உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89 வகையில் அவரைக்கொண்டு காமராஜரின் திருவுருவப்படத் தைத் திறக்கச் செய்தனர். அந்த நேரத்தில், அந்நாள் இந் நாள் நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் உள்ளம் கொண்ட உண்மைக் காங்கிஸ்காரர் வெட்கமும் வேதனையும் அடையாம மாட்டார் லிருக்க முடியுமா? வெளியே காட்டிக் கொள்ள கள் - உள்ளத்திலே வேதனை அரித்தபடிதான் இருக்கும். அவர் களெல்லாம், ஒரு கொள்கை புனிதமானது, திட்டம் தேவை யானது, என்று உணரும் வரையில்தான் நம்மீது காய்வர், பாய்வர். ஆனால் நாம் எடுத்துரைக்கும் கொள்கை நியாய மானது, திட்டம் தேவையானது என்று உணர்ந்து விட்டால், நிச்சயமாக, நம்மைப்பின்னணியில் தள்ளிவிட்டு, முன்னணி யில் நின்று, வீரப்போர் புரியக்கூடியவர்கள்-இதை அவர்களி டம் பேச நேரிடும் போதெல்லாம் மட்டுமல்ல, நம்மைப் புரிந்து கொள்ளாததால் அவர்கள் நம்மை ஏசும் போதெல்லாம்கூட நினைவிலே வைத்துக் கொண்டிருக்க வேண்டும். மேடை தவறாமல் நம்மை நிந்தித்துத்தான் வருகிறார்கள் -ஐந்தாண்டு திட்டத்தை நாம் கண்டிப்பது அக்ரமம் என்று பேசத்தான் செய்கிறார்கள்.ஆனால் குற்றாலத்திலேகூடி என்ன தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனித் தாயா, தம்பி. தென்னாட்டிலே சில பெரிய கனரகத் தொழிற் சாலைகளையாவது அமைத்தாக வேண்டும் என்று, வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்கள். "இப்படியாவது ஒரு தீர்மானம் போடாவிட்டால் மக்களின் மனம் எரிமலையாகும்.> "வடநாட்டாருக்கு, நாமும் விழித்துக் கொண்டி ருக்கிறோம் என்பதைக் காட்டியாக வேண்டும்." “குட்டக் குட்ட குனிந்து கிடப்பது, அறிவுடைமை யுமல்ல, ஆண்மையுமாகாது.3 "முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில்தான் துரோகம் செய்தனர்- ஏமாற்றப்பட்டோம்-இரண்டாவது திட்டத்தி லாவது நியாயம் கிடைக்கவேண்டும்" "கழகக்காரர்கள் மானம்போகிற மாதிரிப் பேசுகிறார் கள் - அவர்கள் சொல்வதும் உண்மையாகத்தான் இருக் கிறது. வடநாடு, நம்மைக் கேவலமாகத்தான் நடத்து கிறது" "கழகம் கிடக்கட்டும், சுதேசமித்திரன் கார்ட்டூ னுக்கு என்ன சொல்கிறீர்கள்? "அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்; தூங்குபவன் துடையில் கயிறு திரிக்கத்தான் செய்வார் கள்3 இதுபோலவும், இதைவிடக் கடுமையாகவும் பேசினவர் கள், எத்துணை பேரோ, யார் கண்டார்கள்.