உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலசு'-தல்

அலசு-தல் (அலைசுதல்) 5 வி. நீரிற் கழுவுதல். துவைத்த ஆடையை அலசி எடு (பே.வ.).

அலசு- தல் 5 வி. (ஒவ்வொரு குறிப்பாக) ஆராய்ந்து நுணுகிக் கூறுதல். ஐந்தாண்டுத் திட்டத்தைப் பொருளாதார அறிஞர் அலசினார் (செய்தி. வ.). அலசு பெ. வருத்தம். (செ.ப.அக .அனு.) அலசை பெ. காட்டுப்பிரண்டை. (மரஇன. தொ.) அலட்சியம் பெ. 1. ஈடுபாடின்மை. அலட்சியக் குற்றம் என்பார் (நாஞ். மரு.மான். 9, 347). ஆசிரி யர் சொல்லும்போது அலட்சியமாக இருந்துவிட் டான் (பே.வ.). 2. புறக்கணிப்பு, மதிப்புக் கொடாமை. நேற்று வந்தவனைப் பொருளாய் எண்ணிஎன்னை அலட்சியம் செய்தாயே (பிரதாப. ப. 142). கோசலா தேவியை அலட்சியப்படுத்தியிருக்கிறாய் (சித்பவா. இராமா.ப.50).

அலட்டி பெ. பிதற்றுக்காரன். (யாழ். அக. அனு.)

.

அலட்டுதல் 5வி. பிதற்றுதல். டாம் புலவரே (சாரப்பிர. 3).

அலட்டவேண்

அலட்டு-தல் 5 வி. தொல்லை கொடுத்தல். (செ. ப. அக.) அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயம் செய்யவேண்டும் (விவிவி. லூக்.

18, 5).

அலட்டு' பெ.

பயன் அற்ற சொற்களைப் பலபடக்

கூறுகை. (பே. வ.)

அலட்டு பெ. தொல்லை. ஒருவன் கூறும் வாக்கி யத்து அலட்டுக் கீதல் (மச்சபு. உத்தர.23,22).

அலட்டுச்சன்னி பெ. பிதற்றச் செய்யும் சன்னி நோய். (செ.ப. அக.)

அலட்டுச்சனி பெ. 1. வக்கரச்சனி. (முன்.) 2. பிதற்றித் தொல்லை கொடுப்போன். (ராட். அக.)

அலண்டு-தல் 5 வி. கலங்குதல். (நாட். வ.)

அலத்தகக்குழம்பு பெ. செம்பஞ்சுக் குழம்பு.

நலத்

தகைச் சிலம்படி நவில ஊட்டிய அலத்தகக் குழம்பு (சூளா. 47).

செம்

அலத்தகம் (அரத்தகம், அலத்தம்) பெ. 1. பஞ்சுக்குழம்பு. அலத்தகம் ஊட்டிய அம்செம்சீறடி (சிலப். 6,82). அம்மலர் அடியும் கையும் அணிகிளர்

407

அலந்தலை1

பவளவாயும்.... அலத்தகம் எழுதியிட்டாள் (சீவக. 2446). பவளப்பாதத்து அலத்தகம் எழுதி (கம்பரா. 5,2,109).காமர்சீறடி அலத்தகச் சுவடென அறி யக்காட்டினான் (சூளா. 1592). அலத்தகம் அணி யும் அம்செம்சீறடி (செ. பாகவத. 4, 1, 11). அடி யிடுந்தோறும் நின் அலத்தகக் சுவடுபட்டு (மீனா. பிள். 54). உகுத்த அலத்தகம் அலத்தகம் வழுக்குபொன்வீதி (கச்சி. காஞ்சி. இருபத், 34). 2. செம்பருத்தி. (பச்சிலை.

அக.)

அலத்தம் (அரத்தகம், அலத்தகம்) பெ. 1. செம் பஞ்சுக் குழம்பு. அலத்தம் மெல்லடிக் கமலினியா ருடன் அனிந்திதை (பெரியபு. 72, 50). 2. செம் பருத்தி. (வைத். விரி. அக. ப. 7) 3. சூரியகாந்தி.

(செ. ப. அக. அனு.)

அலத்தி பெ. மின்மினிப் பூச்சி. (சித். பரி. அக. ப. 156)

அலத்து பெ. உமரிப்பூடு. (மரஇன. தொ.)

அலத்தை பெ. செம்பஞ்சு. அலத்தை என்பது செம் பஞ்சாகும் (அக. நி. அம்முதல். 34).

அலதிகுலதி பெ. அலங்கோலம், குழப்பம். இரிந்தனர் அலதிகுலதியொடு ஏழ் கலிங்கரே (கலிங். 450).

அலது இ.சொ. (அல்லது → அலது) அல்லாமல், தவிர. நாணலது இல்லாக் கற்பின் வாணுதல் (புறநா. 196, 13). நின் அலதில்லா இவள் சிறு நுதலே (ஐங். 179). அவிர் சடையுடையர் அழகினையருளு வர் குழகலதறியார் (தேவா. 1, 78,2). பொன் அலது பொன்னை ஒப்பு (கம்பரா. 5, 14, 27). மற் றது முடித்தலது யான்வதுவை செய்யேன் (பெரிய பு. தடுத்தாட். 36). செம்மலை யலது உளம் சிந்தி யாதரோ (ஆனைக்காப்பு. கடவுள். 8).

பொன்னால்

அலது மிடி தவிராது (சங்கர. கோவை 93).

அலந்தம் பெ. கடுக்காய். (மரஇன.தொ.)

அலந்தல்' பெ. மயிலடிக் குருந்து மரம்.(செ.ப. அக.)

அலந்தல்' (அலந்தலி) பெ. செங்கத்தாரி மரம்.(வைத்.

விரி, அக. ப. 23)

அலந்தலி (அலந்தல்') பெ. செங்கத்தாரி மரம்.

(பச்சிலை. அக.)

அலந்தலை' பெ. (அலந்த + தலை)

(வறிதாகிய

தலை) இலை உதிர்ந்த உச்சி. அலந்தலை வேலத்து