உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருசி

1.

அருசி பெ. (அ+ருசி) சுவை இன்மை. வாய் அருசி சோபை (பதார்த்த. 545). 2.விருப்பமின்மை. (செ.ப.அக.) 3. பற்றுக்கொள்ளாநிலை. (பே.வ.) அருசிப்பித்தம் பெ. உணவு வெறுக்கச் செய்யும் பித் தம். (செ.ப. அக.)

...

அருஞ்சிறை பெ. 1. கடுங்காவல். அருஞ்சிறையின் மீட்ட நாள் (கம்பரா. 5, 4, 20). 2. நரகம். துவந்தம் அருஞ்சிறை இவை நரகப்பெயர் (பிங். 455). அருஞ்சுரம்! பெ. 1. பாலை நிலம். கானவர் கடறு கூட்டுண்ணும் அருஞ்சுரம் (பெரும்பாண். 117). அருஞ் சுரம் முன்னிய மாணிழை மடவரல் தாயிர் நீர் போறீர் (கலித். 9, 10-11). குழவி அருஞ்சுரம் சென்று (சூளா.1988). 2. கடத்தற்கரிய காடு. அருஞ் சுரம் இறந்து நீர் செய்யும் பொருளினும் (கலித். 5, 3-4). 3. நிழலற்ற நெடிய வழி. (சங். அக.)

அருஞ்சுரம்' பெ. கடுமையான காய்ச்சல். (பே.வ.) அருஞ்சுனை பெ

சிறந்த மலை ஊற்று. அறை அணிந்த அருஞ்சுனையான் (பரிபா. 9,62).

அருஞ்சோதி! பெ. சிறந்த ஒளி வடிவான இறைவன். (செ. ப. அக.)

அருஞ்சோதி 2 பெ. நெல்வகை. (சங். அக.)

அருட்கண் பெ. 1.கருணை நோக்கம். பண்டைய வடிவம் தோன்றப் பரஞ்சுடர் அருட்கண் தோன்ற (திருவிளை. பு.2, 22). 2. ஞானக்கண். அயிராவணமே என் னம்மானே நின் அருட்கண்ணால் நோக்கா தார் அல்லாதாரே (தேவா.6,25, 1).

அருட்குடையோன் பெ. கடவுள். (வின்.)

அருட்குறி பெ. சிவலிங்கம். ஆனுயர்த்தவன் அருட் குறி அருச்சனை (சிவஞா. காஞ்சி. சார்ந்தா. 21). ஆங் கணைந்து அக்களாவின் அருட்குறி தன்னை நோக்கி (கருவைப்பு. 3,15). அருட்குறி நிறுவி அருச்சனை செய்த (கல்லாடம் 12, 17).

அருட்கொடிவேந்தன் பெ. அருகன். வில்மதனை வென் றோன் அருட்கொடிவேந்தன் (சூடா. நி. 1, 2).

அருட்கொடையோன்

அருட்சத்தி1 GLI.

பெ. கடவுள். (வின்.)

. திரோதானசத்தி அருள்பொழியும் நிலை. திரோதம் பராபரமுத்திகள் நல்குற்ற செயலின் அருட்சத்தி (சிவப்பிர. விகா.276).

...

3

58

அருட்டுறை

அருட்சத்தி 2 பெ. பாதரசம். (சித். பரி. அக. ப. 155) அருட்சி (அரட்சி) பெ. மனக்குழப்பம். (செ. ப. அக.) அருட்சித்தி பெ. பாதரசம். (வின்.)

அருட்செல்வம் பெ. 1. கருணையாகிய செல்வம். அருட் செல்வம் செல்வத்துட் செல்வம் (குறள். 241). 2. தெய்வக் கடைக் கண்பார்வை. (செ.ப.அக.)

அருட்சோதி 1 பெ. கடவுள். அருட்சோதி சிவம்

(திருவருட்பா 5255).

...

அருட்சோதி' பெ. கெளரிபாடாணம். (வைத். விரி. அக.

ப. 22)

அருட்டகம் (அருட்டம் 1, அருட்டை) பெ. கடுகு ரோகிணி. (மரஇன. தொ.)

அருட்டம்1

(அருட்டகம், அருட்டை) பெ. கூடுகு

ரோகிணி. (வைத். விரி. அக.ப. 22)

அருட்டம் 2 பெ. 1. வேம்பு. (முன்.) 2. மலைவேம்பு. (செ. ப. அக. அனு.)

அருட்டம் 3 (அருட்டனம், அருட்டினம்) பெ. மிளகு.

(முன்.)

அருட்டரிசனம் பெ. தெய்வ தரிசனம். அருளில் தான் அசைவற நின்ற இடம் அவ்வருட்டரிசனம் (ஒழிவி. விரத்தி. 9 உரை).

அருட்டனம் (அருட்டம்", அருட்டினம்) பெ. மிளகு. (வாகட அக.)

அருட்டி1 பெ. 1. நடுக்கம். (பே.வ.) 2. அச்சம். (முன்.) அருட்டி 2 பெ. மிளகு. (பச்சிலை. அக.)

அருட்டினம் (அருட்டம்", அருட்டனம்) பெ. மிளகு. (வாகட அக.)

அருட்டு--தல் 5வி. அச்சுறுத்தல். அருட்டிக் கண் சிமிட்டி (திருப்பு. 15). அருட்டப்பார்க்கும் அசைந்திருந்தால் (மலைய. ப.168).

அருட்டு-தல் 5 வி. எழுப்பிவிடுதல். (வின்.)

5

...

அருட்டு-தல் 5 வி. ஏவிவிடுதல், தூண்டிவிடுதல். (செ.

சொ. பேரக.)

அருட்டுறை பெ.

திருவெண்ணெய்நல்லூர்த் திருக்

கோயிலின் பெயர். தென்பால் வெண்ணெய்