உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

கடிதம்: 14. ஆலையில்லா ஊரில் .. போராட்டங்களைப்பற்றி அண்ணா - இந்திப் போராட்டம்-- பெரியாரிடம் தி.மு.க. பற்றிய தவறான செய்திகள். தம்பி, நீ மிகவும் பொல்லாதவன்? ஒரு பெரிய "போராட்டம் உருவாகிக்கொண்டிருக்கும்போது சும்மா இருந்தாய்-சரி, ஒரு சமயம் திகைப்பினால் அவ்விதம் இருக்கிறாய் என்று எண் ணிக்கொள்வோம்--போராட்டம் முடிந்து, அதன் பலா பலன்' பற்றிய கணக்குப் பார்க்கும் இந்தக் கட்டத்திலாவது, உன் கருத்துரையைக் கூறுவாய் என்று எண்ணினேன்- நீயோ அப்படி ஒரு போராட்டம் நடந்ததாகவே கவனிக்க மறுக்கிறாய் - மிகப் பொல்லாதவன்!! உனக்குத் தெரியுமா? நாம் அந்தப் போராட்டத்திலே கலந்துகொள்ளாததால், நம்மைக் ‘கோழைகள்' என்று ஏசுகிறார்கள்!! என்னடா தம்பி, சிரிக்கிறாய். இது என்ன புதிதா! கோழைகள் என்ற வார்த்தைகளைவிட மிகமிகக்கேவலமான, நஞ்சுகலந்த நிந்தனைகளை எல்லாம் கேட்டிருக்கிறோமே, இது எம்மாத்திரம், என்கிறாய் போலும். உண்மைதான், நமது கழகத் தோழர்கள் பக்குவப்பட்டு விட்டார்கள்!! சிறுசொல் கேட்டுச்சீறும் கட்டம், கண்டனம் கேட்டுக் குமுறும் கட்டம், போய்விட்டது. நாம் பதில் கூறவேண்டியது நமது நெஞ்சுக்குத்தான், நம்மை வஞ்சகர் என்று கூறிடும் போக்கினருக்கு அல்ல! உடலில் காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய, நாம் நமது உடலைத்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அடுப்படியைத் தொட்டுப் பார்த்துமல்ல, ஜஸ் கட்டி யைத் தொட்டுப் பார்த்துமல்ல. கோழைகள்!! நாம்!! தடியுடன் உள்ள போலீஸ்காரர்கள் சிரிப்பார்கள்! சிறை அதிகாரிகள் சிரிப்பார்கள்!