உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

35







காண் என்னும் பகுதி கண் என விகாரப்பட்டது. பகுதி தொழிலை உணர்த்தும் ஏவலாக இருக்கும். மூன்று காலங்களுக்கும் ஒன்றே ஆகையால் 'காண்' என்பதே பகுதியாக இருக்க வேண்டும்.

சான்று:

நடந்தான் = நட + த் (ந்) + த் + ஆன்

இதில் 'நட' என்னும் பகுதியை அடுத்துள்ள சந்தி 'த்' ஆகும் இச்சந்தியைத் திரிக்காமல் எடுத்துக் கொண்டால் 'நடத்தான்' என்று கூற வேண்டும். ஆனால் நடந்தான் என்பது சொல்லாகையால் 'த்' என்னும் சந்தி 'ந்' எனத் திரிந்து வந்துள்ளது.

சான்று:

வந்தான் = வா (வ) + த் (ந்) + த் + ஆன்

வா என்னும் பகுதி 'வ' என விகாரப்பட்டது. த் என்னும் சந்தி 'ந்' என விகாரப்பட்டது.

2.3 பகாப்பதம்

பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். எடுத்துக்காட்டாக மண், கண், நிலம், காற்று, நாய், வா.

2.3.1 பகாப்பதத்தின் வகைகள்

> பெயர்ப் பகாப்பதம்

பெயர்ச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.

எ.கா : நெருப்பு, காற்று, நிலம், நீர்.

வினைப் பகாப்பதம்

வினைச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதம் எனப்படும்.

எ.கா : உண், தின், நட, வா.

இடைப் பகாப்பதம்

இடைச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.

எ.கா : மன், கொல், போல், மற்று.

> உரிப் பகாப்பதம்

உரிச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் உரிப் பகாப்பதம் எனப்படும்.