உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

125 ஆனால், அவர் விரும்புகிற கொள்கைக்காக இருந்து பணி யாற்றும் இயக்கம் இருக்கிறதே, தம்பி, திராவிட இயக்கம், அது விரோதப் பெருவெள்ளத்தால் மெத்தப் பாதிக்கப்பட்டு விடும். எனவேதான், கோழை என்றோ காட்டிக்கொடுப்பவன் என்றோ, வஞ்சகன் என்றோ, பிஞ்சு சொத்தை என்றோ, எதைச் சொல்லி என்னை ஏசினாலும் பரவாயில்லை, இயக்கத் துக்கு மட்டும், அதிர்ச்சி தராமலிருந்தால் போதும் என்று கரு தினேன். பெரியாருக்கு உள்ள அஞ்சாமையும், எதிர்நீச்சுத் தன் மையும். எத்தகைய நிலைமையையும் சமாளிக்கும் திறமையும், எவருடைய விரோதம். குரோதம், பகையாயினும்சரி, எத்த கைய பூசலாயினும் சரி, இவைகளைத் துச்சமெனக் கருதிடும் நெஞ்சழுத்தமும், இயக்கத்தில் நிரம்பி, ததும்பி இருக்கிறது என்று நான் நம்பவில்லை. பெரியாருக்கும் அந்த நம்பிக்கை இல்லாததால்தான், அடிக்கடி அவர் இப்படிப்பட்ட சமயத் தில் என்னையே நம்பி இதிலே ஈடுபடுகிறேன் என்று வெளிப் படையாகவே எடுத்துக் கூறி இருக்கிறார். நாம் மேற்கொண்டுள்ள நாட்டு விடுதலை வெற்றிபெறுவ தற்கு, இத்தகைய ஒப்பற்ற ஒரு தலைவரின் உள்ளத் திண்மை மட்டும் போதாது,மேலும் மேலும் வலுவு பெற்ற வண்ணம் ஒரு கட்டுப்பாடான இயக்கம் வளர்ந்தாக வேண்டும். அந்த வளர்ச்சியை ஆகஸ்ட்டுக்கெடுத்துவிட்டிருக்கும் - என்பதனால் தான், நான், அதை விரும்பவில்லை பெரியார், எப்படிப்பட்ட 'வெறுப்பைக் காங்கிரஸ் வட் டாரம் வெளிப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்-- இயக்கம் தாங்கிக் கொள்ள முடியாது- இது, தம்பி, அங்கு உள்ள சிவருக்குப் பிடிக்கவில்லை - நான் இதைக்கூறும்போது பெரியாருக்கு நான் ஏதோ ஊறு தேடுவதாகக் கருதுகிறார்கள். அவர்பால் கொண்ட அன்பைக காட்டிக்கொள்வதற்கு, எளி தான, சுவையுள்ள வழி உன்னையும்என்னையும் ஏசுவதுதான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பெரியாருடைய திறமையையும் அவர்பெற் றுள்ள செல்வாக்கையும் இமமி அளவும் நான் குறைத்து மதிப்பிடாததால்தான். அவர் தன் நிலைக்குத் தகுந்த திட்டம் தீட்டும்போது, அது முறையல்ல, இயக்கத்தின் இன்றைய நிலைமைக்குத் தக்கபடியான தும், அதன் எதிர்கால வளர்ச்சி யைப் பாதிக்காத முறையிலும் திட்டம் வேண்டும் என்று சேட்கிறேன்- ஓஹோ! நீ யார் கேட்க, என்பார்கள்! வியை மாகத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களையும் பெரியாருக்குச் சமமானவராகவும், (உள்ளுா,. அதைவிட உயர்ந்த திறமையுள்ளவராகவும்) அவருக்கு .