உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலங்காரமாடம்

அலங்காரமாடம் பெ. இறைவனுக்குப் படைத்தற்குரிய பண்டங்களை வைப்பதற்கு ஏற்பட்ட மாடம். (முன்.)

அலங்காரவிளக்கு பெ. மணவிழாக்களில் பயன்படுத்தும் பல கிளைகள்கொண்ட மணவிளக்கு. (தஞ். வ.) (தஞ்.வ.)

அலங்காரி-த்தல் (அலங்கரி-த்தல்) 11 வி. ஒப்பனை செய்தல், அலங்கரித்தல். அயல்

(தணிகைப்பு. அகத். 163).

அலங்காரித்து

அலங்கிதன் பெ. அரிதாரம். (செ.ப.அக.அனு.)

அலங்கிருதம் பெ. புனைவு, அழகு. அரிசன பரிச அலங்கிருதாம்ருத கலசம் (திருப்பு, 54).

அலங்கிருதி பெ. ஒப்பனை. (செ.ப.அக.)

அலங்கு1-தல் 5வி. 1. அசைதல். அலங்கு உளைப் புரவி ஐவர் (புறநா.2, 13). சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை (குறுந். 76). அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமீசை (அகநா. 229, 18). அலங்கு மழை பொழிந்த அகன்கண் அருவி (ஐங். 220). அலங்கு மயிர்ப் புரவியும் (பெருங். 3,24,35). ஆய் மணிப்பைம்பூண் அலங்குதார்க் கோதையாய் (முத் தொள். 123). அலங்கு தண் சோலை புக்கேன் (கம்பரா. 5,14,35). காய் அலங்கிவிட்டது (பே. வ.). 2. மனம் தத்தளித்தல், கலங்குதல். அலங்காத வீரமும் பொறுமையும் தந்திரமும் (அறப்பளி. சத.

53).

அலங்கு 2 - தல் 5 வி. ஒளிர்தல், விளங்குதல். அலங்கும் பாண்டில் இழையணிந்து ஈம் (பதிற்றுப். 64, 10). அகவயிற் பொலிந்து தன் அலங்குகதிர் பரப்பி (பெருங்.3,3,13). அலங்கு தீயிடை உருகு பொன் (கம்பரா. 4, 13, 14). அலங்கு செந்துவர் ஆடையர் (செ.பாகவத. 10,17,6). அலங்கு கதிர் நீலத்தில் பெருவிலை ஆயிரப் பத்தின் அளவைத்தாகி (திரு விளை.பு.17, 73). அறப்பெருந்தூயன அலங்கி மேலிட (கச்சி. காஞ்சி. நகர். 122). செல்வத்து அணி யறை சிறந்தாங்கு அலங்கியது அயோத்தி (அகோர. வேதாரபு. சவுதா. 4). முத்து ஓரம் வைத்து அலங்கு சாந்தாற்றி (குசே. 373).

அலங்கை பெ. துளசி. (மலை அக.)

அலங்கோலப்படு-தல் 6 வி. சீர்குலைதல். அலங் கோலப்பட்டு வந்தேன் (மலைய.ப.59).

அலங்கோலம் பெ. சீர்கேடு. இந்த அலங்கோலமும் இந்த மனோ அதுககமூம் ஏன் வந்ததோ (இராமநா.

406

அலசு1-தல்

1, 7, 3). எங்களுடைய காரியங்கள் எல்லாம் அலங் கோலமாயிருக்கின்றன

(பிரதாப. ப. 118). செய

லெலாம் அலங்கோலமே (சர்வ.கீர்த், 33).

அலங்கோலை

பெ. சீர்கேடு. (புதுவை வ.)

அலசகம் பெ. சோம்பு. (பரி. அக./ செ.ப. அக. அனு.)

அல்சடி பெ

துன்பம்.

அலம்பலும்

அலசடியும்

பட்டேன் (பே. வ ).

பெரும்

பயறு.

அலசந்தி பெ. பழுப்பு நிறமுள்ள

யாவகம் அரசமாடம் அலசந்தி பயறு (நாம.நி. 338). அமுது செய்தருள நாள் ஒன்றுக்கு அல சந்திப் பயறு நாழியாக (தெ.இ.க.5,988).

அலசம்1 பெ. காலில் உண்டாகும் நோய். அலசம் காலின்நோய் (நாநார்த்த. 824).

அலசம்' (அலசல்') பெ. சோம்பல். அலசம் சோம்பல் (முன்.).

அலசல்! (அலைசல்3) பெ. 1. ஆடையில் இழை விலகி யிருக்கை. (செ. ப. அக.) 2.

(வின்.) 3. உருப்படாத வேலை.

சிதறுண்ட பொருள். (LLAGOT.)

அலசல்' (அலசம்) பெ.

சோம்பல். அலசலே கழு

வல் சோம்பல் (நாநார்த்த. 812).

அலசல்' பெ. கழுவல். பாத்திரம் துணி அலசல்

(வட்.வ.).

அலசல்' பெ. ஆனைத்திப்பிலி. (மரஇன. தொ.)

அலசி பெ. நத்தை வகை. (வின்.)

5 வி.

அலசு-தல் (அலைசு - தல்) 1. வருந்துதல். இறுநுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்தாங்கு (மணிமே. 9,7). அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங்கொல்லோ (தேவா. 4,23,4). ஐய சாலவும் அலசினென் (கம்பரா. 2,1,61). அதிகமிடையிடை சிலகொடி அலசவும் (தக்க. 42). உருகும் திறத்த வர் புறத்திருந்து அலச (கருவூர். திருவிசை. 2, 7). அலசும் எனக் கருதாது அவள் கூந்தல் அரிந்து அளித்தான் (நம்பியாண். திருத்தொண்டர்.13).2. சோர்தல். மின்னிடை அலச ஓடி (கம்பரா. 3, 5, 66). அதிலே அலசிப் பின்புமல்லாலே காண நினைந் தவனை நின்ற தூணைக்காட்டித் தான் மறைந் தான் (சிலப். 16, 197 அரும்.). 3.சோம்புதல்.

(மதுரை. அக.)