உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவருப்பு

னாயேல் (பெரியதி. 9,7, 2). அவ்வூரில்

துவக்

குடைய எல்லாவற்றையும் அருவருத்தேன் (சில்லரை

ர. ப.216).

அருவருப்பு பெ. மிகுவெறுப்பு.

அருவருப்புடையது

அவ்வாண்மையாகுமே (சூளா.1380). அருவருப் புடைய மெய்யின் (யசோதர. 45).... மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப் பாயிருக்கிறது (விவிலி. லூக். 16,15).

அருவருளி மூலி பெ. ஆமணக்கு. (மரஇன. தொ.)

அருவரையேறி பெ. (யோகநெறியில்) ஆறாதாரம் ஏறி. (சித். பரி. அக.)

2.

அருவல் பெ. 1. துன்பம். (செ. ப. அக.) 2. நோய் வகை. வயிற்றருவல் (பே.வ.).

அருவல்நொறுவல் பெ. முழுமையாக அன்றி ஓரளவு மட்டும் இடித்த அல்லது அரைத்த தானியம். (இலங்.வ)

அருவன்

அருவன் பெ. சூக்குமரூபியான சிவம். அருவனும் ஆகிய ஆதரத்தானே (திருமந். 2390). ஆலவாய் மருவினான் (தேவா. 1,94,9).

அருவா 1-தல் 5வி. 1. (சைனம்) பிறப்பறுதல். அரு வாய்ப் போதல் அழகிதோ (சீவக. 3021). 2. தீர்ந்து போதல். (ரா. வட். அக )

அருவா 2 பெ. அருவாநாடு. பன்றி யருவா அதன் வடக்கு (நன். 273 உரைமேற்கோள்).

அருவாட்டி பெ. அருவா நாட்டுப் பெண். அருவாட்டி.. சோழிச்சி ... பேரூர்க்கிழத்தி எனவும் வரும் (தொல். சொல். 167 நச்.).

அருவாணம் 1 பெ. செப்புத்தாலம். (வின்.)

அருவாணம்' பெ. கோயிற் பிரசாதம். (கோயிலொ. 50) அருவாணாடு பெ. அருவாநாடு. (நன். 272 மயிலை.) அருவாத்தி ! பெ. மீன்வகை. மீன்வகை. (தொ.வ.)

அருவாத்தி' பெ. (அரிவாள் + கத்தி ) புல் அறுக்கவும் மரங்களின் கிளைகள் வெட்டவும் உதவுங்கருவி. (தொ.வ.)

அருவாநாடு பெ. கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டுள் ஒன்று. (தொல். சொல். 400 சேனா.)

அருவாப்பெட்டி பெ. பனை ஏறுவோர் பாளை சீவும் கத்தி, சுண்ணாம்பு, கடுப்பு, கலக்குமட்டை,

38

0

அருவி2

பொடிக்குழல் முதலியவற்றை வைத்து இடுப்பில் கட்டித் தொங்கவிடுமாறு கமுகம் பாளையில் செய்த ஒரு வகைப்பெட்டி. (தொ.வ.)

அருவாமணை (அருமாமணை) பெ. → அரிவாள்மணை.

(பே.வ.)

அருவாவடதலை

பெ. செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்துள் ஒன்று. பன்னிரு நிலமாவன அருவாநாடு அருவாவடதலை என (நன். 272

மயிலை.).

அருவாள் பெ. அரிவாள். (பே.வ.)

...

...

அருவாள் வடதலை பெ. அருவாவடதலை. அருவாள் வடதலையார் புளியை எகினம் என்றும் (நன். 272 மயிலை.).

அருவாளர் பெ. அகத்தியரால் தென்னாட்டிற் குடியேற் றப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சாதியார். தொல் லருவாளர் தொழில் கேட்ப (பட்டினப். 275). துவரா பதிப் போந்து ... வேளிருள்ளிட்டாரையும் அருவா ளரையும் கொண்டு போந்து (தொல். சிறப்புப். நச்.). வடுகர் அருவாளர் வான்கருநாடர் (தொல். சொல். 51 சேனா.).

அருவி பெ. 1. நீர் வீழ்ச்சி. கல்வீழ் அருவி கடற் படர்ந்தாங்கு (பெரும்பாண். 427). கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி (குறுந். 134). தண் ணருவி (கலித்.32, 16). வீங்குநீர் அருவி வேங்கடம் (சிலப். 11, 41). தாழ் அருவி தூங்குதலால் (காரை. அந். 67). ஆர்த்து அருவிவீழ் சுனை நீர் (தேவா. 6, 7, 2). பிறங்கு மாமணி யருவியொடு இழிதரு பிருதி சென் றடைநெஞ்சே (பெரியதி. 1, 2, 4). வால் நிற அருவி கங்கையை நிகர்ப்பன (கம்பரா. 2, 9, 7). முழங்கு திரைப்புனல் அருவி கழங்கென முத்தாடும் (குற்றாலகுற68). 2. நீர். அருவியாம்பல் (பதிற்றுப். 71, 2). 3. நீரூற்று. கண்ணீர் அருவி பாய (திரு வாச. 27,7). 4. ஆறு. அருவி ... ஆறும் (பொதி. நி. 2,123).5. கழிமுகம். அருவியும் கயவும் கழிமுகம் (பிங். 587). 6.நீர்த்துறை. புகார் அதோமுகம் அருவி கூடல் கயவாய் கழிமுகம் (ஆசி.நி. 161).7. மலை. அருவி... வெற்பும் (பொதி. நி.2,123). ஒழுங்கு. வேலருவிக்கண்ணினார் (சீவக. 291). அருவி2 பெ. 1. தினைத்தாள். அருவி தினைத் தாள் (பிங்.2969). 2. அறுத்த ஒருபிடிக் கதிர். அருவி கட்டும் வல்லயக்காரர் (தெய்வச். விறலி.

தூது 568).

8.