உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருகு *- தல்

அருகு -தல் 5 வி. கிட்டுதல். சூழ்தலும் அருகுதலும்

உடைமையான்

(இறை.அக. 28 உரை).

அருகு - தல் 5 வி,

குறிப்பித்தல். தன்னுட்குறிப்பினை

(முன்.11).

அருகும் தோழிக்கு

அருகு 6- தல் 5 வி. பெருகுதல். அருகு நேமி பாதாளம்.

(தக்க. 104 பெருகப்பட்ட சக்கரவாளம் ப. உரை).

அருகு பெ. 1. அண்மை, சமீபம். புயலாடு வண் பொழில் சூழ் படப்பைத் தடத்தருகே முயலோட (தேவா. 1, 12, 9). அம்மாநின் பாதத்து அருகு (இயற். பெரியதிருவந். 7). அருகுசிறை மருங்கின் ஒரு மகள் வைத்த... பிணையல் (பெருங்.3,9,119). ஒருத்தி ...சாந்தும் நாற வந்து அருகு நின்றாள் (சீவக 1567). அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் (கம்பரா. 1,6,17). அங்குறையு நாளின்கண் அரு குளவாம் சிவாலயங் கண்டு (பெரியபு. 21, 338). சுயோதனனுக்கு அருகாசனத்தர் (பாரதம். 1, 5, 36). 2. (ஒருபொருளின் ) ஓரம். மொய்ம்மலரைத் தும்பி அருகுடைக்கும் (நள. 3, 21). அரண்டருகும் நெருங் கிப் பெருத்திருக்கையாலும் அமலனாதி. 6 அழ.). இத்துணியை அருகு தைத்துக்கொடு (பே.வ.). ஒருசார் பக்கம். அருகில் கண்டும் அறியார்போல (புறநா. 207,3). அருகே சிறு கூகை உட்க (காரை. பதிகம் 2, 3). அருகே நின்றாள் என் பெண் நோக் கிக் கண்டாள் (பெரியாழ். தி. 3, 4, 3). அருகுறு பாலின் வேலை அமுது எல்லாம் (கம்பரா. 3, 7,

3.

109). சாறு அருகு பாயும் வயல் (தேவா.7,37,1). அருகு நின்றவர் வெருவி ஓடினார் (சூளா.1301). 4. இடம். தலை இடம் அருகு தானம் கண் இடை. (பிங். 719). 5. பள்ளம். (கயா.நி.80)

அருகு பெ. மரியாதைத் தீவட்டி. (வின்.)

அருகுக்கால் பெ. கதவுநிலை. (வட்.வ.)

அருகுகண்டம் பெ. பதக்க அணிவகை. நாயககண்டம் ஒன்று அருகுகண்டம் ஆறு கடைத்தொழில் இரண்டு (தெ.இ.க. 8,103).

அருகுசாதி பெ. ஆசான்சாதி யாழ்த்திறங்களுள் ஒன்று. (சிலப். 13, 112 அடியார்க்.)

அருகுதை - த்தல் 11 வி. ஓரம் மடித்துத் தைத்தல்.

(செ. ப. அக.)

3

65

அருங்கலம் 3

அருகுநோக்கம் பெ. குறிக்கொண்டு பாராத பார்வை. பாவைதன் அருகுநோக்கம் என் ஆவி அலைக் குமே (சீவக. 1306).

அருகுமணிச்சேலை பெ. புடவை வகை. ஆம்பல் போதன்ன பந்தர்ச் சேலை அருகுமணிச் சேலை யிது (பஞ்ச.திருமுக. 1162-1163).

அருகுவை -த்தல் 11 வி. இழுப்புநோய் கண்ட குழந்தைக் குப் பரிகாரமாகச் சூடுபோடுதல். (வட்.வ.)

அருகோலம் பெ. அந்திமந்தாரை. (மரஇன. தொ.) அருங்கல் பெ.சுருங்குகை. (சம். அக./செ. ப. அக. அனு.) அருங்கலச்செப்பு1 பெ. அணிகலப் பெட்டி. ஆயிரங் கண்ணோன் அருங்கலச்செப்பு வாய்திறந்தன்ன (சிலப். 14, 68).

அருங்கலச்செப்பு' பெ. 180 குறள் வெண்பாவாலான சமண சமய நூல். அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார் (அருங்கலச். 175).

அருங்கலநூல் பெ. இன்று கிடைக்காது மறைந்துபோன நூல். அருங்கலநூலும் அதிலுள்ள மறைபொருள் உபதேசமும் (யாப். வி. 96 உரை).

அருங்கலப்பெருந்தெய்வம்

பெ. அட்ட

இலக்குமிகள்.

அருங் கலப் பெருந்தெய்வ மவையும் தத்தமக்கு (சூளா.1505).

அருங்கலப்பேழை பெ. அரிய மாணிக்கம் பெய்த பெட்ட கம். அருங்கலப் பேழை ஐஞ்ஞூறு (சீவக. 557). அருங்கலம் 1 பெ. 1. நகை, அணி, ஆபரணம். பலர் புறங்கண்டு அவர் அருங்கலம் தரீஇ (மலைபடு. 71). அருங்கல வெறுக்கையோடு (சிலப். 5,20). அருத் தம் அருங்கலம் நிரைத்தனர் தந்திட்டு (பெருங். 3,17, 200). அருங்கலச் சும்மை தாங்க மருங்குலும் உண்டு (கம்பரா. 6, 28, 44). ஐவகை ஒழுக்கம் என் னும் அருங்கலம் (யசோதர. 54).

அருங்கலம் ' பெ. கிரீடம், முடி. இரும்பும் வெள்ளியும் இசைத்து உருக்குறீஇ அருங்கலமாக்கி (பெருங். 2, 17, 69-70 அருங்கலம் - கிரீடம். உ. வே. சா. அடிக்குறிப்பு). அருங்கலம் உலகின் மிக்க அரசர்க்கே உரிய (சூளா.

1015).

அருங்கலம் ' பெ.

(சைனம்) நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் ஆகிய முப்பொருள், இரத்தினத் திரயம். நாதர் நுவன்ற அருங்கலம் (திருநூற். 70).