதமும் கலந்து வெளிவரும் கடுப்பு முதலிய நோய்கள் நீங்கும். இறந்த கருவை (dead foetus) வெளிவரச் செய்யும் மருந்துக் குணம் இச் செடிக்கு உண்டு. இதன் வேரைத் தனித்தெடுத்து நசுக்கி அரைத்துப் பசையாக்கி வீக்கங்களுக்கும் மூட்டு வீக்கங்களுக்கும் தடவிவர நலமாகும். காய்ச்சலைக் குணமாக்கும் தன்மையும் ச்செடிக்கு உண்டு. இதன் இலைகளுக்குப் பாம்பின் நஞ்சை முறிக்கும் குணமுண்டு என ஒரு சாராரும் செடிக்கு அத்தகைய குணமில்லை என வேறுசாராரும் குறிப்பிடுகின்றனர். கோ.அர்ச்சுனன் கழுதைப்புலி கனத்த உடலையும், கூரிய பெரிய காதுகளையும் அடர்ந்து வளர்ந்துள்ள பிடரி மயிரையும் பெற்றுள்ள கழுதைப்புலிகள் புறத் தோற்றத்தில் நாயை ஒத் துள்ளன. இரவில் திரியும் இவை திறந்தவெளிக் காடு களிலும், பாலை நிலங்களிலும் வாழ்ந்து, இறந்து கிடக்கும் விலங்குகளையோ, அவற்றின் எலும்புகளை யோ உண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்து கின்றன. உயரமான முன் கால்களையும் சரிந்து தாழ்ந்துள்ள பின்பகுதியையும் கொண்டுள்ளன. ஆண்கழுதைப்புலியில் இரு விந்தகங்களும் இரு மடிப் புள்ள விந்தகப் பைக்குள் உள்ளன. பெண் விலங்கின் புணர்ச்சி உறுப்பு இரண்டு கழுதைப்புலி இனங் களிலும் வெவ்வேறு அமைப்பில் காணப்படுகிறது. இரண்டு குட்டிகள் முதல் நான்கு குட்டிகள் வரை ஈன்றெடுக்கும் இவற்றின் பேறு காலம் ஏழு மாதங்க ளென்றும்,ஆயுள் காலம் பதினாறு ஆண்டுகளென்றும் கணக்கிட்டுள்ளனர். குட்டையான மீசை மயிரும். குதத்தைச் சுற்றிச் சுரப்பிகளும், எண்ணைய்ச் சுரப்பி களும் உள்ளன. மனிதரைக் கண்டு அஞ்சும் பண்புடைய கழுதைப் புலிகள் பிற விலங்கினங்களால் தாக்கப்படும்போது இறந்தவை போல் நடித்துத் தப்புகின்றன. வரித் தோல் கழுதைப் புலிகள் ஆஃப்பிரிக்காவிலும், இந்தி யாவிலும், பழுப்புத்தோல் கழுதைப் புலிகள் ஆஃப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. பொதுவான புறத்தோற்றத்திலும், கால்கள், பாதங்கள் ஆகிய வற்றின் வடிவமைப்பிலும் கழுதைப்புலிகள் நாயின் அமைப்பைக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் மண்டை ஓட்டு அமைப்பும், பற்களின் வடிவமும். அமைப்பும் பூனைக் குடும்பத்தைப் போன்றுள்ளன. கழுதைப் புலியின் கனத்த உடல் அகன்ற தலை யைச் சுமந்துள்ளது. கூர்மையான பெரிய காதுகளில் பெரிய மிகுதியான மேடுகள் காணப்படுகின்றன. கழுதைப்புலிகளில் மட்டுமே பிடரி மயிர் காணப் படும் கீழ்நோக்கிச் சரிந்து தொங்கிய நிலையில் அமைந்துள்ள உடலின் பின்பகுதியைப் பின்புறக் குட்டைக் கால்கள் தாங்கியுள்ளன. சிறுத்த பரும னுள்ள முன்கால்கள் இரண்டும் உயரமாகவும் உறுதி யாகவும் அமைந்துள்ளன. பாதங்களால் தரையைத் தொடாமல் விரல் களால் மட்டுமே தரையைத் தொட்டு நடக்கின் றன. ஒவ்வொரு பாதத்திலும் அமைந்துள்ள நான்கு விரல