உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







பிறருடைய கருத்தை உள்வாங்கி ஒரு தொடரை உருவாக்கும் பொழுதும் ஒற்றை மேற்கோள் குறி இடப்படல் வேண்டும்.

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற கூற்றின் பொருளை நான் இப்போது உணர்ந்தேன்.

6.2.5.10 தனிமேற்கோள் குறி

எழுத்து அல்லது எண் விடுபட்டுள்ளது என்பதைக் குறிக்க இக்குறி பயன்படுத்தப்படுகிறது. எழுத்து விடுபட்டு எழுதுவது தமிழ்மொழியில் இல்லை. எனவே வருடங்களைக் குறிக்க மட்டும் இங்குப் பயன்படுத்தப்படுகிறது.

6.2.5.11 மேற்படிக்குறி

30 மார்ச், '99

முதல் வரியில் சொல்லப்பட்ட செய்தியே அடுத்த வரியிலும் தொடரும்போது இக்குறி இடப்படும்.

போட்டியில் கலந்து கொண்டோர் விவரம்

அம்பிகா பாட்டுப் போட்டி

விமல்

குமரன்

6.2.5.12 பிறை அடைப்புக்குறி

  • விவரித்தல், கூடுதல் தகவல் போன்றவை இக்குறியிட்டுச் சொல்லப்படும்.

புதன்கிழமை (தை 10) காலை விழா நடந்தது.

ஓட்டப்பந்தயத்தில் செழியன் (வயது 10) முதல் பரிசு பெற்றான்.

தமிழ்த் தேதிகள் எழுதும்போது அவற்றிற்கு இணையான ஆங்கிலத் தேதியைப் பிறை அடைப்புக்குள் எழுத வேண்டும்.

ஐப்பசி 16ஆம் நாள் (2.11.2021)

தமிழை அடுத்துப் பிறமொழிச் சொற்கள் வரும்போதும் பிறமொழியை எழுத்துப் பெயர்த்து எழுதும்போதும் பிறை அடைப்புக்குறி இடல் வேண்டும்.

ரிச் டாட் புவர் டாட் (Rich dad poor dad) புத்தகம் வாழ்வில் பொருளாதார நிலையை யர்த்த வழிகள் கூறுகிறது.

இந்தப் புத்தகங்களைப் பிரதி (Xerox) எடுத்துக் கொள்ளலாம்.