தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
129
நுண்கதையில் பிழையாகப் புணர்ந்துள்ள சொற்கள்
பிழை
சரி
கயிறுகட்டில் - கயிற்றுக்கட்டில்
பெருத்துளி – பெருந்துளி
வீடிற்குள்
- வீட்டிற்குள்
வெளியேவிருந்த - வெளியேயிருந்த
நிலயொளி - நிலவொளி
பளபளயென
பளபளவென
ஊ) படத்திற்குப் பொருத்தமான தொடர்களில் சொற்புணர்ச்சி 1. பறவைக்குஞ்சு ஒன்று கூட்டிலிருந்து கீழே விழுந்தது.
2. பூனையொன்று, பறவைக்குஞ்சைத் தாக்க முனைந்தது.
3. அங்கு வந்த சிறுவன், பூனையிடமிருந்து பறவைக்குஞ்சைக் காப்பாற்றினான்.
4. தன் தொப்பியில் பறவைக்குஞ்சைப் பாதுகாப்பாக வைத்தான்.
5. பின்னர், மரத்தின் மீதிருந்த கூட்டில், மற்றப் பறவைக்குஞ்சுகளுடன் சேர்த்தான். எ) ஓரிரு தொடரில் விடை
1. புணர்ச்சி என்பது, ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ சொற்கள் புணர்ந்து வருவதாகும். சொற்கள் புணரும்போது, முதலில் வருவது நிலைமொழி, அதனை அடுத்துவருவது, வருமொழி ஆகும். (எ.கா.) பள்ளி + கல்வி = பள்ளிக்கல்வி
2. சொற்புணர்ச்சியை அறிந்துகொண்டால், பிழையின்றிப் பேசவும் எழுதவும் இயலும். செய்யுள், உரைநடை ஆகியவற்றில் சொற்புணர்ச்சியை அடையாளம் காணவும் அவற்றைப் பிரித்துப் பார்க்கவும் எவ்வகைப் புணர்ச்சி என அறிந்துகொள்ளவும் முடியும்.
3. பொன் + தாமரை = பொற்றாமரை
4. கற்றாழை
5. ஆம். பொருள் மாறும்.
தந்தப்பெட்டி – யானையின் தந்தத்தால் ஆன பெட்டி
-
தந்த பெட்டி – ஒருவர் மற்றவர்க்குக் கொடுத்த பெட்டி
6. மாவிலை என்பதே சரி. ஏனெனில், மா + இலை = மாவிலை. இங்கு நிலைமொழி ஈற்றெழுத்து (ம் + ஆ) உயிராக நிற்க, வருமொழி முதலெழுத்தும் இகர உயிராக