138
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
இதற்குப் பொருள் எழுது என்பதாகும். ஆனால் எழுது என்பதில் இல்லாத உறுதிப்பொருள் எழுதிவிடு என்பதில் உள்ளது. விடு என்ற துணைவினையே அப்பொருளைத் தருகிறது. அதேபோல எழுதினேன், எழுதுகிறேன், எழுதுவேன் என்ற வினைச் சொற்களில் இல்லாத உறுதிப்பொருள், அவ்வினைச் சொற்களோடு விடு என்ற துணைவினையைச் சேர்த்து முறையே எழுதிவிட்டேன், எழுதிவிடுகிறேன், எழுதிவிடுவேன் என்று கூறும்போது இருப்பதைக் காணலாம். ஆக, விடு என்னும் துணைவினைக் கட்டாயம் அல்லது கண்டிப்பு என்ற பொருளைத் தருவதாகவும் வழங்குகிறது.
5.4.1 துணை வினைகளின் பண்புகள்
துணை
வினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.
இவை முதல்வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு வலுச்சேர்க்கின்றன. பேச்சுமொழியில் துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
5.5. தனிவினையும் கூட்டுவினையும்
வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கலாம்.
1. தனி வினை
2. கூட்டு வினை
5.5.1 தனிவினை
ஒரு வினைச் சொல்லானது பொருள் தரக்கூடிய பல கூறுகளாகப் பிரிக்க முடியாத போது அது தனி வினை எனப்படும்.
எ.கா
நில்
> நின்றான்
நிற்கிறார்கள்
மேலுள்ள சொற்களில் நில் என்ற சொல் வினையடியாகும். இச்சொல்லை பொருள் தரக்கூடிய வகையில் மேலும் பிரிக்க முடியாது. அதே போல் நின்றான் நிற்கிறார்கள் போன்ற வினைச் சொற்களும் நில் என்ற வினை அடியோடு பல ஒட்டுக்கள் சேர்ந்து உருவாக்கம் பெற்றுள்ளன.
நில் + ற் + ஆன்
> நில் + கிறு + ஆர்கள்