உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவைக்களம்

மன்னரொடு முற்றவை நீங்கி (பெருங். 1, 34, 33). வேத்து அவை கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத் தார் (கம்பரா. 6,24,9). அவையுறு துறக்க நீங்கி யவனிமீது இழிந்தவாறே (திருவால. பு. 9, 5). 2. அறிவுடையோர் கூட்டம். பொற்பு விளங்கு புகழ்

அவை (மதுரைக். 778 புகழினையுடைய அறங்கூறவையத் தார் - நச்.). அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக (குறள். 711). திருந்து அவை முன்னர் வினை ஞரை விடுத்தான் (பெரியபு. 28, 779). ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் (ஆசாரக். 11), 3, சான்றோர். அவை இருந்த பெரும் பொதியில் (மதுரைக். 161 சான்றோர் இருந்த பெரிய அம்பலங்களிலே-நச்..4.புலவர். அவையே அறிஞர் புதரே புலவர் (திவா. 172). 5. ஒழுங்கமைப்புப் பெற்ற மக்கட்குழு, சபை. அவையும் கணமும் கூட்டமும் சபைப்பெயரே

...

721).

6.

(பிங்.

(நாடக) அரங்கு. கூத்தாட்டவைக் குழாத்தற்றே (குறள்.332). 7 கூட்டம். மந்தி நல் அவை மருள்வன நோக்க (அகநா. 52, 8). திரளையுஞ் சவையும் அவையும் கூட்டம் (பிங். 2235).

அவைக்களம் பெ. சான்றோர் முதலியோர் கூடியிருக் கும் இடம். வலம்புரி கோசர் அவைக்களத்தானும் (புறநா.283,6). அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் (சிலப். 30, 193-194). உக்கிரப் பெரு வழுதியார் அவைக்களம் (இறை. அக. 1 உரை). கதுமென அரசவைக் களத்துள் ஏகினார் (கந்தபு. 4,11, 159).நின் அவைக்களத்தே அமைச்சராக வலங்கொண்ட மன்னரொடு (பாரதி பாஞ்சாலி.215).

...

அவைசெய்-தல் 1 வி. (ஒரு பொருளைச்) சின்னபின்ன மாக்குதல். இரணியனது ஆகம் அவைசெய்து அரி யுருவம் ஆனான் (இயற். மூன்றாம் திருவந். 31).

அவைதிகம் பெ. (அ + வைதிகம்)

புறம்பானது.

(செ.ப.அக.)

வேதநெறிக்குப்

அவைநான்கு பெ. நல்லவை தீயவை குறையவை நிறையவை என்ற நால்வகை. (யாப். வி. 96 உரை)

அவைப்பரிசாரம் பெ. அவை வணக்கம். யாழ் மண் டபத்தே இருந்து அவைப்பரிசாரமாகப் பாடுகின் றமை கூறுகின்றார் (சீவக. 647 நச்.).

அவைப்பு பெ. இயற்கையானது. (சாம்ப. அக.)

அவைப்பு2 பெ. குற்றுதல். அவைப்பு மாணரிசி (சிறுபாண்.194).

அவைப்பு3 பெ. குற்றின அரிசி, தவசம்.

(செ. சொ.

பேரசு.)

44

15

அவையம்போடு-தல்

அவையக்கோழி பெ. அடைகாக்கும் கோழி.

(முன்.)

அவையங்கா-த்தல் 11வி. அடைகாத்தல். கோழி அவையங்காக்கிறது (வின்.).

அவையடக்கம் (அவையடக்கு) பெ. அவையோர் முன் பணிமொழி கூறுகை. சங்கத்தார் ஆராய்ந்தமை கூறவே அவையடக்கம் உணர்த்தியதாயிற்று (சீவக.

4 58.).

அவையடக்கு (அவையடக்கம்) பெ. அவையோர் முன் பணிமொழி கூறுகை. அவையடக்கு இயலே அரில் தபத் தெரியின் (தொல். பொ. 418 இளம்.).

எண்

அவையத்தார் பெ. நீதி வழங்கும் அவையோர். வகைக் குணத்தினைக் கருதி அவையத்தாரது நிலை மையாலும் (தொல். பொ. 76 நச்.). 2. கற்ற அவை யோர். (சங். அக.)

அவையதானம் பெ. அடைக்கலம் கொடுக்கை. அவைய தானம் ஈதலே கடப்பாடு (கம்பரா. 6, 4, 118 பா. பே.). அவர்களுக்கு அவையதானமும் குடுத்து (தெ. இ.க.24,370).

அவையம்1 பெ. 1. கற்றோர் கூட்டம். எட்டு வகை நுத லிய அவையத்தானும் (தொல். பொ. 75, 17 இளம். பா. பே.). வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற் றினன் (புறநா. 239, 10). நாநவில் அவையத்து (மலைபடு. 77). 2. நீதி வழங்கும் அவையோர். வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் (அகநா. 256,21). சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும் (மதுரைக். 492). 3. திருவோலக்கமண்டபம். முறையுடை அர செங்கோல் அவையத்து (குறுந். 276, 5). விளங் கவையத்து மின்னொளி மயக்கும் மேனியோடு தோன்ற (சிலப்.26,95-96). 4. மண்ட பம். கலைத்தொழில் அவையம் கைதொழப் புக்கு (பெருங்.1,37,158). வாய்மை இகழ்ந்துளான் அவை யத்தை முன் ஈறு செய்து (கந்தபு. 3, 13, 21).

சன்

அரசு

அவையம்' பெ. அடைக்கலம், அபயம். அவையம் நினைந்து வந்த சுரர் (இயற். பெரியதிருவந். 43).

என

அவையம்' பெ. பெ. அடைகாத்தல். கோழி அவையத்தில் இருக்கிறது (செ.சொ. பேரக.).

அவையம் + பெ. இரைச்சல். (மதுரை. அக.)

அவையம்' பெ. இலாமிச்சை. (செ. ப . அக. அனு.)

அவையம்போடு-தல் 6 வி. சத்தமிடுதல். (திருநெல். வ.)