உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலாயிதா2

அலாயிதா" பெ. வரையறை செய்த மொத்த வருமா னத்தில் நூறு கல நெல்லுக்கு ஒரு பணம் வீதம் செலுத்தும் வரி. (செ. ப. அக. அனு.)

அலாயுதம் பெ. (அலம்+ஆயுதம்) கலப்பைப் படை, அலாயுதங்கொடுமுன் மேருமால் வரையை ஐந்து விற்கிடையிழுத்திடும் கிலாதன் (கூர்மபு. பூருவ.16, 57). அலாயுதன் பெ. ( கலப்பையைப் படையாக உடைய) பலராமன். உரோணிபால் நிறமான அலாயுதன் முதலாம் பாலரைப் பயந்தனள் (செ.பாகவத.9,18, 45). அலாயுதன் பின்னாக அவதரித்த பூங்கோவல் ஆயன் (நூற்று. அந். 73). சங்கு வண்ண அலாயுதன் (அரங்க. பாரதம். பரிட்சித்து.33).

அலாரி பெ : அலரி. (சங். அக.)

அலாரிதா பெ. அலரி. (முன்.)

அலாரிப்பு பெ. (தாஅஅம் தித்தாஅம் க்ருதகதைஇ என ) நாட்டிய ஆரம்பத்தில் பாடும் சொற்கட்டு. பரதநாட்டிய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நிகழ்த்தப்படும் ஆடல்பகுதி அலாரிப்பு எனப்படும் (வாழ். களஞ்.1ப.834).

அலாருகம் பெ. களாச்செடி. (மரஇன.தொ.)

அலாவு (அலாபு) பெ. சுரை. (செ. ப. அக.)

400

அலி' (அல்லி) பெ. ஆண் பெண் அல்லாதது. பிறர் மனைமேற் சென்றாரே இம்மை அலியாகி யாடி யுண்பார் (நாலடி. 85). ஆணொடு பெண் அலி அல்ல ரானார் போலும் (தேவா. 6,75,5). ஆண் அல் லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் (திருவாய். 2,5,10). பெண்டிர் ஆண் அலி என்று அறியொண்கிலை (திருவாச. 5, 42). பெண்ணில் பேரெழில் ஆணினில் அலியினில் உலவான் (கம் பரா. 6, 13, 14). ஆடவராயினும் அலியராயினும் வாடிய நுண்ணிடை மகளிராயினும் (செ. பாகவத. 4, 4, 54). அலிமூவகைப்படும் (தொல். சொல். 4 தெய்வச்.). அலியாகி வேற்றுருவாய் நின்ற வகையறியேன் (பட்டினத்தார். அருட்பு. பூரண 56), பெண் ஆண் அலி எனவும் பேசாமல் (தாயுமா. 45, 9). குழந்தை ஆணுமல்லாமல் பெண்ணுமல்லாமல் அலியாய் இருந்தது (பிரதாப. ப. 46).

...

அலி2 பெ. இயமன். அலியே

இயமன் . அலியே... நமனும் ... ஐம்பேரே

(அக.நி.அம்முதல். 198).

அலி3 பெ. சோறு. அலியே சோறும் ஐம்பேரே

...

(முன்.).

16

அலியன்

அலி பெ. நறுவலிமரம். அலியே... நறுவலியுடனும், ...ஐம்பேரே (முன்.).

000

அலி" பெ. நெருப்பு. அலியே நெருப்பும் ஐம் பேரே (முன்.)

அலி' பெ. (கலப்பைப்படையை உடைய) பலராமன். அலிமுகம் தொழும் இளவல் (பாரதம். 7, 4, 41).

அலிக்கிரகம் பெ. (ஆண் பெண் பகுப்பில் சேராத) சனி, கேது, புதன் என்னும் கிரகங்கள். (சங். அக.)

அலிக்கை பெ. அலிச்செயல் காட்டும் அவிநயக்கை. ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என் னும் நான்கினையும் கூட்டி (சிலப். 3,18 அடியார்க்.)

அலிகம் பெ. நெற்றி. (சங். அக.)

அலிகை பெ. நாணல். (செ.ப.அக.)

அலிசி பெ. ஆளிவிதை. (முன்.)

அலிசிவிரை பெ. ஆளிவிதை. (சங். அக.)

அலிஞ்சி (அழிஞ்சி, அழிஞ்சில், அழிஞ்சு) அங்கோலம் என்னும் மரம். (மர இன. தொ.)

.

அலிநாள் பெ. (ஆண் பெண் பகுப்பற்ற) சீரிடம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள். (சங். அக.)

பெ.

மிருக

அலிப்பான் பெ. வெடியுப்பு. (பச்சிலை. அக.)

அலிப்பேடு பெ. அல்லியம் என்ற கூத்து வகை. அல்லி யம் என்பதனை அலிப்பேடு என்பாரும் உளர் (சிலப். 6, 48 அடியார்க்.).

அலிபகம்1 பெ. கருவண்டு. (த. த. அக.)

அலிபகம் 2 பெ.தேள். (முன்.)

அலிபகம்' பெ. நாய். (முன்.)

அலிபரணி

பெ. காஞ்சொறிக்கொடி. (மரஇன. தொ,)

அலிமகம் 1 பெ. இலுப்பைமரம். (முன் )

அலிமகம் 2 பெ. பெண்களைத் தாக்கும் ஒருவகைச் சோகை நோய். (செ. சொ. பேரக.)

அலிமரம் பெ. 1. வயிரம் இல்லாத மரம். (கதிரை. அக.) 2.பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம். (பச்சிலை. அக.)

அலியன் பெ. கடுக்காய். (முன்.)