உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

148 கும்! என் உடல் சிவந்து விடுகிறது - தம்பி சம்பத் பொன் குன்றாக இருக்கிறான்!! எல்லோரும் குளிக்கிறார்கள்! களிப்புடன் விடுதி செல் கிறார்கள்! மீண்டும் வந்து குளிக்கிறார்கள்! மீண்டும் மகிழ்ந்து விடுதி செல்கிறார்கள்!1 மீண்டும் குளிக்கிறார்கள்i! ஐந்தருவி எனும் இடத்தில் அதிகக் கூட்டம் இராது என்ற னர் - ஆனால் அங்கும் பெரிய கூட்டம் குவிந்து விட்டது- சாரல் முடிகிற நேரமாம். எனவே சந்தர்ப்பத்தை இழந்துவிட மனமில்லாதவர்கள், ஒவ்வொரு நாளும், பல்வேறு இடங் களிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர்! சேல் குதிக்கும் மலர்ச் சோலை! தேன் குதிக்கும் நான்கு திக்கும் ! - என்று கூறப்பட்டிருப்பது, மொழியின் அழகுக்கு மட்டுமல்ல, இடத்தின் எழிலுக்கு முற்றிலும் பொருத்தந் தான்! எரிமலை இல்லை, நீர்வீழ்ச்சி உண்டு! பாலைவனம் இல்லை, சோலைவனம் எங்கும்!!-திருவிடம் இப்படியல்லவா இருக்கிறது, சொக்க வைக்கிறது காண்போரை. அதன் நிலையை எண்ணிடும்போதோ நெஞ்சு நோகிறது. தம்பி, இங்கு உட்கார்ந்துகொண்டு, எழிலைப் பருகி, இன் புற்று இருக்கும்போதுதான், ஏடா! மூடா! இதுதானா திரா விடம்? இதோ பார், உன் திராவிடம்! என்று இடித்துக் கூறு வதுபோல, நாளிதழ்கள் காட்டுகின்றன. முதலமைச்சர் காமராஜரும், நிதி அமைச்சர் சுப்பிரமணியனாரும், டில்லி சென்று, 400 கேட்டு 200 பெற்று, திரும்பிய சோகக் காதையை!1 கொற்றம் நம்மிடமில்லாததால், நமக்கு இழைக்கப்படும் கொடுமை இங்ஙனம் உளதன்றோ, என்று எண்ணிடும்போது, குற்றாலத்துக் குளிர்ச்சியும், உள்ளத்து வெப்பத்தைப் போக் கிட இயலாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. "என்னைக் குறை சொல்லாதே மகனே, நான் உனக்கு எல்லாம் அளித்திருக்கிறேன். இதோ பார், என் அன்புப் பெருக்கு என்று தாயகம் கூறுவதும் தெரிகிறது - அருவி வடிவில். சேதியோ, செந்தேளாகிறது. வண்டாடு மலர்க் கூந்தல் வாராடுங் களப முலை கண்டாடு மாதர் இதழ், கனியாடு மதுரமொழி விண்டாடும் கிளிப்பிள்ளை வியந்தாடும் மடப்பூவை கொண்டாடும் குயிற்பேடை கூத்தாடும் பசுந்தோகை. குற்றாலம்,தம்பி, குற்றாலம்! இங்கு அருவி அழகு! ஆனால் திருவிடத்தின் பொலிவு இஃதொன்றேதானா? அதோகாவேரி! இதோ தாமிரபணி! வைகைக்குத்தான் என்ன! இந்த ஆற்றோரங்களிலே வளர்ந்த பண்பாடு எத்தகையது! இதோ