உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88 என்று எண்ணினாலே வெட்டிவேர் விசிறி கொண்டு வீசிட ஏழெட்டுபேர் எப்போதும் தயாராக இருந்தனர் அவருக்கு- கொட்டிடும் வியர்வையைத் துடைக்கவும் கூச்சப்பட்டுக் கொண்டு, கொடி பிடித்து ஊர்வலத்தில் நடந்தார் குமார ராஜா? நாம், குமாரராஜாவுடன் கூட்டுறவு வைத்துக் கொண்டதால், அவருக்கு ஏற்றபடி கொள்கையைக் குறுக்கிக் கொள்ளவில்லை, கொள்கையின் குணமும் மணமும் வளர்ந் தது - வளருகிறது-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது, அவர் அந்தப் பக்கம் திரும்பினார், அங்கு அழைப்புக் கிடைத்தது. சென்றார், வென்றார்; வென்றார் என்றால் உண்மைக் காங் கிரசைக் கொன்றார் என்று பொருள் - நாமோ, இருந்தார், சென்றார் ; நாம் இலட்சியபுரி நோக்கி நடைபோடுவோம், என்று தொடர்ந்து நமது பணியினை ஆற்றி வருகிறோம் காங்கிரஸ் நண்பர்களுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக் கும்! இவை தெரியாதது போல இருக்கிறார்கள்-ஆனால்நமது கழகம் மக்கள் மன்றமாகி விட்டதையும், காங்கிரஸ் சிங்காரச் சீமான்களின் மாளிகையாகி விட்டதையும் அவர்கள் அறியா மலில்லை - அறிந்தோர் மனதிலே ஆயாசம் எழாமலில்லை! வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள் - அதுவும் கொஞ்ச காலம் வரையில் தான்! தம்பி! சென்ற கிழமை, காங்கிரசின் உண்மை உழைப் பாளியின் உள்ளன்பைப் பெற்று உயர்இடத்தில் அமர்ந்துள்ள காமராஜரின் திருவுருவப்படத்தை, மத்திய சர்க்கார் மந்திரி டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் திறந்து வைத்து, பாராட்டுரை வழங்கியிருக்கிறார், என்றோர் செய்தி வந்தது, பார்த்திருப் பாய். யார், இந்த, டி.டி.கி.? காமராஜர் வனவாசம் செய்த போது உடன் இருந்தவரா? இல்லை! இல்லை! அப்போது சுக வாசம் செய்து கொண்டிருந்தவர்! சிறையில் தோழரோ? இல்லை! உப்புச் சத்தியாக்கிரகத்துக்குத் திட்டம் தீட்டிய தீரரோ? கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்ட கர்ம வீரரோ! அன்னியச் சாமான்களை பகிஷ்கரித்த ஆற்றல்மிக்க தேசபக்தரோ? இல்லை,தம்பி,இல்லை. சோப்புச் சீமான்; சொகுசான வாழ்க்கை நடத்தி வந்தவர், அன்னிய நாட்டு லக்சும், வினோலியாவும் அவருடைய கதர், கைராட்டை.காங் கிரசைத் தேர்தலிலே எதிர்த்து முறியடித்து, ஒரு முறை சென்னை சட்டசபையில் எதிர்க்கட்சியிலும் வீற்றிருந்தார். ஆகஸ்டுப் புரட்சி, செப்டம்பர் சத்யாக்கிரகம், எதிலும் அவர் ஈடுபட்டதில்லை.ஆனால் இன்று, அவர் மத்திய சர்க்கார் மந்திரி யானார்! அவர் திருக்கரம் பட்டால் மதிப்பு, அவருடைய திரு வாயால் புகழுரை சொரிந்தால் பெருமை என்று கருதும்