உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருக்கு 12

அருக்கு 12 பெ. சீந்தி. (வாகட அக.)

அருக்கு 13 பெ. சூரியன். கதிர் வாள் அருக்கு ஒளியார் வீடு (சிங். சிலே. 41).

விண்ட

அருக்குக்கொல்லை பெ. ஆற்றோரத்து நிலம். ஆற் றுப் பெருக்கிலே அருக்குக்கொல்லைகளுடைந்தால் நோக்குகிறவர்கள் கைவிட்டுக் கடக்கநின்று கூப் பிடுமாபோலே (தொண்டரடி. திருமாலை 19வியாக்.).

அருக்கை பெ. தமக்கை, (சங். அக.)

கனுள்

அருகசரணம் பெ. சமண சமயத்தில் சரணம் நான் முதலாவதாகிய அருகனைச் சரண்புகுகை. இஃது அருக சரணம் சித்த சரணம் சாது சரணம் தன்ம சரணம் என்னும் நான்கினுள் சித்த சரணம் (சீவக. 1. நச்.).

அருகசனி பெ. பேரேலம். (வைத். விரி. அக.ப.22)

அருகஞ்சி பெ. சீந்தில். (பச்சிலை. அக.)

அருகணி பெ. பிரண்டை. (மலை அக.)

அருகணை பெ. நுழைவாயிலின் பக்கம். கோபுரத்தின் சேதகமான முகவணை அருகணை (கோயிலொ. 138).

அருகத்தசை பெ. பெளத்தத்தில் நிருவாணமடைந் தோர்க்குரிய நான்காம் தியானவான் நிலை. தரு மோபதேசம் பெற்று அருகத்தசையை அடைந்தான் (புத்த சரித். ப. 23).

அருகத்தானம் பெ. அருகன் கோயில். ஐவகை நின்ற அருகத்தானத்து (சிலப். 10, 18). அருந்தவர் பள்ளி யும் அருகத்தானமும் (பெருங்.4, 2, 12).

அருகதிகம் பெ. வண்டல்மண். (புதுவை வ.)

அருகதை பெ. தகுதி. அவர் பக்கத்திலே வந்து நிற்கக்கூட எனக்கு அருகதை இல்லை (நாட்.வ.).

அருகந்தக்கையர் பெ. அருக சமய ஒழுக்கமுடையோர். அந்த வேலை அருகந்தக்கையரை இகழ்ந்து வை செப்புவார் (திருவிளை. பு. 63,11).

...

அருகந்தர் பெ. அருகசமயத்தவர். அருகந்தர் முன் கலங்க (நம்பியாண். மும். 26). அருகந்த வெவ்

வினையாளரும் சென்று மேவிட (பெரியபு. 21, 124).

3

63

அருகல்3

அருகந்தாவத்தை பெ. பொன்னுயிர் என்னும் அருக நிலை. (சீவக. 3107 நச்.

அருகபத்திரம் பெ. எருக்கு. (மரஇன. தொ.)

அருகம்1 பெ. தகுதி. அருகங் கவசந்தான் அப்பு உக்கணத்து (சைவ. நெறி பொது 355).

அருகம்2 பெ. உரிமை. சந்தனம்

...

அந்திவான்

வண்ணன் மேனிக்கு அருகம் இவ்வாறும் (சிவதரு.

1, 34).

அருகம்' பெ. சமண மதம். பௌத்தம் அருகம் (சூத.

எக்கிய. பூருவ. 32, 12).

அருகம்' பெ. அகில். (மரஇன. தொ.)

அருகம் 5 பெ. சீந்தில். (பச்சிலை. அக.)

அருகர் ' பெ. அணிமை. அருவரை அருகர் ஆய் நலம் கவினிய (பெருங்.2,11,56). துறக்க நாடு அருகர்க் கண்டான் (கம்பரா. 5, 1, 1 பா.பே.).

அருகர்' பெ.

1.இருடிகள். அருகர் அறவன் அறி வோற் கல்லது.... இருகையும்...குவியா (சிலப். 10, 202). 2. சமணர். அருகரொடு புத்தர் அறி வரியா அரன் (தேவா. 1, 12, 10). அருகர் தம்மைத் தவர்கின்ற தண் தமிழ் சைவ சிகாமணி (நம்பியாண். ஆளுடைய. அந். 14). கருநடர்வேந்தன் அருகர்ச் சார்ந்து (கல்லாடம்

55, 13-14). அருகர் மதியா துரைத்த உரை ஆற்றாராகி (பெரியபு. 27, 11). 3. தக்கவர். அந்த நிலைதரு முத்திக் கருகராகுவார் (பெருந்.பு.17,11). அங்கண் ஞான நிலைமைசேர அருகராகும் அவர்கள் (சேதுபு. முத். 52).

அருகர்' பெ. நில்லாமை, நிலையாமை, அருகர் நில்லாமையுமாம் (பொதி. நி,2, 108).

...

அருகல்1 பெ. 1. குறைவு. அருகல் இலாய பெருஞ் சீர் (திருவாய். 1, 9, 3). வயலுக்குத் தண்ணீர் மிக வும் அருகலாயிருக்கிறது (பே.வ.) 2. அருமை. (இலங்.வ.)

அருகல்2 பெ. உடலை வருத்தி ஒடுக்குதல். வினைகள் மாற்றிட அருகலும் (கந்தபு. பாயி. 26).

அருகல்' பெ. 1. 1. அருகு, அணிமை. பருகுநீர் பைஞ் சுனையில் காணாது அருகல்வழி (திணைமாலை. 78).